IRCTC வலைதளத்தில் சிக்கல்... ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் தவிப்பு

IRCTC இணையதளம் இன்று காலையில் முடங்கியது. தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும் நேரத்தில் ஐஆர்சிடிசி தளம் செயலிழந்த நிலையில், தற்போது பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதாக ஐஆர்சிடிசி இணையதளத்தில் செய்தி வருகிறது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 9, 2024, 01:03 PM IST
IRCTC வலைதளத்தில் சிக்கல்... ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் தவிப்பு title=

IRCTC இணையதளம் இன்று காலையில் முடங்கியது. தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும் நேரத்தில் ஐஆர்சிடிசி தளம் செயலிழந்த நிலையில், தற்போது பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதாக ஐஆர்சிடிசி இணையதளத்தில் செய்தி வருகிறது. எனவே அடுத்த 1 மணி நேரத்திற்கு முன்பதிவு செய்ய முடியாது என கூறப்பட்டது. பல பயனர்கள் சமூக ஊடகங்களில் இணைய தள செயலிழப்பு குறித்து புகார் அளித்தனர்.

இணையதள நிலையை ட்ராக் செய்யும் டவுன் டிகெட்டரும் இணையதள செயலிழப்பை உறுதி செய்துள்ளது. IRCTC சேவை நிறுத்தப்பட்ட பிறகு, TATKAL மற்றும் IRCTC ஆகிய இரண்டு சொற்களும் டிரெண்டிங் ஆனது. வழக்கமாக இரவு 11 மணிக்கு மேல் பராமரிப்பு பணிகள் நடக்கும். எனவே, இது சைபர் தாக்குதலாக இருக்குமே என்ற சந்தேகம் பலர் மனதில் எழுந்துள்ளது.

தட்கல் டிக்கெட் முன்பதிவு காலை 10-11 மணிக்குள் நடைபெறும் நிலையில், ஐஆர்சிடிசி ஆப் மற்றும் மொபைல் இரண்டிலும் சிக்கல்களை சந்தித்தனர். பயனர்கள் ஐஆர்சிடிசி செயலியை திறக்க முடியாமல் தவித்தனர். இணைய தளத்தைத் திறந்த பிறகு, அவர்களுக்கு பராமரிப்பு செய்தி வந்ததால் டிக்கெட் புக் செய்ய இயலவில்லை.

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) இணையதளம் மற்றும் செயலி தொழில்நுட்ப கோளாறு காரணமாக திங்கள்கிழமை (டிசம்பர் 9) சுமார் 1 மணி நேரம் மூடப்பட்டது எனவும் கூறியுள்ளது. அவர்கள் வெளியிட்ட செய்தியில், ‘பராமரிப்பு நடவடிக்கை காரணமாக இ-டிக்கெட் சேவை தற்பொஒது இல்லை. பிறகு முயற்சிக்கவும். TDR ரத்து/கோப்புக்கு, வாடிக்கையாளர் சேவை எண்ணை அழைக்கவும். 14646, 0755-6610661 மற்றும் 0755-4090600 அல்லது etickets@irctc.co.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்’ என அதில் குறிப்பிட்டிருந்தது.

இருப்பினும், இப்போது இணையதளம் மற்றும் செயலியின் சேவை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. அதே நேரத்தில், இன்று மாலை 4 மணி முதல் நாளை மாலை 4 மணி வரை அதாவது டிசம்பர் 10 ஆம் தேதி வரை ஐஆர்சிடிசியில் புதிய பதிவு, உள்நுழைவு கடவுச்சொல் மற்றும் சுயவிவர கடவுச்சொல்லை புதுப்பித்தல் சாத்தியமில்லை என்று ஐஆர்சிடிசி இணையதளத்தில் தெரிவித்துள்ளது. IRCTC இணையதளம் மற்றும் செயலி கடந்த மாதமும் செயலிழந்தது. பல பயனர்கள் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதில் சிரமத்தை எதிர்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | 6 நாள்கள் டிசம்பரில் ஜம்முனு டூர் போகலாம்... IRCTC-இன் அசத்தல் சுற்றுலா பிளான் - கம்மி கட்டணத்தில்!

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) என்பது இந்திய அரசின் ரயில்வே அமைச்சகத்தின் கீழ் உள்ள 'மினி ரத்னா (வகை-I)' மத்திய பொதுத்துறை நிறுவனமாகும். ஐஆர்சிடிசி 27 செப்டம்பர் 1999 அன்று இந்திய ரயில்வேயின் ஒரு கிளையாக இணைக்கப்பட்டது. ரயில் நிலையங்கள், ரயில்கள் மற்றும் பிற இடங்களில் கேட்டரிங் மற்றும் விருந்தோம்பலை நிர்வகிப்பதே இதன் நோக்கம். இதனுடன், பட்ஜெட் ஹோட்டல்கள், சிறப்பு சுற்றுலா தொகுப்புகள், தகவல் மற்றும் வணிக விளம்பரம் மற்றும் உலகளாவிய முன்பதிவு முறை ஆகியவற்றின் மூலம் உள்நாட்டு மற்றும் சர்வதேச சுற்றுலாவை மேம்படுத்த ஐஆர்சிடிசி அமைக்கப்பட்டது.

IRCTC நிறுவனத்தின் முக்கிய செயல்பாடுகள்

கேட்டரிங் மற்றும் விருந்தோம்பல்
இணைய டிக்கெட் முன்பதிவு
சுற்றுலா
பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர் (ரயில் நீர்)

மேலும் படிக்க | ரயில் டிக்கெட்டை வேறொருவருக்கு மாற்றலாம்... தேதியையும் மாற்றலாம்... இதோ வழிமுறை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News