ஏசி இல்லாமல் உடலை குளுகுளுவென வைத்துக்கொள்வது எப்படி? ‘இதை’ செய்யுங்கள்..

Summer Heat Tips : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்த நிலையில், இதை சமாளிக்க என்ன செய்யலாம்? டிப்ஸ் இதோ..எ  

Written by - Yuvashree | Last Updated : Apr 21, 2024, 01:26 PM IST
  • வெயிலின் தாக்கத்தை எப்படி சமாளிப்பது?
  • வெயில் சூட்டை சமாளிக்க டிப்ஸ்!
  • ஏசி இல்லாமலும் இதை செய்யலாம்
ஏசி இல்லாமல் உடலை குளுகுளுவென வைத்துக்கொள்வது எப்படி? ‘இதை’ செய்யுங்கள்.. title=

Summer Heat Tips : ‘ஐயோ எரியிதுடி மாலா..ஃபேன 12ஆம் நம்பர்ல வை..” என்பது இன்று அனைவரும் தினசரி உபயோகிக்கும் டைலாக்காக மாறிவிட்டது. ரூமில் மின்விசிறிக்கு கீழ் அமர்ந்திருக்கும் பாேது வியர்வை சிந்தினால் பரவாயில்லை, குளித்துக்கொண்டிருக்கும் போதெல்லாம் கூடவா வியற்கும்? என்று மக்கள் கேட்குமளவிற்கு, தமிழகத்தில் ருத்ர தாண்டவம் ஆடுகிறது சூரியன். காலையில் சொட்ட சொட்ட ஈரத்துடன் காயப்போடப்படும் துணி, மதிய வெயிலுக்குள் காய்ந்து விடுகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். ஒரு ஈர துணிக்கே இந்த நிலை இருக்கும் போது, மனிதர்களை பற்றி கூறவா வேண்டும்? 

தமிழகத்தில் வாட்டி வதைக்கும் வெயில்..

வழக்கமாக, தமிழகத்தில் மே மாதத்தின் இறுதியில் அடிக்கும் வெயில் இந்த ஆண்டில் சற்று முன்பாகவே தொடங்கிவிட்டது. மார்ச் மாதத்திலேயே மண்டையை பொளந்த வெயில், மே மாதம் நெருங்க நெருங்க இன்னும் உக்கிரமாக மாறி வருகிறது. இதை சமாளிக்க முடியாமல் மக்கள் திணறி வருகின்றனர். அடுத்து, கத்தரி வெயில் வேறு தொடங்கி விடும். அதை சமாளிப்பதற்காகவும் மக்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்த சில டிப்ஸ்களை இங்கு பார்ப்போம்..

ஏசி இல்லாமல் சென்னை வெயிலை சமாளிக்க டிப்ஸ்..

தற்போதைய காலக்கட்டத்தில் நகரத்தில் இருக்கும் பலரது இல்லங்களில் ஏசி வசதி செய்யப்பட்டு விட்டது என்றாலும், பல நடுத்தர மக்களின் இல்லங்களில் ஏசி இருப்பதில்லை. அவர்கள் ஏசி போடாமல் தங்களின் உடலை கூளிங் ஆக வைத்துக்கொள்வது எப்படி?

>வீட்டில் இருப்பவராக இருந்தால், இல்லத்தில் உள்ள ஜன்னல் கதவுகளை எப்போதும் மூடி வைத்திருக்க வேண்டாம். காற்றோட்டம் இருந்தால் ஒழிய, வீட்டிற்குள் இருக்கும் வெப்பம் தெரியாமல் இருக்கும்.

>குளிர் சாதன பெட்டியில் வைத்திருக்கும் தண்ணீரை குடித்தாலும், பானை தண்ணீரின் குளுமைக்கு ஈடாகாது. எனவே, ஒரு மண் சட்டியை வாங்கி வைத்து, அதை சில நாட்கள் உபயோகித்து பின்னர் தண்ணீர் ஊற்றி வைத்து குடிக்கலாம். 

>நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பதை பொறுத்தும் நமது உடல் உஷ்ணம் ஆவாமல் தவிர்க்கலாம். ஆகையால், தண்ணீர் அதிகம் குடிப்பது அவசியம். தண்ணீர் மட்டுமன்றி நீர் காய்கறிகள், மோர், ஜூஸ், இயற்கை பானங்களான இளநீர் உள்ளிட்டவற்றை குடிக்கலாம். 

>காட்டன் உடைகளை உடுத்திக்கொள்ள வேண்டும். பாலிஸ்டர் போன்ற காற்று புகாத ஆடைகளை போடுவதை தவிர்க்கவும். உடலுடன் ஒட்டிக்கொள்ளும் ஆடைகளை பயனபடுத்த வேண்டாம்.

>முடியை அவிழ்த்து விடுவதை தவிர்க்கவும். பெண்ணாக இருந்தாலும் ஆணாக இருந்தாலும், சம்மர் கட் செய்து விட்டால் தேவையற்ற அசெளகரியத்தை தவிர்க்கலாம். 

மேலும் படிக்க | சம்மரில் கூந்தல் கொத்து கொத்தாக கொட்டுதா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க

>உங்கள் வீட்டிற்கு மேல் மொட்டை மாடி இருந்தால், மாலை நேரத்தில் தலம் முழுவதும் தண்ணீர் தெளித்து விட்டு வரலாம். இதனால், வீடு இரவு சமயத்தில் வெப்பத்தை சமாளிக்க உதவும். 

>வெயிலில் வெளியில் செல்கையில், கண்டிப்பாக மாய்ஸ்ட்ரைசர் அல்லது சன்ஸ்கரீன் உபயோகிக்க வேண்டும். இதனால் வெயிலில் சருமம் தாெடர்பான நோய்கள் வருவதை தவிர்க்கலாம். 

>உச்சி வெயில் நேரங்களான 1-3 மணி வரை வெயிலில் சுற்றுவதை தவிர்க்கவும். அப்படியே சென்றாலும், துப்பட்டா, கைக்குட்டை, கூளிங் கிளாஸ், கேப், குடை உள்ளிட்டவற்றை வைத்து முகங்களை மூடிக்கொள்ளலாம். 

மேலும் படிக்க  | மருதாணியை தலையில் தேய்ப்பதால் இந்த பக்க விளைவுகள் வரலாம்! ஜாக்கிரதை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News