Masked Aadhaar Card: உங்கள் தனிப்பட்ட தரவுகளை பாதுகாக்க நொடியில் பெறும் வழிமுறை..!!!

உங்கள் ஆதார் அட்டை எண் மற்றும் தனிப்பட்ட தரவுகளை பாதுகாக்க, வீட்டில் இருந்த படியே தகவல்கள் மறைக்கப்பட்ட ஆதார் அட்டையைப் (Masked Aadhaar Card) பதிவிறக்கம் செய்யலாம்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 15, 2021, 05:42 PM IST
  • UIDAI இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலிருந்து பெறலாம்
  • கடைசி நான்கு இலக்கங்கள் மட்டுமே தெரியும்
  • உங்கள் ஆதார் எண் பாதுகாப்பாக இருக்கும்.
Masked Aadhaar Card: உங்கள் தனிப்பட்ட தரவுகளை பாதுகாக்க நொடியில் பெறும் வழிமுறை..!!! title=

Masked Aadhaar Card: ஆதார் அட்டை மிக முக்கியமான ஆவணம். அனைத்து அரசு வேலைகளுக்கும் ஆதார் அட்டை அவசியம். ஆதார் அட்டையில் தனித்துவமான 12 இலக்க எண் உள்ளது. இப்போது, உங்கள் தனிப்பட்ட தரவுகள் மறைக்கப்பட்ட வகையிலான ஆதார் அட்டைகள் (Masked Aadhaar Card)  வரத் தொடங்கியுள்ளன. இதில் ஆதார் எண்ணின் கடைசி 4 இலக்கங்கள் மட்டுமே தெரியும். அதாவது "xxxx-xxxx"  என அடிப்படை எண்ணின் முதல் 8 இலக்கங்கள் தெரியாது. மாஸ்க் அணிந்த ஆதாரில், அசல் ஆதார் எண் மறைக்கப்பட்டுள்ளது. எனவே இதனை யாரும் அதை தவறாக பயன்படுத்த முடியாது.

தகவல்கள் மறைக்கப்பட்ட ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்வது எப்படி
மாஸ்க் அணிந்த ஆதார் அட்டையைப் பதிவிறக்க, உங்கள் மொபைல் எண்ணை UIDAI இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்யப்பட வேண்டும். மாஸ்க் அணிந்த ஆதார் பதிவிறக்கம் செய்ய, நீங்கள் இந்த வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

1. முதலில், UIDAI வலைத்தளத்திற்குச் சென்று, 'ஆதார் பதிவிறக்கம்' என்ற ஆப்ஷனுக்கு செல்லவும்.

2. இப்போது நீங்கள் ஆதார் / விஐடி / பதிவு ஐடியின் ஆப்ஷனை தேர்ந்தெடுத்து Masked ஆதார் விருப்பத்தை டிக் செய்ய வேண்டும்.

3. கொடுக்கப்பட்ட பிரிவில் தேவையான விவரங்களை உள்ளிட்டு 'Request OTP' என்பதைக் கிளிக் செய்யவும்.

4. உங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு OTP அனுப்பப்படும்.

5. OTP ஐ உள்ளிட்டு, மற்ற விவரங்களை உள்ளிட்டு, 'ஆதார் பதிவிறக்கம்' என்பதைக் கிளிக் செய்யவும்.

6. இதற்குப் பிறகு உங்கள் Masked ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்யலாம்.

7. டவுன்லோடு ஆதார் கார்ட் என்பதில் பாஸ்வேர்ட் கேட்கப்படும்.

இந்த செயல்முறையின் மூலம், உங்கள் கணினியில் PDF வடிவத்தில் பதிவிறக்கம் செய்யப்படும் ஆதார் அட்டை, கடவுச்சொல் மூலம் பாதுகாக்கப்படும். ஆதார் அட்டையை திறக்க நீங்கள் இந்த கடவுச்சொல்லை உள்ளிட வேண்டும். கடவுச்சொல்லில் உங்கள் பெயரின் முதல் நான்கு எழுத்துக்களும் பின்னர் பிறந்த ஆண்டும் கொண்டதாக இருக்கும். உதாரணமாக, ஒருவரின் பெயர் ரமேஷ் மற்றும் பிறந்த தேதி 27/08/1996 என்றால், அவருடைய கடவுச்சொல் rame1996 ஆக இருக்கும்.

அடையாளத்தை வெளிப்படுத்த  Masked  ஆதார் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், எந்தவொரு அரசாங்கத் திட்டத்தின் கீழும் நன்மைகளைப் பெற இதைப் பயன்படுத்த முடியாது.

Trending News