Coffee Drinking Habit: காலையும், மாலையும் காபி குடிக்கும் பழக்கம் அனைவருக்கும் இருக்கும். லட்சக்கணக்கானோரின் இந்த பழக்கம் குறித்து ஆய்வு செய்ததில், சுமார் 60% மக்கள் தினமும் காபி குடிக்க விருப்பப்படுகிறார்கள் என தெரிய வருகிறது. காபியில் அதிகம் காணப்படும் காஃப்பின் தான் அதனை அதிகமானோர் விரும்புவதற்கான முக்கிய காரணம்.
காஃப்பின் என்பது உங்களுக்கு டக்கென ஒரு சுறுசுறுப்பை கொடுக்கும், உங்களின் மூளையில் தாக்கத்தை ஏற்படுத்தி உங்களின் சோர்வை குறைக்கும். காபியில் ஆண்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம். இதனால் அலர்ஜிகளுக்கு எதிராக சண்டையிட்டு, செல்களை பாதிக்கும் விஷயங்களை நீக்கும். செல்கள் அதிகம் சேதமடைந்தால் புற்றுநோய், இதய நோய், சர்க்கரை வியாதி ஆகியவை தாக்கும். மேலும், காபி செரிமானத்திற்கு உதவும். எனவேதான், காலையில் காபி குடித்தவுடன் ஃபாத்ரூம் செல்கிறீர்கள். இவை அனைத்தும் காபியால் கிடைக்கும் பயன்கள் எனலாம்.
காபி கல்லீரலை பாதிக்குமா?
அதே நேரத்தில், காபி குறித்து பல்வேறு தகவல்கள் உலா வருகின்றன. அதிலும் காபி உங்களின் கல்லீரலை பாதிக்கும் என்ற தகவல் அதிகமாக பரவி வருகிறது. அந்த வகையில், உண்மையாகவே காபி கல்லீரலை பாதிக்குமா என்பது குறித்து இங்கு காணலாம். அதற்கு முன் கல்லீரல் நமது உடலில் ஏன் முக்கியமான உறுப்பு என்பதையும் இங்கு சற்று விரிவாக பார்ப்போம்.
மேலும் படிக்க | காபி பிரியர்களே உஷார்.... ஒரு நாளைக்கு எவ்வளவு காபி குடிக்கலாம் தெரியுமா?
ஒருவரின் கல்லீரல் என்பது 500 விதமான செயல்பாடுகளை செய்யும். அது உங்களின் உணவில் இருந்து புரதம், கார்போஹைட்ரேட்ஸ், கொழுப்பு ஆகியவை எடுத்து அதனை உங்கள் உடலுக்கு தேவையான சக்தியாக மாற்றும். உடலுக்கு தேவையான புரதம் மற்றும் இரசாயனங்களை அதுவே உற்பத்தி செய்துகொள்ளும், மேலும் ரத்தத்தை சுத்தம் செய்து, அதன் அசுத்தங்களை வெளியேற்றும், மருந்துகளில் இருந்து உங்களுக்கு தேவையானதை பிரிடுத்தெடுக்கும். இத்தனை வேலைகளை செய்வதன் மூலமே தெரிந்திருக்கும், ஆரோக்கியமான கல்லீரல் எவ்வளவு முக்கியம் என்று...
கல்லீரலுக்கு நன்மை தருமா?
அவ்வளவு முக்கியமான கல்லீரலை காபி பாதிக்குமா என்றால் இல்லை என்றுதான் கூறப்படுகிறது. காபி கல்லீரலை பாதிக்காமல் அதனை ஊக்கப்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. காபி எவ்வாறு கல்லீரலுக்கு உதவுகிறது என்பதை இங்கு பாருங்கள்.
- காபியில் கிளோரோஜெனிக் அமிலம் உள்ளிட்ட ஆண்டிஆக்ஸிடன்ட் ஆகியவை உள்ளது. இது கல்லீரல் குளூகோஸை செயல்படுத்துவதில் உதவும். இதனால் கல்லீரலில் கொழுப்பு தங்காது.
- காபி தொடர்ந்து குடிப்பது உடலில் அலர்ஜி ஏற்படுவதை தடுக்கும். இதனால், கல்லீரல் சார்ந்த நோய்கள் ஏற்படாமலும் காபி உதவும்.
இதுபோன்ற காபி கல்லீரலுக்கு உதவிக்கரமாக இருப்பதன் மூலம், நீண்ட காலத்திற்கான கல்லீரல் நோய், கல்லீரல் புற்றுநோய் ஆகியவை ஏற்படும் வாய்ப்பு மிக மிக குறைவாகும். எனவே, கல்லீரலை காபி பாதிக்கும் என்பதற்கு இன்னும் சரியான ஆதாரங்கள் இல்லை என கூறலாம்.
மேலும் படிக்க | காலையில் டீயுடன் பிஸ்கட் சாப்பிடுபவரா நீங்கள்? இந்த ஆபத்துகள் வரலாம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ