சனிப்பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு அபாய காலம், இவற்றை செய்தால் நிவாரணம் பெறலாம்

Sani Peyarchi 2022:  சனியின் ராசி மாற்றத்தால் சில ராசிக்காரர்களுக்கு பலவிதமான பிரச்சனைகள் வர ஆரம்பிக்கும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 28, 2022, 12:16 PM IST
  • சிம்ம ராசிக்காரர்களின் வேலையில் சனி இடையூறாக இருக்கும்.
  • சனிக்கிழமைகளில் சனி பகவானின் கோயில்களில் எள் தீபம் ஏற்றி வைத்து சனீஸ்வரனை வழிபடலாம்.
  • விநாயகர் அகவல், கந்தர் சஷ்டி கவசம் ஆகியவற்றை படிப்பது நன்மை பயக்கும்.
சனிப்பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு அபாய காலம், இவற்றை செய்தால் நிவாரணம் பெறலாம்  title=

சனிப்பெயர்ச்சி 2022: ஜோதிட சாஸ்திரத்தின் படி, சுமார் இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு, சனி பகவான் தனது ராசியை மாற்றப் போகிறார். அவர் ஏப்ரல் 29, 2022 அன்று கும்ப ராசிக்குள் பிரவேசிப்பார். சனி இந்த ராசியில் பிரவேசித்த உடனேயே சில ராசிக்காரர்களுக்கு பலவிதமான பிரச்சனைகள் வர ஆரம்பிக்கும். இதனுடன் இரண்டு ராசிகளுக்கு சனி தசையும் ஒரு ராசிக்கு ஏழரை நாட்டு சனியின் தாக்கமும் துவங்கும். 

இந்த ராசிக்காரர்களுக்கு அசுப பலன்கள் உண்டாகும்

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு சனியின் ராசி மாற்றத்தால் பிரச்சனைகள் வரப்போகிறது. இந்த காலத்தில் அவர்களுக்கு சட்ட சிக்கலகள் ஏற்படலாம். நீதிமன்றத்திற்கு சென்று வர வேண்டிய நிலை ஏற்படலாம். சர்ச்சைக்குரிய சூழ்நிலை ஏற்படலாம். செலவுகள் கூடும், கடன் வாங்கவேண்டிய சூழ்நிலை உருவாகலாம். ஆகையால், மேஷ ராசிக்காரர்கள் இந்த காலத்தில் நிதானத்துடனும் பொறுமையுடனும் இருக்க வெண்டியது மிக அவசியமாகும். 

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களின் வேலையில் சனி இடையூறாக இருக்கும். ஆகையால், எந்த ஒரு வேலையை செய்ய வேண்டுமானாலும், நன்கு திட்டமிட்டு செய்வது நல்லது. இல்லையெனில் நஷ்டம் ஏற்படலாம். கோபப்படுவதைத் தவிர்க்கவும், இல்லையெனில் உங்கள் இமேஜ் கெட்டுவிடும். 

இலக்கை நிறைவேற்றுவதில் சனி பகவான் சவால்களை உருவாக்குவார். தீமை செய்வதும் பிறர் சொல்வதைக் கேட்பதும் கேடு விளைவிக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் தேவை. குடும்ப உறுப்பினர்களுடன் பாசமாக நடந்துகொள்வது நல்லது.

கன்னி

சனிபகவான் கன்னி ராசியினருக்கு குழந்தைகள் மற்றும் உறவுகள் சம்பந்தமான சில பிரச்சனைகளை கொடுக்கக்கூடும். குழந்தைகளின் ஆரோக்கியம் போன்றவற்றால் அசுபமான செய்திகள் கிடைக்கும். கல்வித் துறையுடன் தொடர்புடையவர்களும் சிரமங்களையும் தடைகளையும் சந்திக்க வேண்டியிருக்கும். 

நிதி விஷயங்களில் சிக்கல்கள் இருக்கலாம். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை வரலாம். உணவு மற்றும் ஆரோக்கிய விஷயத்தில் சிறப்பு கவனம் தேவை. அனைத்து விஷயங்களையும் நன்கு யோசித்து, திட்டமிட்டு பின்னர் செய்வது நல்லது.

மேலும் படிக்க | இந்த 4 ராசிக்காரர்கள் சூரிய கிரகணத்தின் போது உஷாராக இருக்க வேண்டும் 

சனி மகாதசையின் தாக்கத்திலிருந்து தப்பிக்க பரிகாரங்கள்

சனிபகவானின் அருளைப் பெற, இந்த செயல்கள் பலனளிக்கின்றன. சனியின் தீய விளைவுகளைத் தவிர்ப்பதற்கான வழிகளைத் தெரிந்து கொள்வோம்.

- சனிக்கிழமையன்று சனிபகவானுக்கு கடுகு எண்ணெயை சமர்பிக்கவும்.

- கோடை காலத்தில் கருப்பு குடை தானம் செய்வது நல்லது.

- ஏழை மற்றும் கடின உழைப்பாளிகளை மதிக்கவும்.

- காலணிகளை தானம் செய்யுங்கள்.

- ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்யலாம்.

- சனிக்கிழமைகளில் சனி பகவானின் கோயில்களில் எள் தீபம் ஏற்றி வைத்து சனீஸ்வரனை வழிபடலாம்.

- தானம், தருமம் செய்யும்போது பெறுபவரை மரியாதையுடன் நடத்த வேண்டும்

சனிதசையிலிருந்து நிவாரணம் பெறுவதற்கான மந்திரங்கள்:

- ‘ஓம் ப்ராம் ப்ரீம் ப்ரவும் சஹ சனீஸ்வராய நமஹ’ என்ற மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.

- கோளறு பதிகம் படிக்கலாம்.

- ஹனுமான் சாலீசா படிக்கலாம்.

- விநாயகர் அகவல், கந்தர் சஷ்டி கவசம் ஆகியவற்றை படிப்பது நன்மை பயக்கும்.

மேலும் படிக்க | அவதிப்பட்ட ராசிகள் அசத்தப்போகும் நேரம்: சனிப்பெயர்ச்சியால் இவர்களுக்கு ஜாக்பாட் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News