Quick weight loss Tips : இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் ஓர் இரவில் உடல் எடையை குறைக்க எடுத்துக் கொண்ட முயற்சிகள், உடல் எடையை குறைக்கும் ஆர்வத்தில் இருப்பவர்களும் பின்பற்றலாம் என நினைக்கிறார்கள். ஆனால் அது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை. வினேஷ் போக்த் போல் விளையாட்டு வீரர்களால் ஓர் இரவில் குறிப்பிடத்தகுந்த எடையை குறைக்க முடியும். அதற்கு மருத்துவரின் ஆலோசனை மற்றும் அவர்கள் தொடர்ச்சியாக பின்பற்றி வந்த உணவு மற்றும் உடற்பயிற்சி அடிப்படையில் எடை குறைப்பு சாத்தியமாகிறது.
ஆனால், சாதாரண மக்கள் நீண்ட கால அடிப்படையில் உடல் எடையை குறைப்பதே ஆரோக்கியத்துக்கு நல்லது. அதற்கு இருக்கும் பயிற்சிகளை பின்பற்றுவதே சிறந்தது என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். உடல் எடையை குறைக்க இப்போது இருக்கும் தீவிரமான பயிற்சிகளை தினசரி அடிப்படையில் செய்து வந்தாலே, உங்களால் சீக்கிரம் உடல் எடையை குறைத்துவிட முடியும். ஓரிரு வாரத்துக்குள் உடல் எடையை குறைக்க இப்போது இருக்கும் பயிற்சிகள் என்னவென்றால் ஸ்கிப்பிங், சைக்கிளிங் மற்றும் டையட் ஆகியவற்றை சரியாக பின்பற்ற வேண்டும்.
உடல் எடையை குறைக்கும் பயிற்சிகள்
1. ஸ்கிப்பிங்
கயிறு குதித்தல் உடல் எடையை சீக்கிரம் குறைப்பதற்கான பயிற்சியாகும். இது விரைவாக உடல் கலோரிகளை எரிக்க வல்லது. தினசரி அடிப்படையில் இந்த பயிற்சியை செய்து வந்தால் உடல் எடை சீக்கிரம் குறையும். ஸ்கிப்பிங் ஆடும்போது நுரையீரல், இதயம், கால் எலும்புகள், தசைகள் எல்லாவற்றுக்கும் சரிசமமான அழுத்தம் ஏற்பட்டு வளர்ச்சிதை மாற்றத்தை ஊக்குவித்து கலோரிகள் எரிப்பை துரிதப்படுத்துகிறது. கெட்ட கொழுப்புகளும் சீக்கிரம் கரையும். மேரிகோம் 2021 ஆம் ஆண்டு குத்துச்சண்டை போட்டிக்கு முன்பாக உடல் எடை அதிகமாக இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட இருந்த நிலையில், உடனடியாக ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ஸ்கிப்பிங் ஆடி எடையை குறைத்தார்.
2. தோப்பு கரணம்
வேகமாக தோப்புக் கரணம் போடுவது, அதாவது கைகளால் இரு காதுகளையும் பிடித்துக்கொண்டு வேகமாக உட்கார்ந்து எழும் பயிற்சி. இதுவும் உடல் எடையை குறைக்க உதவும் தீவிர பயிற்சியாகும். காலை மாலை என இரு வேளைகளிலும் செய்தால் மற்ற பயிற்சிகளில் கிடைக்கும் ரிசல்டைவிட இதில் சீக்கிரம் உடல் எடை குறையும். இடுப்பு, கால்களின் எலும்புகள் வலுவடைவதுடன் புத்துணர்ச்சியாகவும் இருப்பீர்கள். கலோரிகள் சீக்கிரம் எரிந்து கட்டுக்கோப்பான உடல் அமைப்பை பெறுவீர்கள்.
3. சைக்கிளிங்
மேலே சொன்ன இரண்டு பயிற்சிகளையும் வீட்டில் ஒரு சிறிய இடத்தில் இருந்தவாறே செய்துவிட முடியும். ஆனால் சைக்கிளிங் செல்வது என்பது பயிற்சி செய்பவரின் விருப்பம் தான். உடல் எடையை குறைக்க முயற்சி செய்பவர்கள் சைக்கிளிங் செய்தால் சீக்கிரம் உடல் கலோரிகள் எரிந்து, தேவையற்ற கொழுப்புகளும் சேர்வது குறையும். இதனால் உடல் எடையும் சீக்கிரம் குறையும்.
4. டையட்
இந்த பயிற்சிகளின் கூடவே டையட் பின்பற்றுவதும் முக்கியம். நீங்கள் சர்க்கரை மற்றும் கெட்ட கொழுப்பு சார்ந்த உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அதாவது, பதப்படுத்தப்பட்ட உணவுகள், மிட்டாய் மற்றும் எண்ணெயில் பொறிக்கப்பட்ட உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கவும். தினமும் ஆரோக்கியமான உணவுகளையும், நொறுக்குத் தீனிகளாக பழங்கள், நட்ஸ், டிரை ப்ரூட்ஸ் ஆகியவற்றையும் எடுத்துக் கொள்ளுங்கள்.
இவற்றை தினசரி அடிப்படையில் நீங்கள் செய்து வந்தால் குறைந்தபட்சம் ஓரிரு மாதங்களிலேயே உங்களின் எடை குறைந்து, ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு திரும்புவீர்கள். ஈஸியாக செய்யக்கூடிய இந்த பயிற்சிகளை விடவும் வேறு பயிற்சிகள் உங்களுக்கு தேவைப்படாது.
மேலும் படிக்க | சூர்யா-ஜோதிகா காதலில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய 6 பாடங்கள்!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ