புற ஊதா கதிர்கள் பாதுகாப்பு: கோடைக்காலத்தில் ஊர் சுற்றுவது நன்றாக இருந்தாலும், சூரியனின் புற ஊதாக் கதிர்களில் இருந்து பாதுகாத்துக் கொள்வதும் அவசியமானதாகும். வலுவான மற்றும் ஆரோக்கியமான எலும்புகளுக்கு கால்சியம் சென்று சேர்வதற்கு உதவும் வைட்டமின் D ஐ உற்பத்தி செய்ய, அனைவருக்கும் சூரிய ஒளி அவசியமானது. ஆனால் புற ஊதா ஒளியின் வெளிப்பாடு தோல் புற்றுநோய் மற்றும் பார்வை இழப்பு ஆகிய இரண்டிற்கும் ஒரு முக்கிய காரணம் என்பதை என்பது தெரியுமா?
சூரியனில் இருந்து வரும் புற ஊதா கதிர்வீச்சுக்கு பாதுகாப்பற்ற வெளிப்பாடு தோல், கண்கள் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதிக்கும். தோல் புற்றுநோய், கண்புரை மற்றும் விரைவில் வயதாகும் தன்மை தொடங்குவது என்பவை புற ஊதா கதிர்களின் தாக்கத்தால் ஏற்படும் தீமைகள் ஆகும்.
மேலும் படிக்க | குரங்கம்மை எச்ஐவி கொரோனா என பல வைரஸ்களால் தாக்கப்பட்ட உலகின் முதல் மனிதன்
சூரிய ஒளியின் பாதிப்புக்கான அறிகுறிகள் வெளிப்படையாகவே தெரியும். தோல் சிவப்பாக மாறும் என்பதோடு, சருமம் சூடாகவும் இறுக்கமாகவும் மாறும்.
வலி மற்றும் அசௌகரியம் ஏற்படலாம். கடுமையான வெயில் கொப்புளங்கள் மற்றும் தோல் உரிவது போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களுக்கு எதிராக உங்கள் சருமத்தைப் பாதுகாக்க 7 வழிகள் இவை...
UVA மற்றும் UVB கதிர்களில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள, நீர்-எதிர்ப்பு மற்றும் குறைந்தபட்சம் 30 SPF கொண்ட பரந்த-ஸ்பெக்ட்ரம் சன்ஸ்கிரீனை சருமத்தில் பயன்படுத்தவும்.
வெயிலில் வெளியே போகும்போது, நீண்ட கை வைத்த ஆடைகள், ஸ்லாக்ஸ், அகலமான விளிம்புடன் கூடிய தொப்பி மற்றும் சன்கிளாஸ்கள் என பாதுகாப்பாக செல்லுங்கள். UV பாதுகாப்பு காரணி கொண்ட ஆடைகளைத் தேடுங்கள்.
மேலும் படிக்க | கொரோனாவின் அக்டோபஸ் கரங்களில் சீனா!
உங்கள் குழந்தைகளின் உணவில் வைட்டமின் டியைச் சேர்ப்பதை மறக்காமல் கடைபிடிக்கவும். குழந்தைகளுக்கும் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது நல்லது.
மணல், பனி அல்லது நீர்நிலைகளுக்கு அருகில் இருக்கும்போது கூடுதல் எச்சரிக்கையுடன் இருங்கள். அவை சூரியனிலிருந்து வரும் புற ஊதாக் கதிர்களைப் பிரதிபலிக்கின்றன. இதன் விளைவாக சூரிய வெப்பத்தின் தாக்கமும், சருமத்தில் பாதிப்பும் அதிகமாக வாய்ப்புள்ளது.
வைட்டமின் சப்ளிமெண்ட்ஸையும் உள்ளடக்கிய ஆரோக்கியமான உணவைப் பின்பற்றி போதுமான வைட்டமின் D ஐ உட்கொள்ளுங்கள்.
தோலால் ஆன சோபா மற்றும் படுக்கைகளைப் பயன்படுத்த வேண்டாம். சூரியனின் புற ஊதா நிறமாலையின் தாக்கத்தை பதப்படுத்தப்பட்ட தோலால் செய்யப்பட்ட பொருட்கள் ஏற்படுத்தும்.
வெயிலின் தாக்கத்தில் இருந்து உதடுகளைப் பாதுகாக்க, குறைந்தபட்சம் SPF 15 கொண்ட லிப் பாம் தடவவும். நீங்கள் சூரிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தால், மிக நீண்ட காலத்திற்கு ஆரோக்கியமான தோல் மற்றும் கண்களைப் பெறலாம்.
மேலும் படிக்க | ஃபோலிக் அமிலம் சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக் கொள்பவரா? கோவிடினால் அதிக ஆபத்து!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ