IRCTC news: குறைந்த செலவில் தென் இந்தியக் கோயில்களுக்கு செல்ல ஒரு அரிய வாய்ப்பு

IRCTC-யின் பாரத்தர்ஷன் சுற்றுலா ரயில் சுற்றுப்பயண தொகுப்பின் கீழ் குறைந்த பட்ஜெட்டில் தென்னிந்தியா சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள ஒரு நல்ல வாய்ப்பு வந்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 16, 2020, 06:35 PM IST
  • IRCTC தென்னிந்தியாவில் உள்ள கோயில்களுக்கான சிறப்பு பாக்கேஜை அறிவித்துள்ளது.
  • IRCTC வலைத்தளத்திலிருந்து இந்த டூர் தொகுப்புக்கு நீங்கள் புக்கிங் செய்யலாம்.
  • சுற்றிப்பார்க்க பயணிகள் ஏசி அல்லாத பேருந்துகளில் அழைத்துச் செல்லப்படுவார்கள்.
IRCTC news: குறைந்த செலவில் தென் இந்தியக் கோயில்களுக்கு செல்ல ஒரு அரிய வாய்ப்பு title=

புதிய ஆண்டில் நீங்கள் எங்காவது செல்ல திட்டமிட்டுள்ளீர்களா? அப்படியானால் இந்த செய்தி உங்களுக்கு உதவலாம். குறைந்த பட்ஜெட்டில் தென்னிந்தியா சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள ஒரு நல்ல வாய்ப்பு வந்துள்ளது.

IRCTC-யின் பாரத்தர்ஷன் சுற்றுலா ரயில் சுற்றுப்பயண தொகுப்பின் கீழ் தென்னிந்தியாவில் உள்ள கோயில்களைப் பார்வையிட IRCTC, South India Temple Tours (SCZBD33) அதாவது தென்னிந்திய கோயில்களின் சுற்றுப்பயணத்தை அறிவித்துள்ளது. இந்த டூர் தொகுப்பின் கீழ், 02.01.2020 அன்று இரவு 22:00 மணிக்கு புவனேஸ்வரில் இருந்து ரயில் புறப்படும்.

இங்கிருந்து இந்த பயண தொகுப்புக்கு புக்கிங் செய்யலாம்

IRCTC வலைத்தளத்திலிருந்து இந்த டூர் தொகுப்புக்கு நீங்கள் புக்கிங் செய்யலாம். இது தவிர, நீங்கள் IRCTC-யின் Fecilitation Center, Zonal Offices மற்றும் Regional Offices (வசதி மையம், மண்டல அலுவலகங்கள் மற்றும் பிராந்திய அலுவலகங்கள்) ஆகியவற்றிலிருந்து புக் செய்யலாம். 7 இரவுகள் மற்றும் 8 நாட்கள் கொண்ட இந்த டூர் தொகுப்பின் (Tour Package) கீழ், நீங்கள் ராமேஸ்வரம், மதுரை மற்றும் திருப்பதி ஆகிய இடங்களுக்கு செல்லலாம்.

ALSO READ: டிசம்பர் 31 வரை 34 ரயில்கள் ரத்து! Indian Railways அதிரடி உத்தரவு!

இந்த ரயில் நிலையங்களிலிருந்து ரயிலில் ஏறலாம்

IRCTC-யின் இந்த டூர் பேக்கேஜின் கீழ் முன்பதிவு செய்வதன் மூலம், நீங்கள் இந்த ரயிலில் புவனேஸ்வர், குர்தா சாலை, பெர்ஹாம்பூர், ஸ்ரீகாகுளம், விஜயநகரம், விசாகப்பட்டினம், விஜயவாடா (Vijayawada) ஆகிய இடங்களிலிருந்து ஏறிக்கொள்ளலான்.

இதுதான் கட்டணம்

இந்த டூர் தொகுப்புக்கு நீங்கள் ஸ்டாண்டர்ட் வகுப்பில் முன்பதிவு செய்தால், 8,085 ரூபாய் செலுத்த வேண்டும். இதன் கீழ், ஸ்லீப்பர் வகுப்பில் (Sleeper Class) பயணம் இருக்கும். கம்ஃபர்ட் கிளாசின் கீழ் 3AC வகுப்பில் பயணம் இருக்கும். நீங்கள் கம்ஃபர்ட் கிளாசில் புக்கிங் செய்ய விரும்பினால், கட்டணமாக ரூ .9,765 செலுத்த வேண்டும். இந்த சுற்றுப்பயணத்தின் கீழ் தர்மசாலையில் பயணிகள் தங்கவைக்கப் படுவார்கள். சுற்றிப்பார்க்க ஏசி அல்லாத பேருந்துகளில் அழைத்துச் செல்லப்படுவார்கள். 

ALSO READ: Indian Railways டிக்கெட் புக்கிங் விதிகளில் பெரிய மாற்றம்: விவரம் உள்ளே

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News