Vehicles Number Plates: இந்தியாவில் உள்ள பெரும்பாலான வாகனங்களில் வெள்ளை நிற நம்பர் பிளேட் இருப்பதை நீங்கள் கவனித்திருக்கிறீர்கள். அதில் இருக்கும் எழுத்துக்கள் மற்றும் எண்கள் கருப்பு நிறத்தில் எழுதப்பட்டிருக்கும், இது மிக பொதுவான ஒன்று. ஆனால் சில வாகனங்களில் சிவப்பு, பச்சை, நீலம் அல்லது மஞ்சள் நம்பர் பிளேட்கள் குறித்து நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா, அதில் உள்ள எழுத்துக்கள் மற்றும் எண்கள் வெவ்வேறு வண்ணங்களில் எழுதப்பட்டிருக்கும். இதை நீங்கள் கவனித்தால், இந்த வித்தியாசமான வண்ண நம்பர் பிளேட்டுகள் ஏன் உள்ளன, இதன் அர்த்தம் என்ன என்பதையும் நீங்கள் நிச்சயம் யோசிதிருப்பீர்கள்.
வெள்ளை நம்பர் பிளேட்டில் கருப்பு எண்கள்
இந்த நம்பர் பிளேட்டுகள் மிகவும் பொதுவானவை மற்றும் தனியார் வாகனங்களுக்கு வழங்கப்படுகின்றன. பெரும்பாலான கார்கள், மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்கள் போன்றவற்றில் இந்த எண் காணப்படுகிறது. இது மிகவும் பொதுவான நம்பர் பிளேட் ஆகும்.
மஞ்சள் நம்பர் பிளேட்டில் கருப்பு எண்கள்
வணிக வாகனங்களுக்கு இந்த நம்பர் பிளேட் பயன்படுத்தப்படுகிறது. இது டாக்சிகள், பேருந்துகள், லாரிகள் மற்றும் பிற வணிகம் தொடர்பான வாகனங்களில் காணப்படுகிறது. இதில் மஞ்சள் நிற எண் பலகையில் கருப்பு எழுத்துக்கள் எழுதப்பட்டிருக்கும்.
பச்சை நம்பர் பிளேட்டில் வெள்ளை எண்கள்
பச்சை நிற நம்பர் பிளேட்டுகளில் வெள்ளை நிறத்தில் எண்கள் எழுதப்பட்டிருந்தால் அது மின்சார வாகனங்களுக்குப் பயன்படுத்தப்படுகின்றன என அர்த்தம். இது மின்சார கார்கள், மின்சார பேருந்துகள் மற்றும் பிற மின்சார வாகனங்களில் காணப்படுகிறது.
பச்சை நம்பர் பிளேட்டில் மஞ்சள் எண்கள்
பச்சை நிறத்தில் உள்ள நம்பர் பிளேட்டுகளில், மஞ்சள் நிறத்தில் எண்கள் எழுதப்பட்டால் அது வணிக ரீதியிலான மின்சார வாகனங்களுக்கு வழங்கப்படுகின்றன என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இது மின்சார கார், மின்சார பேருந்து மற்றும் பிற மின்சார வாகனங்களாக கொடுக்கப்படுகிறது.
மேலும் படிக்க | உங்கள் காரில் இது இல்லை என்றால்... கேன்சர் பாதிப்பும் வரலாம் - உடனே பாருங்க
நீல நிற நம்பர் பிளேட்டில் வெள்ளை எண்கள்
வெளிநாட்டு தூதரக அதிகாரிகளுக்காக ஒதுக்கப்பட்ட வாகனங்களுக்கு நீல நிற நம்பர் பிளேட்டுகள் வழங்கப்படுகின்றன. அத்தகைய எண்ணைப் பார்க்கும் போதெல்லாம் அது வெளிநாட்டு தூதர்களுக்கு சொந்தமான வாகனம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
கருப்பு நம்பர் பிளேட்டில் மஞ்சள் எண்கள்
கருப்பு நம்பர் பிளேட்டில் மஞ்சள் எண்கள் கொண்ட நம்பர் பிளேட்டுகள் வாடகை கார்களுக்கானவை. சொகுசு ஹோட்டல்களால் பயன்படுத்தப்படும் வணிக கார்களில் இந்த எண் காணப்படுகிறது.
மேல் அம்புக்குறி
பாதுகாப்பு வாகனங்களுக்கு மேல்நோக்கி அம்புக்குறியுடன் கூடிய நம்பர் பிளேட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த நம்பர் பிளேட் பாதுகாப்பு அமைச்சகத்தின் வாகனங்களில் காணப்படுகிறது. ராணுவ அதிகாரிகள் இந்த நம்பர் பிளேட் கொண்ட கார்களை வைத்துள்ளனர்.
மேலும் படிக்க | பயங்கர விபத்திலும் உயிரை காப்பாற்றும்... டாப் 10 பாதுகாப்பான கார்கள் இதோ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ