Astro: ஜாதகத்தில் சனி தோஷம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரங்கள்

சனி ராசி மாறியதில் 3 ராசிகளிலும் ஏழரை நாட்டு சனி தொடங்கிய நிலையில், சனியின் மகாதசை தோஷம் ஏற்படாமல் இருக்க, இந்த ராசிக்காரர்கள் சனி அமாவாசை நாளில் சில பரிகாரங்களை மேற்கொள்ள வேண்டும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 30, 2022, 08:52 AM IST
Astro: ஜாதகத்தில் சனி தோஷம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரங்கள் title=

சனிபகவானின் அருளைப் பெறவும், சனி மகாதசையின் போது ஏற்படும் எதிர்மறை விளைவுகளைத் தவிர்க்கவும் சனி அமாவாசை நாள் மிகவும் சிறப்பு வாய்ந்தது.  ஜாதகத்தில் சனி தோஷம் உள்ளவர்கள் அல்லது  ஏழரை நாட்டு சனி உள்ளவர்கள். சனி அமாவாசை அன்று கண்டிப்பாக சில பரிகாரங்களைச் செய்ய வேண்டும்.  சித்திரை மாத அமாவாசையான இன்று அதாவது ஏப்ரல் 30, சனிக்கிழமை  என்பதோடு, இந்த நாளில் சூரிய கிரகணமும் உள்ளது. எனவே, சனி பகவானை வழிபட்டு செய்யப்படும் பரிகாரங்களின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது.

ஏப்ரல் 29-ம் தேதி கும்ப ராசியில் சனி பிரவேசிக்கும் போதே மீன ராசியில் சனியின்  ஏழரை நாட்டு துவங்கியுள்ளது. இது தவிர, சனியின் தாக்கம் கடகம் மற்றும் விருச்சிக ராசியிலும் இருக்கும். இதுதவிர கும்ப ராசியில் இரண்டாம் ஏழைரை நாட்டு சனியும், கடைசி கட்டம் மகர ராசியிலும் தொடங்கியுள்ளது.

மேலும் படிக்க | Solar Eclipse: கிரகணத்தின் போது சூரியனின் அருளைப் பெற செய்ய வேண்டியவை

சனி நீதியின் கடவுள் என்பதால், இந்த நேரத்தில் மக்கள் தவறான செயல்களைச் செய்தால், சனியின் அதிருப்தி அவர்களின் வாழ்க்கையை அழித்து விடும். இது தவிர ஜாதகத்தில் சனி அசுப நிலையில் இருந்தாலும் அந்த நபர் மோசமான பலன்களைப் பெறுகிறார். இதுபோன்ற சூழ்நிலையில், சனி அமாவாசை நாளில், இந்த ஐந்து ராசிக்காரர்கள் சில பரிகாரங்களை மேற்கொள்ள வேண்டும். இது சனியின் வக்ர பார்வையில் இருந்து அவர்களுக்கு நிவாரணம் தரும்.

சனி தோஷம் நீங்க பரிகாரம்

சனி அமாவாசை அன்று  நதியில் நீராடினால் சனி தோஷத்தினால் ஏற்படும் பாதிப்புகள் நீங்கும். இத்துடன் அனைத்து துன்பங்களும், பிரச்சனைகளும், தடைகளும் நீங்கி விடும்.

தேவை இருக்கும் ஒருவருக்கு தானம் செய்யுங்கள். அவருக்கு உணவு, உடைகள், காலணிகள் மற்றும் செருப்புகளை தானம் செய்யுங்கள். இது சனி பகவானை மகிழ்விக்கிறது. இது தவிர கருப்பு எள், கருப்பு வஸ்திரம் தானம் செய்வதும் நல்லது.

சனி தோஷம் நீங்க, உளுந்து, கறுப்பு எள், இரும்பு ஆகியவற்றை கருப்பு துணியில் நனைத்து எண்ணெயில் தோய்த்து, சனிபகவானுக்கு அர்ச்சனை செய்யுங்கள். இது நிவாரணம் தரும்.

சனி பகவானின் சாலிசாவைப் படியுங்கள். ஒவ்வொரு சனிக்கிழமையும் சனி சாலிசா, சனி ஸ்தோத்திரம் அல்லது சனி தசரத்கிருத ஸ்தோத்திரம் பாராயணம் செய்வது நல்லது.

சனி அமாவாசை அன்று வீட்டில் சனி யந்திரத்தை நிறுவ மிகவும் நல்ல நாளாக கருதப்படுகிறது. இதனுடன் தினமும் வழிபடுவதால் அனைத்து பிரச்சனைகளும் நீங்கி பணவரவு உண்டாகும்.

மேலும் படிக்க | சனி அமாவாசையில் சூரிய கிரகணம்; மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News