6 கோடி பிஎஃப் ஊழியர்களுக்கு வலுவான பரிசு: PF ஊழியர்கள் இப்போது ஒரு பெரிய பரிசைப் பெறப் போகிறார்கள், இது செய்தி மிகவும் சந்தோஷத்தை தரும் செய்தியாக இருக்கும். அந்த வகையில் பிஎஃப் ஊழியர்களுக்கு வட்டித் தொகையை அரசாங்கம் விரைவில் மாற்றப் போகிறது என்று நம்பப்படுகிறது, இதன் மூலம் சுமார் 6 கோடி ஊழியர்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு 8.15 சதவீத வட்டி வழங்கப்படும் என நீண்ட நாட்களுக்கு முன்பே மோடி அரசு அறிவித்தது, இந்த காத்திருப்பு தற்போது ஒரேடியாக முடிவுக்கு வர உள்ளது. அதுமட்டுமின்றி பணத்தைச் சரிபார்க்க நீங்கள் எங்கும் அலைய தேவையில்லை. ஆனால் வட்டித் தொகையை அனுப்புவதற்கான தேதியை அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கவில்லை, இருப்பினும் வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் இந்த முடிவு வெளியிடப்படலாம் என்று ஊடக அறிக்கைகள் கூறுகின்றன.
கணக்கில் எவ்வளவு தொகை வரும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்
பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்களின் கணக்கில் 8.15 சதவீத வட்டியை மத்திய அரசு போடப் போவதாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், பிஎஃப் ஊழியர்களின் கணக்கில் எவ்வளவு பணம் வரும் என்கிற கேள்வி எழுந்துள்ளது. அதன்படி ஊழியர்களின் பிஎஃப் கணக்கில் ரூ.6 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டால், இதற்கு சுமார் ரூ.50,000 வட்டியாக கணக்கில் அனுப்பப்படலாம்.
மேலும் படிக்க | 8th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு டபுள் ஜாக்பாட், விரைவில் 50% டிஏ, ஊதிய உயர்வு
அதேசமயம் கணக்கில் ரூ.7 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டால், வட்டியாக ரூ.58,000 வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது 6 கோடி பிஎஃப் ஊழியர்களுக்கு மிகப்பெரிய பரிசாக இருக்கும். இது தவிர, கணக்கில் ரூ.10 லட்சம் இருந்தால், வட்டியாக ரூ.83,000 டெபாசிட் செய்யப்படும். இந்த பணத்தைச் சரிபார்க்க நீங்கள் எங்கும் அதிகம் வேண்டியதில்லை. கீழே இதற்கான சுலாமான வழிமுறையை நாங்கள் தந்துள்ளோம், அதை படித்து சுலாமாக தொகையை சரிபார்த்துக்கொள்ளுங்கள்.
இந்த முறையில் தொகையை சரிபார்க்கவும்
பிஎஃப் கணக்கில் எவ்வளவு பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்பதை சரிபார்க்க நீங்கள் எங்கும் ஓட வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே பணத்தைச் சரிபார்க்கலாம். இதற்கு முதலில் உமாங் செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். இது தவிர, EPFO இன் அதிகாரப்பூர்வ தளத்தைப் பார்வையிடுவதன் மூலமும் வட்டித் தொகையைச் சரிபார்க்கலாம்.
- பாஸ்புக்கில் இபிஎஃப் இருப்பையும் செக் செய்ய முடியும்.
- பிஎஃப் இருப்பைச் சரிபார்க்க இபிஎஃப்ஓ போர்ட்டலுக்கு செல்ல வேண்டும்.
- முதலில் இபிஎஃப்ஓ போர்ட்டலில் லாக் இன் செய்யவும்.
- இதற்குப் பிறகு, அங்குள்ள 'மெம்பர் பாஸ்புக்' என்பதைக் கிளிக் செய்யவும்.
- இங்கு, உங்களுக்கு கிடைத்த வட்டித் தொகையுடன் அனைத்து பிஎஃப் பணப் பரிமாற்றத்தின் விவரங்களையும் காணலாம்.
மொபைல் எண் மூலம் எப்படி சரிப்பார்பது
எஸ்எம்எஸ் மூலமாக உங்களுடைய பிஎஃப் இருப்புத் தொகையை அறிந்து கொள்ள 7738299899 என்ற எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். அதில் 'EPFOHO UAN ENG' என்று டைப் செய்து அனுப்ப வேண்டும்.
மிஸ்ட் கால் எப்படி சரிப்பார்பது
011-22901406 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தும் உங்களது பிஎஃப் இருப்புத் தொகையை அறிந்துக் கொள்ளலாம்.
மேலும் படிக்க | ரயில்வே தந்த முக்கிய அப்டேட்: இந்த விதிகளில் மாற்றம்.. பயணிகளுக்கு இனி சிரமம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ