என்னது பிகினி-ல போனா பெட்ரோல் இலவசமா... பிகினி உடையில் குவிந்த ஆண்கள்!

ரஷ்யாவில் பெட்ரோல் பல்க் ஒன்று சமீபத்தில் பிகினி போட்டு வருபவர்களுக்கு பெட்ரோல் இலவசம் என அறிவித்த நிலையில் தற்போது ஆண்கள் எல்லாம் பிகினி உடையில் வந்ததாள் பரபரப்பு!!

Last Updated : Nov 19, 2019, 06:27 PM IST
என்னது பிகினி-ல போனா பெட்ரோல் இலவசமா... பிகினி உடையில் குவிந்த ஆண்கள்! title=

ரஷ்யாவில் பெட்ரோல் பல்க் ஒன்று சமீபத்தில் பிகினி போட்டு வருபவர்களுக்கு பெட்ரோல் இலவசம் என அறிவித்த நிலையில் தற்போது ஆண்கள் எல்லாம் பிகினி உடையில் வந்ததாள் பரபரப்பு!!

இந்த உலகை சுற்றிலும் எத்தனையோ சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்து கொண்டுதான் உள்ளது. அவற்றில் சில மக்களின் கவனத்தை ஈர்த்து வைரளாகி வருகிறது. இந்நிலையில், பிகினி போட்டு வருபவர்களுக்கு பெட்ரோல் இலவசம் என ரஷ்யாவில் பெட்ரோல் பல்க் ஒன்று ரிவித்ர்த நிலையில், ஆண்கள் எல்லாம் பிகினி உடையில் வந்து பெட்ரோல் போடும் சம்பவம் வைரலாகி வருகிறது. 

ரஷ்யாவின் சமாரா பகுதியில் உள்ள ஓல்வி என்ற கேஸ் ஸ்டேஷன் நிறுவனம் தங்கள் நிறுவனத்தின் விளம்பரத்திற்காக ஒரு வித்தியாசமாக ஆஃபரை அறிவித்தது. அதன்படி பிகினியில் வந்து பெட்ரோல் நிரப்புபவர்களுக்கு பெட்ரோல் இலவசம் என்ற அறிவிப்பை வெளியிட்டது.

இந்த அறிவிப்பின் மூலம் பெண்கள் பலர் பிகினியில் வந்து பெட்ரோல் போடுவார்கள். அதனால் அவர்கள் ஆண்களையும் இந்த பெட்ரோல் ஸ்டேஷனிற்கு வர வைக்கலாம் என்ற எண்ணத்தில் இந்த திட்டத்தை வெளியிட்டனர். மேலும் பெண்கள் பிகினியுடன் வந்து பெட்ரோல் போடும் செய்தி அப்பகுதியில் வைரலாகி அந்நிறுவனத்தின் பெயர் பிரபலமாகும் என நினைத்து இந்த ஆஃபரை அறிவித்தனர்.

ஆனால் இது அவர்களுக்கு விணாகிப்போகும் என அவர்கள் நினைக்கவில்லை. ஆஃபர் அறிவித்ததும். பெண்களை விட ஆண்கள் பிகினி உடையில் வந்து இலவசமாக பெட்ரோல் போட்டனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தி வைரலாகி வருகிறது.  

 

Trending News