ஆதார் பற்றிய சந்தேகங்களா? அனைத்துக்கும் இங்கே விடை கிடைக்கும்: UIDAI அளித்த புதிய வசதி

ஆதார் அட்டை தொடர்பான அனைத்து பிரச்சினைகளையும் நீக்க நான்கு மாநிலங்களில் UIDAI ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஒரு பேஸ்புக் பக்கத்தைத் தொடங்கியுள்ளது. அதில் ஒரு செய்தியை அனுப்பி ஆதார் தொடர்பான உங்கள் கேள்விகளுக்கான பதில்களைப் பெறலாம். UIDAI ட்வீட் மூலம் இது குறித்த தகவல்களை வழங்கியுள்ளது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 22, 2021, 03:40 PM IST
  • ஆதார் அட்டை தொடர்பான அனைத்து பிரச்சினைகளையும் நீக்க UIDAI ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
    ஆதார் அட்டையின் பேஸ்புக் பக்கம் நான்கு மாநிலங்களில் தொடங்கியது.
    இந்த பேஸ்புக் பக்கத்தில் பயனர்களின் அனைத்து கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும்.
ஆதார் பற்றிய சந்தேகங்களா? அனைத்துக்கும் இங்கே விடை கிடைக்கும்: UIDAI அளித்த புதிய வசதி title=

இந்தியாவில், ஆதார் என்பது சாமானியர்களின் அடையாளமாகவும் அவசியமான தேவையாகவும் விளங்குகிறது. இது உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து உங்கள் பான் வரை அனைத்து இடங்களிலும் தேவைப்படுகிறது. பாதுகாப்பு மற்றும் பிற காரணங்களுக்காக இதில் பல சமயம் பல மாற்றங்களும் தேவைப்படுகின்றன. UIDAI, அதாவது இந்திய தனித்துவ அடையாள ஆணையம் மக்களுக்கு பல வசதிகளை வழங்கி வருகிறது. இதனால் அனைத்து மாற்றங்களையும் எளிதாக செய்ய முடியும். இந்த பயிற்சியின் கீழ், UIDAI மற்றொரு அற்புதமான வசதியைத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் நீங்கள் ஆதார் அட்டை தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும் வீட்டிலிருந்தபடியே எளிதாக பதில்களைப் பெற முடியும்.

ஆதார் அட்டையின் பேஸ்புக் பக்கம் நான்கு மாநிலங்களில் தொடங்கியது

ஆதார் அட்டை (Aadhaar Card) வைத்திருப்பவர்களின் வசதிக்காக, டெல்லி, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் உத்தரகண்ட் ஆகிய நான்கு மாநிலங்களில் UIDAI பேஸ்புக் பக்கத்தைத் தொடங்கியுள்ளது.  இந்தப் பக்கத்தைப் பார்வையிட்டு, ஆதார் அட்டை தொடர்பான கேள்விகளுக்கான பதில்களைப் பெற பயனர்கள் செய்தி அனுப்பலாம். இந்த பேஸ்புக் பக்கத்தின் பிராந்திய அலுவலகம் டெல்லியாகவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக, UIDAI தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கிலிருந்தும் தகவல்களை வழங்கியுள்ளது. 

ALSO READ: ஏப்ரல் 1 முதல் அமல்படுத்தப்படவுள்ள 5 வருமான வரி விதிகளின் விவரம் இதோ

UIDAI அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்கும்.

UIDAI இன் பேஸ்புக் பக்கத்திற்குச் செல்ல, https://facebook.com/Aadhaar-RO-Delhi-103164305146104 ஐக் கிளிக் செய்ய வேண்டும். அதாவது, ஆதார் தொடர்பான எந்த தகவலை பெற விரும்பினாலோ, அல்லது அது தொடர்பான எந்தவொரு கேள்விக்கும் பதில் தேவைப்பட்டாலோ, மொபைல் எண், ஓடிபி அல்லது ஆதார் அட்டையில் உள்ள வேறு எந்த தகவல்களை பெற விரும்பினாலோ, நீங்கள் இந்த பேஸ்புக் பக்கத்திற்கு செல்லலாம். ஒவ்வொரு கேள்விக்கும் UIDAI பதிலளிக்கும். இதற்கு முன்னர் இந்த பேஸ்புக் பக்கம் சண்டிகர், பஞ்சாப், ஜம்மு-காஷ்மீர், ஹரியானா, லடாக் மற்றும் இமாச்சலப் பிரதேசத்திலும் தொடங்கப்பட்டுள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

ALSO READ: LIC IPO அனைவருக்கும் ஒரு வரப்பிரசாதமாய் அமையும், முதலீட்டாளர்களுக்கு லாபம் கிடைக்கும்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News