இந்த ராசிக்காரர்கள் காதலில் கலக்குவார்கள்: உங்க காதலருக்கு இந்த ராசியா?

சில ராசிக்காரர்கள் காதலிலும் அன்பு காட்டுவதிலும் மிகச் சிறந்து விளங்குவார்கள். காதலில் அதிர்ஷ்டசாலியான ராசிக்காரர்கள் யார் என்பதை இந்த பதிவில் காணலாம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 22, 2021, 07:13 PM IST
இந்த ராசிக்காரர்கள் காதலில் கலக்குவார்கள்: உங்க காதலருக்கு இந்த ராசியா? title=

காதல் என்பது வெறும் உணர்ச்சியல்ல, அது ஒரு வாழ்நாள் அனுபவம். பிணைப்பு, சமரசம், ஆர்வம், ஈர்ப்பு என அனைத்தையும் கொண்டிருக்கும் இந்த அனுபவத்தை காதலில் இருக்கும் இருவரும் சேர்ந்து அனுபவிக்கிறார்கள்.

எனினும், சில சமயம் காதலர்களுக்கு இடையிலும், கணவம் மனைவிக்கு இடையிலும் அடிக்கடி கருத்து வேறுபாடுகளும், சண்டைகளும் வருவதுண்டு. இந்த வேறுபாடுகளை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் கையாள்கிறார்கள். எனினும், இப்படிப்பட்ட நேரங்களில் சிலரால் மட்டும் எளிதாக சிக்கல்களை தீர்க்க முடிகின்றது.

சில ராசிக்காரர்கள் காதலிலும் அன்பு காட்டுவதிலும் மிகச் சிறந்து விளங்குவார்கள். தங்களது அபரிமிதமான காதலால், அவர்கள் தங்கள் காதலன் / காதலி / கணவம் / மனைவியை எளிதில், சமாதானப்படுத்தி விடுகிறார்கள். காதலில் அதிர்ஷ்டசாலியான ராசிக்காரர்கள் யார் என்பதை இந்த பதிவில் காணலாம்.

கடகம்

வியத்தகு நபர்கள் நிறைந்த உலகில், கடக (Cancer https://zeenews.india.com/tamil/lifestyle/these-6-zodiac-sign-natives-ha...) ராசிக்காரர்கள் தங்கள் உணர்ச்சிகரமான நடத்தையில் உறுதியாக இருப்பார்கள். தங்கள் காதலன் / காதலியின் சிறிய அழகான விஷயங்களைக் கூட இவர்கள் கண்காணித்து பாராட்டுவார்கள். கடக ராசிக்காரர்கள் தங்கள் காதலன் / காதலியை மிகுந்த அக்கறையுடன் கவனித்துக்கொள்வார்கள்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் எளிதான அணுகுமுறை மற்றும் பொறுமையான இயல்புக்கு பெயர் பெற்றவர்கள். அவர்கள் தங்கள் சொந்த வழியில் விஷயங்களைச் செய்ய விரும்புகிறார்கள். இவர்கள் பொழுதுபோக்குக்காக எப்போதும் எந்த உறவிலும் ஈடுபட மாட்டார்கள். அனைத்து வித உறவுகளிலும் இவர்கள் உண்மையானவர்களாக, முழு அர்ப்பணிப்புடன் இருப்பார்கள். காதலிக்க ஏற்ற நபர்கள் ரிஷப ராசிக்காரர்கள்.

ALSO READ: Horoscope November 22, 2021: சண்டை போட்டே பாடாய்படுத்தும் ராசி இவர்கள் தான் 

மீனம்

உணர்ச்சிவசப்படுவதற்கு பெயர் பெற்ற மீன (Pisces) ராசிக்காரர்கள் ஆழ்ந்த மற்றும் இரக்கமுள்ள உறவில் தங்களை ஈடுபடுத்திக்கொள்வார்கள். இவர்களது உள்ளுணர்வு மிகவும் சக்திவாய்ந்ததாக இருக்கும். ஆகையால் மீன ராசிக்காரர்களை தவறாக வழிநடத்துவது சாத்தியமற்றது. மீன ராசிக்காரர்கள் காதல் உறவில் தங்களை முழுமையாக மூழ்கடித்துக்கொள்வார்கள்.

கன்னி ராசி

கன்னி ராசியில் பிறந்தவர்கள் தங்கள் நிலையான இயல்புக்கு பெயர் பெற்றவர்கள். பிறரை ஈர்ப்பது கன்னி ராசிக்காரர்களுக்கு மிக இயல்பாக வரும். கன்னி ராசிக்காரர்கள் மிக நல்ல துணைவர்களாக இருப்பார்கள். இவர்களுடனான வாழ்க்கை மிக அற்புதமாக அமையும்.

கும்பம்

கும்ப (Aquarius) ராசிக்காரர்கள் தங்கள் அணுகுமுறையில் தீவிரமானவர்கள். அவர்கள் பிறரை வழிநடத்த விரும்புவார்கள். பேரார்வம் அவர்களின் இரத்தத்திலேயே கலந்திருக்கிறது. தங்கள் காதலன் / காதலி மீது அதிக பாதுகாப்பான அணுகுமுறையைக் கொண்டிருக்கும் இவர்கள் அவர்களை பாதுகாக்க எந்த எல்லைக்கும் செல்வார்கள்.

ALSO READ:Personality By Zodiac Sign: இந்த 4 ராசி ஆண்களும் அற்புதமான கணவர்களாக இருப்பார்கள் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News