கனக துர்க்கைக்கு வைர மூக்குத்தி காணிக்கை செலுத்திய தெலுங்கானா முதல்வர்!

தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் விஜயவாடாவில் உள்ள பிரசித்து பெற்ற கனக துர்க்கை அம்மனுக்கு நேர்த்தி கடனாக ரூ.1.37 கோடி மதிப்புள்ள வைர மூக்குத்தியை காணிக்கையாக வழங்கி உள்ளார்.

Last Updated : Jun 29, 2018, 11:58 AM IST
கனக துர்க்கைக்கு வைர மூக்குத்தி காணிக்கை செலுத்திய தெலுங்கானா முதல்வர்! title=

தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் விஜயவாடாவில் உள்ள பிரசித்து பெற்ற கனக துர்க்கை அம்மனுக்கு நேர்த்தி கடனாக ரூ.1.37 கோடி மதிப்புள்ள வைர மூக்குத்தியை காணிக்கையாக வழங்கி உள்ளார்.

தனி தெலங்கானா மாநிலம் அமைந்தால், பல்வேறு கோயில்களுக்கு தனது குடும்பத்துடன் நேரில் வந்து நேர்த்திக் கடன் செலுத்துவதாக தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சித் தலைவர் சந்திரசேகர ராவ் வேண்டியிருந்தார்.

இந்நிலையில் நேர்த்தி கடனை பூர்த்தி செய்ய தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் கனக துர்க்கை அம்மனுக்கு ரூ.1.37 கோடி மதிப்புள்ள வைர மூக்குத்தியை காணிக்கையாக வழங்கி உள்ளார். 11.290 கிராம் எடை கொண்ட இந்த வைர மூக்குத்தியில் 57 வைரக்கற்கள், நீலம், கெம்பு போன்ற விலை மதிப்புள்ள கற்கள் பதிக்கப்பட்டுள்ளன.

முன்னதாக திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.5.5 கோடி மதிப்பில் சாலிக்கிராம ஹாரத்தை சந்திரசேகர ராவ் கடந்த ஆண்டு காணிக்கையாக வழங்கினார். மேலும், திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கும் வைர மூக்குத்தியை அவர் காணிக்கையாக வழங்கினார். இதுதவிர, வாரங்கல் பத்ரகாளி அம்மனுக்கு தங்க கிரீடம், குருவி பகுதியில் உள்ள வீரபத்ர சுவாமிக்கு தங்க மீசை போன்றவற்றையும் அவர் காணிக்கையாக வழங்கி தனது நேர்த்தி கடனை நிறைவேற்றினார்.

Trending News