சென்னை: சென்னையில் இன்று டீசல் விலை லிட்டருக்கு 100 ரூபாய் 25 காசுகளாக உயர்ந்துவிட்டது. பெட்ரோல் லிட்டருக்கு 104.22 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கடந்த 10 நாட்களில், சென்னையில் பெட்ரோல் விலை ரூ .102.10 முதல் ரூ. 104.22 வரை ஏற்ற இறக்கத்தைக் கண்டது. சென்னையுடன் ஒப்பிடும்போது, தமிழ்நாட்டின் பிற நகரங்களில் பெட்ரோல் விலையில் ஓரளவு மாறுதல்கள் உள்ளன.
மும்பையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.113.12 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 104 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. அரசுக்கு சொந்தமான எரிபொருள் வணிகர்களின் விலை அறிவிப்பின்படி, பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து நான்காவது நாளாக இன்று (அக்டோபர் 23) அன்று உயர்ந்து, நாடு முழுவதும் வரலாறு காணாத உச்சத்தை எட்டியது.
டெல்லியில் பெட்ரோல் விலை 107 ரூபாயைத் தாண்டியது. இதுவரை இல்லாத வகையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.107.24 ஆக உயர்ந்துள்ளது. டீசல் விலை 35 காசுகள் உயர்ந்து, லிட்டருக்கு 95.97 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Also Read | India-Pakistan கோவிட் தடுப்பூசி சான்றிதழ் பரஸ்பர அங்கீகரிப்பு சாத்தியமா?
பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மாதம் 2 முறை, நிர்ணயம் செய்யும் முறை பழக்கத்தில் இருந்தது.
ஆனால் தற்போது பாரத் பெட்ரோலியம் (bharat Petroleum), ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் (Hindustan Petroleum), இந்தியன் ஆயில் (Indian Oil) ஆகிய பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் விலைகளை தினசரி நிர்ணையிக்கின்றன.
Also Read | இந்திய மீனவர்களை இலங்கை எப்போது திருப்பி அனுப்பும்?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR