சினிமாவில் நல்ல நண்பர்களாக இருந்து வந்த தனுஷ் மற்றும் நயன்தாரா இடையே தற்போது புதிய பிரச்சனை கிளம்பியுள்ளது. தனுஷுக்கு எதிராக நயன்தாரா 3 பக்கத்திற்கு கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் நயன்தாராவின் திருமணத்தை பற்றி உருவான ‘Nayanthara: Beyond the Fairy Tale’ என்ற ஆவணப்படத்தில் நானும் ரவுடி தான் படத்தில் இடம்பெற்ற பாடல்களை பயன்படுத்த தனுஷ் NOC தரவில்லை என்றும், 3 SEC காட்சிகளை பயன்படுத்தியதற்காக பத்து கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு தனுஷ் நோட்டீஸ் அனுப்பி உள்ளார் என்று நயன்தாரா தெரிவித்துள்ளார்.
இதனால் வருத்தம் அடைந்த நயன்தாரா தற்போது தனுஷ்க்கு எதிராக வெளிப்படையாக தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். இதற்கு மலையாள நடிகை பார்வதி, ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர்.
தனுஷ் தயாரிப்பில் உருவான எதிர்நீச்சல் படத்தில் ஒரு பாடலுக்கு நயன்தாரா இலவசமாக நடனமாடி கொடுத்திருந்தார் என்று அந்த சமயத்தில் கூறப்பட்டது. இருப்பினும் தற்போது இவர்கள் இடையே ஏற்பட்ட பிரச்சனைக்கு என்ன காரணம் என்று ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடித்த நானும் ரவுடிதான் படத்தை தனுஷ் தயாரித்திருந்தார். இந்த படத்திற்கு முதலில் ஆறு கோடி என்று பட்ஜெட் ஃபிக்ஸ் செய்யப்பட்டு படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. ஆனால் முழு படப்பிடிப்பு முடியும் போது 15 கோடியை தாண்டியதாக சொல்லப்படுகிறது.
படம் மிகப்பெரிய வெற்றி பெற்றிருந்தாலும் வணிக ரீதியாக தனுஷ்க்கு இதனால் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கூட நயன்தாராவிற்கு தனுஷ் NOC வழங்காமல் இருந்திருக்கலாம் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் நயன்தாராவின் இந்த அறிக்கைக்கு தனுஷ் நிச்சயம் பதிலடி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.