Budget 2023: சம்பளம் பெறும் ஊழியர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கும் பட்ஜெட் தொடர்பாக ஊதியதாரர்களின் எதிர்பார்ப்புகல் இன்னும் சில நாட்களில் முடிவுக்கு வந்துவிடும். நாட்டுன் வரி வருமானத்தில் கணிசமான பங்களிக்கும் நடுத்தர வர்கத்தினர்களின் எதிர்பார்ப்புகளில் ஒன்று வருமான வரி விதிகளில் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள சில திருத்தங்களை அரசாங்கம் அறிவிக்கும் என்பதே. அதற்கு சிறந்த வாய்ப்பு இந்த பட்ஜெட்டாக இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்ற மக்களவையில் பட்ஜெட் தாக்கல் செய்ய இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகளைக் கருத்தில் கொண்டு சம்பளம் பெறும் ஊழியர்கள், சில பெரிய வரி நிவாரண அறிவிப்புகளை எதிர்பார்க்கின்றனர். பட்ஜெட் 2023 இன் விவரங்கள் பிப்ரவரி 1 ஆம் தேதி வெளிப்படையாக தெரிந்துவிடும் என்றாலும், இந்த ஐந்து முக்கியமான விஷயங்கள் மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
HRA விதிகள்
வீட்டு வாடகை கொடுப்பனவை (HRA) கணக்கிடுவதற்கு மெட்ரோ நகரங்களின் வரையறையை திருத்த வேண்டிய அவசியம் உள்ளது. பெங்களூரு போன்ற நகரங்களில் வாடகை மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ள நிலையில், எச்.ஆர்.ஏ விலக்குக்கான மெட்ரோ நகரங்கள் பட்டியலிலும் திருத்தம் செய்ய வேண்டியது அவசியமாகிறது.
பெங்களூரு இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு என்பது எந்த அளவு உண்மையோ, அதே அளவு உண்மை, ஐடி மற்றும் தொழில்நுட்பத்தால் இயங்கும் துறைகளில் கிட்டத்தட்ட 1.5 மில்லியன் ஊழியர்கள் அங்கு இருந்து பணிபுரிகின்றனர் என்பதும் என்பது புரிந்துக் கொள்ளக்கூடியது. ஐடி ஊழியர்களின் சம்பளம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது, அதே வேகத்தில் வீட்டு வாடகையும் ஏறுகிறது.
இந்த நிலையில், டெல்லி, கொல்கத்தா, சென்னை மற்றும் மும்பை ஆகியவை மட்டுமே ஹெச்ஆர்ஏ விலக்குக்கான மெட்ரோ நகரங்களாகக் கருதப்படுகின்றன. ஹைதராபாத், பெங்களூர் மற்றும் பூனேவில் உள்ள ஊழியர்களும் இந்த சலுகைகளுக்கு தகுதியுடையவர்களாக ஆக்கப்படவேண்டியது அவசியம் என்று மகக்ள் எதிர்பார்க்கின்றனர்.
மேலும் படிக்க | Budget 2023: அல்வா கிளறிய நிதியமைச்சர்! பட்ஜெட்டுக்கு முன் அல்வா கிளறப்படுவது ஏன்!
போனஸ் தொகைக்கான வரிவிதிப்பு
பணியாளர்கள் பெறும் போனஸில் சேருவதற்கான வரிவிதிப்பு விதியை திருத்த வேண்டிய அவசியம் உள்ளது. போனஸைப் பெற்ற பிறகு நிறுவனத்தை விட்டு வெளியேறும் நபர்கள், முன்னரே ஓப்புக்கொள்ளப்பட்ட நேரத்திற்கு முன்பே வெளியேறினால், தொகையைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்ற விதிகள் உண்டு. பொதுவாக, ஊழியர்களுக்கு, அவர்கள் வருமான வரிக்கு நிகரான தொகையைப் பெறுகிறார்கள். இருப்பினும், ஒப்புக்கொள்ளப்பட்ட நேரத்திற்கு முன்பே அவர்கள் வெளியேறினால், போனஸ் பணத்தை முழுவதுமாக திருப்பிச் செலுத்த வேண்டும். எனவே, போனஸ் தொகைக்கான வரிவிதிப்பில் மாற்றம் தேவை.
வருமான வரி அடுக்கு திருத்தம்
தற்போதைய பொருளாதார சூழ்நிலையின்படி வரி அடுக்குகளும் புதுப்பிக்கப்பட வேண்டும். ஏனென்றால், தற்போது, புதிதாக வேலையில் சேர்வர்களுக்கும் நல்ல சம்பளம் கொடுக்கப்படும் நிலையில், வரிகளும், அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவும் அவர்களின் செலவழிப்பு வருமானத்தையும் சேமிப்பையும் குறைக்கும். எனவே, இந்த பட்ஜெட்டில் வருமான வரி அடுக்கில் திருத்தங்கள் அவசியமாக செய்யப்படும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
வருமான வரி விலக்கு
80C மற்றும் 80D பிரிவுகளின் கீழ் பல்வேறு விலக்கு வரம்புகளை திருத்த வேண்டிய அவசியம் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். பல ஆண்டுகளாக 80சி என்ற வருமான வரி விலக்கில் எந்த மாற்றமும் இல்லை. தற்போதைய வரம்பு ரூ.1.5 லட்சமாக 2014-ஆம் ஆண்டு நிதிச் சட்டம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த வரம்பை ரூ.2.5 லட்சமாக உயர்த்துவது மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
மருத்துவக் காப்பீடு
மருத்துவக் காப்பீட்டிற்கு, பிரிவு 80டி விலக்கு வரம்பை அதிகரிக்க வேண்டிய தேவையும் உள்ளது. இது, 25,000 ரூபாயில் இருந்து 50,000 ரூபாயாக மாற்றியமைக்கப்பட வேண்டும் கொரோனா தொற்றுநோய்க்குப் பிறகு, காப்பீட்டு நிறுவனங்கள் அதே கவரேஜுக்கான பிரீமியம் தொகையை அதிகரித்துள்ளன. எனவே, காப்பீட்டிற்கான விலக்கை, முதியோர்களுக்கு தற்போதுள்ள ரூ.50,000ல் இருந்து ரூ.75,000 ஆக உயர்த்தப்பட வேண்டும், என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஓய்வூதியம், உடல்நலப் பாதுகாப்பு, மகப்பேறு நலன்கள், வரிகளில் தளர்வுகள், கடன்களுக்கு கூடுதல் சலுகைகள் மற்றும் நிலையான வருமான வரி விலக்கு அதிகரிப்பு என பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் மக்கள் இந்த ஆண்டு மத்திய அரசின் பட்ஜெட்டை எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ