ஃபிளிப்கார்ட்டில் மொபைல்களுக்கு அதிரடி ஆபர்! வாய்ப்பை நழுவவிடாதீர்கள்!

ஃபிளிப்கார்ட் தனது பிக் சேவிங் டேஸ் விற்பனையுடன் மீண்டும் அசத்தலான விலைகளில் ஸ்மார்ட்போன்களுக்கான டீல்களை வழங்கியுள்ளது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 10, 2022, 12:26 PM IST
  • சிறந்த ஸ்மார்ட்போன்களுக்கான டீல்களை வழங்குகிறது ஃபிளிப்கார்.
  • மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ ஸ்மார்ட்போனை தள்ளுபடி விலையின் கிடைக்கிறது.
ஃபிளிப்கார்ட்டில் மொபைல்களுக்கு அதிரடி ஆபர்! வாய்ப்பை நழுவவிடாதீர்கள்! title=

ஃபிளிப்கார்ட் ஆனது பிக் சேவிங் டேஸ் விற்பனை மூலம் குறைந்த விலையில், சிறந்த ஸ்மார்ட்போன்களுக்கான டீல்களை வழங்குகிறது.  இந்த பிக் சேவிங் டேஸ் விற்பனையானது மார்ச் 12 முதல் மார்ச் 17 வரை நடக்கும்.  ஃபிளிப்கார்ட் ப்ளஸ் உறுப்பினர்கள் மார்ச் 11ம் தேதி முதலே இந்த விற்பனையில் பங்குபெறலாம்.  மோட்டோரோலா பட்ஜெட் விலையில் சிறந்த ஸ்மார்ட்போன்களை அதிக தள்ளுபடி விலையில் வழங்குகிறது.  லெனோவா அதன் ஸ்மார்ட்போன்களுக்கு பிளாட் தள்ளுபடிகள் மற்றும் வங்கி சலுகைகளை வழங்குகிறது.

மேலும் படிக்க | பச்சை நிறத்தில் புதிய ஐபோன்! என்ன ஸ்பெஷல் இதில்?

ரூ.36,999க்கு விரிக்கப்படும் மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ ஸ்மார்ட்போனை தள்ளுபடி விலையின் மூலம் ரூ.32,999க்கு வாங்கலாம்.  மேலும் வங்கிச் சலுகையை பயன்படுத்துவதன் மூலம், இதனை ரூ.32,249க்கு வாங்கமுடியும்.  இந்த வகை போன்கள் 6.7 இன்ச் அமோல்ட் டிஸ்ப்ளே மற்றும் 144Hz ஹை ரெஃப்ரெஷ் வீதத்தைக் கொண்டுள்ளது.  8ஜிபி ரேம் உடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 செயலி மூலம் இயக்கப்படுகிறது.  இந்த மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ பின்புறத்தில் 108 மெகாபிக்சல் கேமராவுடன் வருகிறது.

அடுத்ததாக ரூ.29,999க்கு விற்கப்படும் மோட்டோரோலா எட்ஜ் 20ஐ ரூ.25,999 தள்ளுபடியில் வாங்கலாம். வங்கி சலுகையை பயன்படுத்துவதன் மூலம் இதனை ரூ.25,249க்கு வாங்கமுடியும்.  இந்த போன்கள்  6.7-இன்ச் முழு ஹெச்டி டிஸ்ப்ளே மற்றும் 144Hz ஹை ரெஃப்ரெஷ் வீதத்தைக் கொண்டுள்ளது. இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி செயலி மற்றும் 8ஜிபி ரேம் உடன் இயக்கப்படுகிறது.  ஸ்மார்ட்போனில் 108எம்பி + 8எம்பி  + 16எம்பி சென்சார்கள் மற்றும் முன்பக்கத்தில் 32 மெகாபிக்சல் சென்சார் அடங்கிய மூன்று கேமரா கொண்டுள்ளது. 

moto

ரூ.17,999க்கு விற்கப்படும் மோட்டோ ஜி60 ஆனது தள்ளுபடியில் மூலம் ரூ.15,999க்கு வாங்கலாம். இந்த ஸ்மார்ட்போன்ஹெச்டிஆர் சப்போர்டுடன் 6.80-இன்ச் மேக்ஸ் விஷன் எப்ஹெச் டி+ டிஸ்ப்ளே கொண்டுள்ளது. மேலும் இது குவால்காம் ஸ்னாப்ட்ரகன் 732ஜி செயலி மற்றும் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜுடன் வருகிறது.  மைக்ரோ எஸ்டி கார்டைப் பயன்படுத்தி ஸ்டோரேஜை 1 டிபி வரை விரிவாக்கிகொள்ளலாம்.  மோட்டோ ஜி60 ஆனது 6000 எம்ஏஹெச் பேட்டரியைக் கொண்டுள்ளது, இதன் மூலம் இதனை ஒரு முறை சார்ஜ் செய்து இரண்டு நாட்களுக்கு மேல் பயன்படுத்தலாம்.  ரூ.9999க்கு விற்கப்படும் மோட்டோ டேப்8 ஐ தள்ளுபடி விலையின் மூலம் ரூ.8999க்கு தள்ளுபடியில் வாங்கலாம்.

மேலும் படிக்க | விற்பனைக்கு வந்த சாம்சங் 5ஜி ஸ்மார்ட்போன் - விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News