train ticket booking Updates : நாள்தோறும் நாடு முழுவதும் கோடிக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணிக்கின்றனர். பயணிகளுக்காக பல்வேறு வசதிகளையும் இந்தியன் ரயில்வே செய்து கொடுக்கிறது. குறிப்பாக மூத்த குடிமக்களுக்காக ரயில்வே துறை பல விதிகளை உருவாக்கியுள்ளது. அவர்களால் மேல் இருக்கைக்கு ஏற முடியாது என்பதால் கீழ் பெர்த் இருக்கைகளை தேர்வு செய்து கொள்ள முடியும்.
மூத்த குடிமக்கள் ரயிலில் எவ்வாறு கீழ் பெர்த் பெறுவது, இதற்கு என்ன முறைகளை பின்பற்ற வேண்டும் என்பதை ஐஆர்டிசி விதிமுறைகள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள். ரயில் பயணத்தின்போது மூத்த குடிமக்கள் சிரமத்தை எதிர்கொள்ள கூடாது என்பதற்காகவே ஐஆர்சிடிசி பிரத்யேக முன்பதிவு ரயில் டிக்கெட் விதிமுறைகளை வகுத்து வைத்திருக்கிறது.
மேலும் படிக்க | CGHS புதிய விதிகள்: மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அரசு அளித்த நிவாரணம்
கீழ் பெர்த் இருக்கையை எப்படி பதிவு செய்வது
பொது ஒதுக்கீட்டின் கீழ் டிக்கெட் முன்பதிவு செய்தால், இருக்கை இருந்தால் மட்டுமே இருக்கை ஒதுக்கீடு கிடைக்கும் என ரயில்வே தெரிவித்துள்ளது. இருக்கை இல்லை என்றால் கிடைக்காது. லோயர் பெர்த் ஒதுக்க வேண்டும் என முன்பதிவு செய்யும்போது அந்த ஆப்சனை கொடுத்தால் மட்டுமே கீழ் பெர்த் கிடைக்கும். தினமும் லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான மக்கள் ரயில்வேயில் பயணம் செய்யும் சூழ்நிலையில் எல்லோருக்கும் லோயர் பெர்த் இருக்கை கிடைப்பது சாத்தியமில்லை. எனவே, பொது ஒதுக்கீட்டின் கீழ் முன்பதிவு செய்பவர்களுக்கு இருக்கைகள் இருக்கும்போது மட்டுமே லோயர் பெர்த் இருக்கைகள் ஒதுக்கப்படும்.
ஒருவேளை உங்களுக்கு கட்டாயம் லோயர் பெர்த் வேண்டும் என்றால் டிக்கெட் பரிசோதகரிடம் ரயில் பயணத்தின்போது கோரிக்கையாக வைக்கலாம். அவர் வாய்ப்பு இருந்தால் உங்களின் கோரிக்கையை நிறைவேற்றிக் கொடுக்க ஒரு வாய்ப்பு இருக்கிறது. மேலும், சக பயணிகளிடமும் மூத்த குடிமக்களின் நிலையை எடுத்துக்கூறி லோயர் பெர்த் பெற்றுக் கொள்ளலாம்.
கொரோனா வைரஸ் பரவலுக்குப் பிறகு ரயில்வே விதிமுறைகளில் பெரும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை முதல் இருக்கை ஒதுக்கீடு வரை எல்லாம் மாற்றப்பட்டிருக்கிறது. எனவே ரயில் பயணத்துக்காக டிக்கெட் முன்பதிவு செய்கிறீர்கள் என்றால், ரயில்வே துறையின் முன்பதிவு டிக்கெட் விதிமுறைகளை நன்கு பார்த்துக் கொள்ளவும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ