உன்மையில் ஆடைகள் தான் பாலியல் வன்கொடுமைகளுக்கு காரணமா?

பாலியல் பலாத்காரத்தில் பாதிக்கப்பட்டவர்களிடம் பரவலாக முன்வைக்கப்படும் கேள்விகளில் ஒன்று, "உங்கள் அனுபவத்தை பற்றி கூறுங்கள்" என்பது தான்!

Last Updated : Jan 16, 2018, 06:28 PM IST
உன்மையில் ஆடைகள் தான் பாலியல் வன்கொடுமைகளுக்கு காரணமா? title=

பாலியல் பலாத்காரத்தில் பாதிக்கப்பட்டவர்களிடம் பரவலாக முன்வைக்கப்படும் கேள்விகளில் ஒன்று, "உங்கள் அனுபவத்தை பற்றி கூறுங்கள்" என்பது தான்!

இந்த கேள்வி எவ்வளவு கொடுமையானது என்பதினை பாதிக்கப்பட்டவர்கலால் மட்டுமே உனர முடியும், இதனை மற்றவர்களும் உனரவேண்டும் எனும் நோக்கில், பெல்ஜியத்தில் ஒரு கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

"Is It My Fault?" என்னும் தலைப்பில் ஒருங்கினைக்கப்பட்ட இந்த கண்காட்சியில், பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்டவர்களின் ஆடைகள் (பலாத்காரத்தின் போது அணிந்திருந்த ஆடை) காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது. பைஜாமாக்கள், டிராக்ஷூட்ஸ் மற்றும் ஒரு குழந்தையின் என் லிட்டில் போனி ஷர்ட் போன்ற பொருட்கள் பாதிக்கப் பட்டவர்களிடமிருந்து பெற்று வைக்கப்பட்டுள்ளது.

இந்த காண்காட்சியின் நோக்கமானது, பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களின் வேதனையினை அறிய வேண்டும் என்பதும், பாலியல் வன்கொடுமைக்கு ஆடை ஒரு தூண்டுதல் காரணி இல்லை என்பதினை உனர்த்த வேண்டும் என்பதே ஆகும்.

இந்த கண்காட்சியை காணவருவோரின் நெஞ்சம் நிச்சையம் கரையும் என்பது தான் உன்மை., உன்மையில் ஆடைகள் தான் பாலியல் வன்கொடுமைக்கு தூண்டுதலாய் அமைகிறது எனில், இந்த கண்காட்சியில் இடம்பெற்றுள்ள சிறுகுழந்தைகளின் ஆடை அதற்கு சரியான பதிலளிக்கும்.

இந்த கண்காட்சி வரும் ஜன., 20 வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது!

Trending News