ஆங்கில படத்தை காப்பி அடிக்கும் நீ... மிஷ்கினை கண்டித்த நடிகர் அருள்தாஸ்!

சமீபத்தில் இயக்குனர் மிஷ்கின் மேடையில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், நடிகர் அருள்தாஸ் மிஷ்கின் குறித்து பேசி உள்ளார். இது தற்போது வைரல் ஆகி வருகிறது.

Written by - RK Spark | Last Updated : Jan 23, 2025, 11:00 AM IST
  • மேடையில் அநாகரிகமாக பேசிய மிஷ்கின்.
  • கண்டித்த நடிகர் அருள்தாஸ்.
  • வீடியோ இணையத்தில் வைரல்.
ஆங்கில படத்தை காப்பி அடிக்கும் நீ... மிஷ்கினை கண்டித்த நடிகர் அருள்தாஸ்! title=

2k kid படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் லாபில் நடைபெற்றது. இயக்குனர் சுசீந்திரன் எழில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய நடிகர் பாலா, சுசீந்திரன் அவர்கள் என்னுடைய வாழ்க்கைக்கு முக்கியமான இயக்குனர். எப்பொழுதும் போல இந்த படத்தில் சிறப்பான கதாபாத்திரத்தை அமைத்துக் கொடுத்திருக்கிறார். என்னுடைய கதாபாத்திரத்தை பார்த்துவிட்டு அவர் இருக்கும் திசையிலும் எனக்கு கால் பண்ணி வாழ்த்தினார் d.இமான்.  2k Love story படத்தில் உனக்கு என்ன வேலை என்று கேட்டார்கள் எங்கள் வீட்டில். ஒரு நடிகராக பல்வேறு கதாபாத்திரத்தில் நடிப்பேன் என்று நினைத்தேன் ஆனால் 2k kid நம்ம எல்லாரும் ஆக நடிப்பேன் என்று நினைக்கவில்லை.

மேலும் படிக்க | யாத்திசை இயக்குனரின் அடுத்த படம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது!

நடிகர் அருள்தாஸ் பேசும் போது, என்னுடைய பொருளாதாரம் ரொம்பவும் பின்தங்கி இருந்தது, சுசீந்திரன் அவர்களால் தான் மேலேறி வந்தேன். சமீபமாக இந்த மேடை அநாகரிகமான மேடையாக மாறிவிட்டது. இயக்குனர் என்றால் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்பது போல் ஆகிவிட்டது. மிஸ்கின் பேச்சுக்கு கண்டனம். பெரிய மதிக்க கூடிய இருக்கும் இடம் தமிழ் சினிமா அதில் வந்துகிட்டு இது போல் பேசுவது தலைகுனிவாக இருக்கிறது. பெண் பத்திரிக்கையாளர்களால் இருக்கும் இடத்தில் இது போல் பேசுவது நன்றாக இல்லை.

மேடை நாகரிகம் வேண்டும். தம்பி என்று கூப்பிடுவது முக்கியமில்லை அவன் உங்களை அண்ணனாக நினைக்க வேண்டும் சகட்டுமேனிக்கு வாடா போடா என்று பேசக்கூடாது. பாலாவை அவன் இவன் என்பது இளையராஜாவை அவன் இவன் என்பது யார்ரா நீ இப்படி எல்லாம் பேசுவதற்கு என்று கேள்வி எழுப்பினார். ரொம்ப மன வேதனையாக உள்ளது. மிஷ்கின் அவர்களே நீங்கள் மண் சார்ந்த கதைகளை எடுத்து ஜெயிக்கவில்லை குத்தாட்ட பாடல்கள் இது போன்ற எடுத்து ஜெயித்துள்ளீர்கள். ஆங்கில படங்களை பார்த்து காப்பி அடித்து படம் எடுக்கும் நீ ஒரு போலி என கண்டித்து பேசியுள்ளார்.

D. இமான் பேசுகையில், சுசீந்திரனுடன் இது எனக்கு ஒன்பதாவது படம். வித விதமான கதைகள் அவரிடம் எதிர்பார்க்கலாம். சுசி அவர்கள் நிறைய நண்பர்களை சேமித்து உள்ளார். பெரிய ப்ளாக் பஸ்டர் இருக்கு 2k kids உண்டான படமாக இருக்கும் என்றார். தனஜெயன் பேசுகையில், படம் வெளியான பின் 10 நிமிடம் 20 நிமிடம் edit செய்வதில் பயன் இல்லை.மேடை நாகரிகம் பற்றி பேசிய ஆருதாஸ் அவர்களுக்கு நன்றி. மிஸ்கின் என்னுடைய நண்பர் தான் பல முறை கால் செய்து பேசுவேன் இப்படி பேசாதீர்கள் என்று. வாய்ப்பு போய் விடும் என்று தயங்குவார்கள். பேசும் வார்த்தைகள் அன்பாகவும் பண்பாகவும் இருக்க வேண்டும் இல்லை என்றால் பேச கூடாது. மேடை என்று சொல்லி சகட்டுமேனிக்கி பேச கூடாது அது யார் பேசினாலும் தவறு தான். இல்லாமல் ரசித்து கொண்டு இருப்பது தவறு. ஆண் பெண் உறுப்புகளை வைத்து பேசும்பொழுது ரொம்ப கஷ்டமாக இருந்தது மக்களிடம் போய் சேருவதற்காக அந்த 4 நிமிடம் பேசிய கெட்ட வார்த்தை அவர் பேசிய content தவறாக போய் விட்டது என்றார்.

மேலும் படிக்க | ஓவியா to த்ரிஷா..வீடியோ லீக் சர்ச்சையில் சிக்கிய தமிழ் நாயகிகள்! லிஸ்ட் பெருசு..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News