2025 வரை ஏழரை நாட்டு சனியின் கிடுக்கிப்பிடியில் சிக்கித் தவிக்கப் போகும் ராசி

ஜனவரி 24, 2020 முதல், சனியின் பாதிப்பு கும்ப ராசிக்காரர்களுக்கு தொடங்கிவிட்டது. அதனால் பாதிக்கப்படும் ராசி இதுதான்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : May 5, 2022, 09:46 PM IST
  • கும்ப ராசிக்காரர்களுக்கு சனியின் பெயர்ச்சி பாதகமாக இருக்கும்.
  • தைரியமும் வீரமும் குறையும்.
  • எதிரிகளிடம் எச்சரிக்கையாக இருக்கவும்
2025 வரை ஏழரை நாட்டு சனியின் கிடுக்கிப்பிடியில் சிக்கித் தவிக்கப் போகும் ராசி title=

சனி திசையும் ஏழரை சனியும்: எந்த ராசிக்காரர்களுக்கு சனியின் பெயர்ச்சி மிகவும் வேதனையைக் கொடுப்பதாக இருக்கும் தெரியுமா? ஜனவரி 24, 2020 முதல், சனியின் தாக்கம் கும்ப ராசிக்காரர்களுக்கு தொடங்கிவிட்டது.  

கும்பத்தில் சனி 2022: எந்த ஒரு கிரகத்தின் பெயர்ச்சியும் சில ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும், சிலருக்கு இந்த நேரம் மிகவும் வருத்தமாக இருக்கும். நீதியின் கடவுள் என்று அறியப்படும் சனிதேவரின் கருணை இருந்தால், பிச்சாதிபதியும் லட்சாதிபதியாவார்.

அதேநேரத்தில் சனி பகவானின் தீய பார்வை பட்டால், அந்த குறிப்பிட்ட நபர் நிம்மதியை இழப்பார். ஜோதிட சாஸ்திரத்தின் படி, மகரம் மற்றும் கும்பத்தை ஆளும் கிரகம் சனி தேவன். தற்சமயம் சனி தனது ராசியில் கும்ப ராசியில் அமர்ந்திருக்கிறார்.

மேலும் படிக்க | இந்த ராசிக்கார பெண்கள் அதிர்ஷ்டத்தின் மறு அவதாரமாய் இருப்பார்கள் 

சனி அமர்ந்திருக்கும் கும்ப ராசிக்கு இந்த நேரம் சற்று கடினமான நேரம். சனி எந்த லக்னத்தில் அமர்ந்தாலும் அந்த ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனி ஆரம்பமாகிவிடும். பொதுவாக ஏழரை ஆண்டுகள் சனியின் தாக்கம் வீரியமாக இருக்கும்.

2025, மார்ச் 29 வரை சனி கும்ப ராசியில் இருக்கப் போகிறார். அதுவரை கும்ப ராசிக்காரர்களுக்கு இந்தக் காலம் மிகவும் வேதனையாகத்தான் இருக்கும்.

ஜனவரி 2022 இல் தொடங்கியது ஏழரை சனி
2022-ம் ஆண்டு ஜனவரி 24-ம் தேதியில் இருந்து கும்ப ராசிக்காரர்களுக்கு கெட்ட நாட்கள் ஆரம்பித்து விட்டது என்று சொல்லலாம். இந்நாளில் இருந்து கும்ப ராசிக்காரர்களுக்கு சனியின் பாதிப்பு தொடங்கிவிட்டது.

2022 ஏப்ரல் 29-ம் தேதி சனி ராசி மாறியவுடன், கும்ப ராசிக்காரர்களுக்கு ஏழரைச் சனியின்  இரண்டாம் கட்டம் தொடங்கிவிட்டது. ஏழரை நாட்டு சனியில் மொத்தம்  மூன்று கட்டங்கள் உள்ளன.

மேலும் படிக்க | ஏழரை சனியின் வகைகளும் அவற்றின் பாதிப்பிற்கு பரிகாரங்களும்

பொதுவாக இரண்டரை ஆண்டுகளுக்கு ஒன்றாக  என மொத்தம் ஏழரை ஆண்டுகள் சனியின் தீவிரமான தாக்கம் இருக்கும். அதில், இரண்டாவது கட்டம் மிகவும் வேதனையைக் கொடுக்கக்கூடியது.

இரண்டாம் கட்டம் உச்சத்தில் இருக்கும்போது சனியின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்றும் நம்பப்படுகிறது. இந்த கட்டத்தில், எல்லா பக்கங்களிலிருந்தும் ஒரு நபரை பிரச்சினைகள் சூழும், ஏழரை சனியின் மத்திம காலத்தில் இருப்பவர்களுக்கு எங்கிருந்தும் ஆதரவு கிடைப்பதில்லை.

ஒரு நபரின் ஜாதகத்தில் சனி வலுவான நிலையில் இருந்தால், இந்த நேரம் அந்த நபருக்கு குறிப்பாக பலனளிக்கும். ஜோதிடர்களின் கூற்றுப்படி, சனியின் தாக்கம் நபருக்கு எதிர்மறையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. 

மேலும் படிக்க | ஏழரை நாட்டு சனியால் சீரழிய போகும் ராசிக்காரர்கள்

ஏழரை நாட்டு சனியின் தாக்கம், மங்களகரமானவை என்பதை நிரூபிக்க முடியும். ஜாதகத்தில் சனி வலுப்பெற்று இருந்தால் சனியின் ஏழரை ஆண்டுகாலமும் நன்றாகவே இருக்கலாம். அதேபோல சனி தசையின்போதும் நன்மைகள் கிடைக்கும் வாய்ப்புகள் உண்டு.

ஒருவரின் ஜாதகத்தில் சனி பலவீனமான நிலையில் இருந்தால், அந்த நபர் பிரச்சனைகளால் சூழப்பட்டு வேதனையை அனுபவிப்பார்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | புதன் பெயர்ச்சி: இந்த 6 ராசிக்காரர்கள் தலைவிதி மாறும், பண மழை பொழியும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News