IRCTC News: டிக்கெட் முன்பதிவு செய்யும் போது இந்த புதிய விதியை மனதில் கொள்ளுங்கள்

IRCTC News Update: நீங்கள் ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்யப் போகிறீர்களா? ரயிலில் நீண்ட Waiting List இல் இருந்தால், டிக்கெட் முன்பதிவு செய்யும் போது சில விஷயங்களை மனதில் வைத்திருப்பது மிகவும் முக்கியம்.

Last Updated : Jan 29, 2021, 05:15 PM IST
IRCTC News: டிக்கெட் முன்பதிவு செய்யும் போது இந்த புதிய விதியை மனதில் கொள்ளுங்கள் title=

IRCTC News Update: நீங்கள் ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்யப் போகிறீர்களா? ரயிலில் நீண்ட Waiting List இல் இருந்தால், டிக்கெட் முன்பதிவு செய்யும் போது சில விஷயங்களை மனதில் வைத்திருப்பது மிகவும் முக்கியம். உண்மையில், இந்திய ரயில்வேயின் (Indian Railways) புதிய விதியின் கீழ், ஒவ்வொரு ரயிலிலும் waiting tickets முன்பதிவு செய்வதற்கு Maximum Waiting List Limit வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வரம்பு முடிந்த பிறகு, நீங்கள் ஒரு டிக்கெட்டை முன்பதிவு செய்தால், உங்கள் கணக்கிலிருந்து பணம் கழிக்கப்படும், ஆனால் உங்களுக்கு டிக்கெட் கிடைக்காது.

பணம் கணக்கில் திருப்பித் தரப்படும்
உங்கள் கணக்கிலிருந்து பணம் கழிக்கப்பட்டு உங்களுக்கு டிக்கெட் (Ticket) கிடைக்கவில்லை என்றால், நீங்கள் கவலைப்பட தேவையில்லை. அடுத்த 3-5 working days இல் உங்கள் பணம் உங்கள் கணக்கில் திரும்பும். இதற்காக நீங்கள் எங்கும் படிவத்தை நிரப்பவோ விண்ணப்பிக்கவோ தேவையில்லை. தானியங்கி அமைப்பு மூலம், உங்கள் பணம் உங்கள் கணக்கில் திரும்பும்.

ALSO READ: வந்துவிட்டன IRCTC App மற்றும் புதிய வலைத்தளம்: இப்ப ticket புக் செய்வது இன்னும் easy ஆனது!!

உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டில் மட்டுமே நீங்கள் பயணிக்க முடியும்
கொரோனா தொற்றுநோய் (Corona epidemic) காரணமாக, இந்திய ரயில்வே (Indian Railways) குறைவான ரயில்களை இயக்குகிறது. அதே நேரத்தில், உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டுகளில் மட்டுமே ரயில் பயணிக்க அனுமதிக்கப்படுகிறது. குறைந்த ரயில்கள் ஓடுவதால், சில ரயில்களில் நீண்ட waiting list காணப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் போது உங்களுக்கு டிக்கெட் கிடைக்கவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம்.

பணத்தைத் திரும்பப் பெறுவது தொடர்பான தகவலை ரயில்வே வழங்கியது
Train tickets cancellation refund: Lockdown போது, ​​ரயில்வே அமைச்சகம் (Railways Ministry) அதன் அனைத்து ரயில் சேவைகளையும் நிறுத்தியது. இருப்பினும், சிறிது நேரம் கழித்து சிறப்பு ரயில்கள் ஓட ஆரம்பித்தன. இந்த நேரத்தில் மக்கள் அந்தந்த இடங்களுக்குச் செல்ல டிக்கெட் முன்பதிவு செய்திருந்தனர், மேலும் பலர் டிக்கெட்டுகளையும் ரத்து செய்திருந்தனர். டிக்கெட்டை ரத்து செய்தவர்களுக்கு ரயில்வே தங்கள் பணத்தை திருப்பி அளித்திருந்தாலும், இன்னும் பணத்தைத் திரும்பப் பெறாத பலர் இன்னும் உள்ளனர். அத்தகையவர்களுக்கு, டிக்கெட்டுகளை ரத்து செய்வதற்கான விதிகளில் ரயில்வே அமைச்சகம் சிறிது தளர்வு அளித்துள்ளது.

ரத்து செய்யப்பட்ட டிக்கெட்டுகளை இதுவரை பல பயணிகள் திரும்பப் பெறவில்லை என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, டிக்கெட் ரத்துசெய்யும் காலத்தை அதிகரிக்க ரயில்வே மண்டலம் கோரியிருந்தது. இதைக் கருத்தில் கொண்டு, ரயில்வே அமைச்சகம் இந்த காலகட்டத்தை 6 மாதங்களிலிருந்து 9 மாதங்களாக உயர்த்தியுள்ளது. டிக்கெட் திரும்பப் பெறுவதற்கான கால அவகாசத்தை இந்திய ரயில்வே 6 மாதங்களிலிருந்து 9 மாதங்களாக உயர்த்தியுள்ளது.

ALSO READ: அறிமுகமாகும் IRCTCயின் புதிய வலைதளத்தின் நவீன அம்சங்கள் என்ன?

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News