பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த நாட்டில் வட்டி விகிதங்கள் அதிகரித்து வரும் நிலையில், வங்கிகள் தங்களது அதிக நிதிச் செலவுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்காக வட்டி விகிதங்களை உயர்த்தி வருகின்றன. ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, பேங்க் ஆஃப் பரோடா மற்றும் கோடக் மஹிந்திரா வங்கி உள்ளிட்ட வங்கிகள் வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளன. வட்டி விகிதங்களை உயர்த்திய வங்கிகளின் சமீபத்திய பட்டியலில் ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி பல்வேறு காலகட்டங்களில் அதன் ஃபிக்ஸட் டெபாசிட்டுகளின் விகிதங்களைத் திருத்தி அமைத்துள்ளது.
மேலும் படிக்க | 7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு மாஸ் செய்தி, மே 31-க்குள் அறிவிப்பு
2 கோடிக்கும் குறைவான ஃபிக்ஸட் டெபாசிட்டுகளின் வட்டி விகிதத்தில் திருத்தம் செய்யப்பட்டதும், வங்கியானது 7 முதல் 29 நாட்களுக்கு எஃப்டிகளுக்கான விகிதங்களை முந்தைய 2.5 சதவீதத்தில் இருந்து 3.50 சதவீதமாக மே 23 முதல் உயர்த்தியுள்ளது. கடந்த வெள்ளியன்று ரூ.2 கோடிக்கு மேல் உள்ள டெபாசிட்களுக்கான வட்டி விகிதங்களையும் வங்கி திருத்தியுள்ளது. ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கியில் ரூ. 2 கோடிக்குக் குறைவான நிலையான வைப்புத்தொகைக்கான திருத்தப்பட்ட வட்டி விகிதங்கள் இங்கே:
7 நாட்கள் முதல் 14 நாட்கள் வரை பொது மக்களுக்கு - 3.50 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு - 4.00 சதவீதம் வழங்கப்படும். 15 நாட்கள் முதல் 29 நாட்கள் வரை பொது மக்களுக்கு - 3.50 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு - 4.00 சதவீதமும் வழங்கப்படும். 30 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை பொது மக்களுக்கு - 4.00 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு - 4.50 சதவீதமும் வழங்கப்படும். 46 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை பொது மக்களுக்கு - 4.00 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு - 4.50 சதவீதமும் வழங்கப்படும். 91 நாட்கள் முதல் 180 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 4.50 சதவீதமும் மூத்த குடிமக்களுக்கு - 5.00 சதவீதமும் வழங்கப்படும். 181 நாட்கள் முதல் 1 வருடம் வரை பொது மக்களுக்கு - 5.75 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு - 6.25 சதவீதம் வழங்கப்படும். 1 ஆண்டு-2 ஆண்டுகள்: பொது மக்களுக்கு - 6.00 சதவீதம், மூத்த குடிமக்களுக்கு - 6.50 சதவீதம் வழங்கப்படும். 2 ஆண்டுகள் 1 நாள்-3 ஆண்டுகள் பொது மக்களுக்கு - 6.00 சதவீதம், மூத்த குடிமக்களுக்கு - 6.50 சதவீதம் வழங்கப்படும். 3 ஆண்டுகள் 1 நாள்-5 ஆண்டுகள் பொது மக்களுக்கு - 6.25 சதவீதம், மூத்த குடிமக்களுக்கு - 6.75 சதவீதம் வழங்கப்படும். 5 ஆண்டுகள் 1 நாள்-10 ஆண்டுகள் பொது மக்களுக்கு - 6.00 சதவீதம், மூத்த குடிமக்களுக்கு - 6.50 சதவீதம் வழங்கப்படும்.
ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்கில் (மே 27 முதல் அமலுக்கு வரும்) ரூ.2 கோடி முதல் ரூ.5 கோடி வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட்டுகளின் திருத்தப்பட்ட வட்டி விகிதங்கள் இதோ:
7 நாட்கள் முதல் 14 நாட்கள் வரை பொது மக்களுக்கு - 3.90 சதவீதம், மூத்த குடிமக்களுக்கு - 4.40 சதவீதம் வழங்கப்படும். 15 நாட்கள் முதல் 35 நாட்கள் வரை பொது மக்களுக்கு - 3.90 சதவீதம், மூத்த குடிமக்களுக்கு - 4.40 சதவீதம் வழங்கப்படும். 36 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை பொது மக்களுக்கு - 3.95 சதவீதம், மூத்த குடிமக்களுக்கு - 4.45 சதவீதம் வழங்கப்படும். 46 நாட்கள் முதல் 60 நாட்கள் வரை பொது மக்களுக்கு - 4.10 சதவீதம், மூத்த குடிமக்களுக்கு - 4.60 சதவீதம் வழங்கப்படும். 61 நாட்கள் முதல் 91 நாட்கள் வரை பொது மக்களுக்கு - 4.85 சதவீதம், மூத்த குடிமக்களுக்கு - 5.35 சதவீதம் வழங்கப்படும். 92 நாட்கள் முதல் 180 வரை பொது மக்களுக்கு - 5.10 சதவீதம், மூத்த குடிமக்களுக்கு - 5.60 சதவீதம் வழங்கப்படும். 181 நாட்கள்-270 ஆண்டுகள் பொது மக்களுக்கு - 5.50 சதவீதம், மூத்த குடிமக்களுக்கு - 6.00 சதவீதம் வழங்கப்படும். 271 நாட்கள்-365 ஆண்டுகள் பொது மக்களுக்கு - 6.00 சதவீதம், மூத்த குடிமக்களுக்கு - 6.50 சதவீதம் வழங்கப்படும்.
366 நாட்கள்-399 நாட்கள் பொது மக்களுக்கு - 6.25 சதவீதம், மூத்த குடிமக்களுக்கு - 6.75 சதவீதம் வழங்கப்படும்.
400 நாட்கள்-540 நாட்கள் பொது மக்களுக்கு - 6.25 சதவீதம், மூத்த குடிமக்களுக்கு - 6.75 சதவீதம் வழங்கப்படும். 541 நாட்கள்-731 நாட்கள் பொது மக்களுக்கு - 6.25 சதவீதம், மூத்த குடிமக்களுக்கு - 6.75 சதவீதம் வழங்கப்படும்.
731 நாட்கள்-1095 நாட்கள் பொது மக்களுக்கு - 6.25 சதவீதம், மூத்த குடிமக்களுக்கு - 6.75 சதவீதம் வழங்கப்படும். 3 ஆண்டுகள் 1 நாள்-5 ஆண்டுகள் பொது மக்களுக்கு - 6.50 சதவீதம், மூத்த குடிமக்களுக்கு - 7.00 சதவீதம் வழங்கப்படும். 5 ஆண்டுகள் 1 நாள்-8 ஆண்டுகள் பொது மக்களுக்கு - 6.50 சதவீதம், மூத்த குடிமக்களுக்கு - 7.00 சதவீதம் வழங்கப்படும். 8 ஆண்டுகள் 1 நாள்-10 ஆண்டுகள் பொது மக்களுக்கு - 6.50 சதவீதம், மூத்த குடிமக்களுக்கு - 7.00 சதவீதம் வழங்கப்படும்.
மேலும் படிக்க | 7th Pay Commission: ஜூலை மாதம் அதிகரிக்கிறதா அகவிலைப்படி, சமீபத்திய அப்டேட் இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR