LIC Jeevan Tarun Policy: வெறும் ரூ.171 முதலீட்டில் ரூ. 28.24 லட்சம் பெறலாம்!

LIC Jeevan Tarun Policy: இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் இளம் குழந்தைகளின் பெற்றோருக்கான திட்டத்தையும் வெளியிட்டுள்ளது, இந்த திட்டத்தின் பெயர் எல்ஐசி ஜீவன் தருண் பாலிசி ஆகும்.    

Written by - RK Spark | Last Updated : Feb 19, 2023, 03:21 PM IST
  • திட்டத்தில் சேர குழந்தையின் வயது 3 மாதங்கள் முதல் 12 வயது வரை இருக்க வேண்டும்.
  • குழந்தைக்கு 20 வயது வரை பிரீமியம் செலுத்த வேண்டும்.
  • 5 வருட லாக்-இன் பீரியட் வழங்கப்படுகிறது.
LIC Jeevan Tarun Policy: வெறும் ரூ.171 முதலீட்டில் ரூ. 28.24 லட்சம் பெறலாம்! title=

LIC Jeevan Tarun Policy: இந்திய மக்கள் பலரின் நம்பிக்கை வாய்ந்த முதலீட்டு திட்டங்களை லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனம் வழங்கி வருகிறது.  மக்களின் எதிர்கால தேவைக்கு ஏற்ற சிறப்பான காப்பீட்டு திட்டங்களை வழங்கி வருகிறது.  பல நிறுவனங்கள் மக்களுக்கு முதலீட்டு திட்டங்களை வழங்கி வந்த நிலையில் எல்ஐசி தொடர்ந்து அதன் சிறப்பான காப்பீட்டு திட்டங்களை வழங்கி மக்களின் வாழவதாரத்தை மேம்படுத்தி வருகிறது.  இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் இளம் குழந்தைகளின் பெற்றோருக்கான திட்டத்தையும் வெளியிட்டுள்ளது, இந்த திட்டத்தின் பெயர் எல்ஐசி ஜீவன் தருண் பாலிசி ஆகும்.  இந்த திட்டத்தில் நீங்கள் ஒரு நாளைக்கு ரூ.150 முதலீடு செய்து உங்கள் குழந்தைகளின் உயிரைப் பாதுகாக்கலாம். 

மேலும் படிக்க | பங்கு சந்தை முதலீட்டில் ஆயிரத்தை கோடிகளாக்க வேண்டுமா... சில முதலீட்டு டிப்ஸ்! 

எல்ஐசி ஜீவன் தருண் திட்டத்தில் முதலீட்டாளர் ஒரு நாளைக்கு ரூ.150 முதலீடு செய்தால் வருடத்திற்கு நீங்கள் ரூ.54,000 சேமிக்கலாம்.  எல்ஐசி ஜீவன் தருணுக்கு இந்தத் தொகையை பிரீமியமாகச் செலுத்தினால், உங்களுக்கு திட்டத்தின் முடிவில் பெரியளவில் வருமானம் கிடைக்கும்.  இந்த திட்டத்தில் சேர குழந்தையின் குறைந்தபட்ச வயது 3 மாதங்கள் மற்றும் அதிகபட்சம் 12 ஆண்டுகள் வரை இருக்க வேண்டும்.  இதில் நீங்கள் குழந்தைக்கு 20 வயது வரை பிரீமியம் செலுத்த வேண்டும் மற்றும் 5 வருட லாக்-இன் பீரியட் உள்ளது.  உங்கள் குழந்தைக்கு 25 வயதாகும்போது ​உங்கள் குழந்தையின் கல்லூரிக் கட்டணம் அல்லது அவர்களின் திருமணத்திற்கு ஆகும் செலவு ஆகியவற்றிற்காக பணத்தை நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்.

எல்ஐசி ஜீவன் தருண் திட்டத்தில் குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை ரூ. 75000, இதில் காப்பீட்டுத் தொகைக்கு உச்ச வரம்பு என்று எதுவுமில்லை.  உங்கள் குழந்தைக்கு 12 வயது என்றால், பாலிசி காலம் 13 ஆண்டுகள் வரை இருக்கும், இதில் உங்கள் குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை ரூ.5 லட்சமாக இருக்கும்.  உங்கள் குழந்தையின் 12 வயதில் நீங்கள் ரூ.54,000 பிரீமியம் செலுத்தினால், மொத்தமாக உங்களின் முதலீடு ரூ.4,32,000 ஆக இருக்கும்.  எட்டு வருடங்கள் மற்றும் லாக்-இன் பீரியட் பிறகு, உங்களுக்கு ரூ.8,44,500 கிடைக்கும், இதன் மொத்த விலை ரூ.2,47,000 மற்றும் லாயல்டி போனஸ் ரூ.97,000 ஆகும்.  அதுவே உங்கள் குழந்தைக்கு 2 வயதாக இருக்கும்போது அடுத்த 18 ஆண்டுகளுக்கு ஒரு நாளைக்கு ரூ.171 முதலீடு செய்தால் உங்களின் மொத்த முதலீடு ரூ.1089196 ஆக இருக்கும்.  மேலும் 23 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த திட்டத்தின் மூலம் உங்களுக்கு ரூ.28,24,800 கிடைக்கும்.

மேலும் படிக்க | ITR Filing: ஆன்லைனில் ஐடிஆர் தாக்கல் செய்வது எப்படி? எந்தெந்த ஆவணங்கள் தேவை?x

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News