சென்னை: தமிழக ரேஷன் கடைகளில் இம்மாதம் முதல் தேதியில் இருந்து மீண்டும் பயோமேட்ரிக் மூலம் அடையாளம் சரி பார்த்த பிறகு ரேஷன் பொருட்களைத் தரும் நடைமுறை தொடங்கிவிட்டது.
பயோமெட்ரிக் முறையில் (Biometric System) பொருட்களை விநியோகம் செய்யும் முறை கொரோனா தொற்றுக்கு முன்னர் இருந்தது. கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்த செயல்முறை நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த செயல்முறையில் தொற்று பரவும் அபாயம் அதிகமாக இருந்ததால், இது தற்காலிகமாக, தொற்று கட்டுக்குள் வரும்வரை கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
தற்போது கொரோனா தொற்றின் அளவு வெகுவாக குறைந்துள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் (Ration Shops) பயோமெட்ரிக் செயல்முறை மீண்டும் அமலுக்கு வந்தது.
இருப்பினும், கொரோனா போன்ற தொற்று பரவல் உள்ள காலகட்டத்தில் ரேசன் கடைகளில் கைரேகையை பதிவு செய்யும் போது அதிலிருந்து தொற்று பரவ வாய்ப்பு உள்ளதால் பழைய நடைமுறைகள் படியே பொருட்களை விநியோகம் செய்ய வேண்டும் என்று மக்கள் கேட்டுக் கொள்கின்றனர். அதிலும் கொரோனா வைரஸ் பரவலின் தாக்கங்கள் தற்போது தான் குறைந்துவரும் நிலையில் மூன்றாம் அலை வரும் என்ற அச்சங்களுக்கு மத்தியில் இந்த கோரிக்கையை அரசு ஏற்றுக் கொள்ளலாம்.
Also Read | Ration Card: ரேஷன் அட்டையில் உள்ள குறியீடுகளுக்கு அர்த்தம் தெரியுமா?
'ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு' திட்டத்தின்படி போலி ரேசன் கார்டுகளை ஒழிப்பதற்காக பயோமெட்ரிக் முறை கொண்டு வரப்பட்டது. இதனால் பெரும்பாலான போலி அட்டைகள் ரத்து செய்யப்பட்டன. இந்த திட்டத்தின்படி, ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் நாட்டில் எங்கு வேண்டுமானாலும் ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.
ரேஷன் கார்டில் உள்ளவர்களின் பெயர்களுடன் அவர்களின் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதால், கைரேகை சரியாக இருந்தால் தான் ரேஷன் பொருட்கள் வழங்கப்படும். இதனால், குடும்ப உறுப்பினராக இல்லாத யாரும் ரேஷன் கார்டை பயன்படுத்தி பொருட்களை வாங்க முடியாது.
பல ரேஷன் அட்டைகளுக்கு ஒரு நபரே பொருட்களை வாங்கும் பழக்கத்தையும் பயோ மெட்ரிக் முறை ஒழித்துவிட்டது. ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், தனித்தனியாக ரேஷன் கார்டு வைத்து இருந்தால் அவர்களே நேரடியாக ரேஷன் கடைக்கு சென்று பொருட்களை வாங்க வேண்டும். ரேஷன் கார்டில் பெயர் உள்ள உறுப்பினர்கள் யாராவது ஒருவர் ரேஷன் கடைக்கு நேரில் சென்று கைரேகை பதிவு செய்தால் மட்டுமே பொருட்களை வாங்கமுடியும்.
Also Read | ரேஷன் கார்டில் இருந்து பெயரை நீக்க சுலபமான வழிமுறைகள் இவை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR