PF கணக்கிலிருந்து இரண்டாவது முறையும் கோவிட் அட்வான்ஸ் எடுக்கலாம்: செயல்முறை இதோ

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அதன் உறுப்பினர்களுக்கு, இரண்டாவது முறையாக ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்கில் இருந்து முன்பணத்தை எடுக்க அனுமதித்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 27, 2022, 02:44 PM IST
  • நாடு முழுவதும் கொரோனா எண்ணிக்கை மீண்டும் வேகமாக அதிகரித்து வருகின்றது.
  • இரண்டாவது முறையாக உங்கள் பிஎஃப் கணக்கிலிருந்து கோவிட் அட்வான்ஸ் எடுக்க முடியும்.
  • இதற்கான செயல்முறையை இங்கே காணலாம்.
PF கணக்கிலிருந்து இரண்டாவது முறையும் கோவிட் அட்வான்ஸ் எடுக்கலாம்: செயல்முறை இதோ title=

EPFO Covid19 advance: நாடு முழுவதும் கொரோனா எண்ணிக்கை மீண்டும் வேகமாக அதிகரித்து வருகின்றது. ஆகையால் மீண்டும் மக்களின் கவலை அதிகரித்துள்ளது. இந்த நிலையில், நீங்கள் எங்காவது வேலை செய்து PF கணக்கு வைத்திருந்தால், இந்த செய்தி உங்களுக்கானது. 

இப்போது இரண்டாவது முறையாக உங்கள் பிஎஃப் கணக்கிலிருந்து முன்பணத்தை எடுக்கலாம். ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) அதன் உறுப்பினர்களுக்கு இரண்டாவது முறையாக ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) கணக்கில் இருந்து முன்பணத்தை எடுக்க அனுமதித்துள்ளது.

எவ்வளவு உதவி பெற முடியும்?

இப்போது PF கணக்கு வைத்திருப்பவர்கள் (PF Subscribers) 3 மாத அடிப்படை சம்பளம் (அடிப்படை சம்பளம் + அகவிலைப்படி அதாவது DA) அல்லது அவர்களின் PF கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட தொகையில் 75% வரை (எது குறைவாக இருந்தாலும்) எடுத்துக்கொள்ளலாம். கோவிட்-19 தொற்றுநோய் காலத்தில், ​​EPF உறுப்பினர்களுக்கு, குறிப்பாக மாதச் சம்பளம் 15,000 ரூபாய்க்கும் குறைவாக உள்ளவர்களுக்கு, பெரும் உதவி கிடைத்துள்ளது.

PF கணக்கிலிருந்து முன்பணம் எடுப்பது எப்படி?

EPFO கணக்கு வைத்திருப்பவர்கள் அட்வான்ஸ் வசதியைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பினால், அவர்கள் EPFO ​​இணையதளம் மூலம் கிளைம் செய்யலாம். இது தவிர, UMANG செயலி மூலம் PF கணக்கிலிருந்து முன்பணத் தொகைக்கும் விண்ணப்பிக்கலாம்.

ALSO READ | EPFO முக்கிய செய்தி: இ-நாமினேஷன் செய்யலையா? இந்த நன்மைகள் கிடைக்காது!! https://zeenews.india.com/tamil/lifestyle/epfo-main-news-e-nomination-ma...

KYC அவசியம் 

ஆன்லைனில் EPF கணக்கிலிருந்து பணத்தை எடுக்க, உங்களிடம் யுனிவர்சல் கணக்கு எண் (UAN) இருக்க வேண்டும். இது தவிர, ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் செயலில் இருக்க வேண்டும். ஆதார், பான் மற்றும் பிற வங்கி விவரங்கள் சரிபார்க்கப்பட்டிருக்க (verified) வேண்டும்.

இந்த செயல்முறையை பின்பற்றவும்

- EPFO ​​இன் ஒருங்கிணைந்த வலைத்தளமான https://unifiedportalmem.epfindia.gov.in/memberinterface இன் உறுப்பினர் இடைமுகத்தில் லாக் இன் செய்யவும்.
- இதற்குப் பிறகு, ஆன்லைன் சேவைகள் ஆப்ஷனிற்குச் சென்று, கிளைம் (படிவம்-31,19,10C, 10D)-ல் கிளிக் செய்யவும்.
-  உங்கள் வங்கிக் கணக்கின் கடைசி 4 இலக்கங்களை உள்ளிட்டு சரிபார்க்கவும்.
- இதற்குப் பிறகு Proceed for Online Claim என்பதைக் கிளிக் செய்யவும்.
- இப்போது outbreak of Pandemic (Covid-19)-ஐ தேர்ந்தெடுத்து தேவையான தொகையை உள்ளிடவும்.
- வங்கி கணக்கு காசோலையின் ஸ்கேன் செய்யப்பட்ட நகலை பதிவேற்றவும்.
- Get Aadhaar OTP என்பதைக் கிளிக் செய்து OTP ஐ உள்ளிடவும்.
- இதற்குப் பிறகு, உங்கள் கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, 3 நாட்களுக்குள் உங்கள் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படும்.

ALSO READ | PF Advance Withdrawal தொடர்பான முக்கிய செய்தி: தொற்று காலத்தில் பெரிய நிவாரணம் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News