உங்களது ரயிவே உணவுகளை இனி லைவ்வாக காண புதிய வசதி!

ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் இனி தங்களது ஆர்டர் செய்த உணவுகளை எப்படி சமைக்கிறார்கள் என்பதை நேரலையாக காண புதிய வசதியை ஐஆர்சிடிசி அறிமுகப்படுத்தியுள்ளது.

Last Updated : Jul 5, 2018, 01:08 PM IST
உங்களது ரயிவே உணவுகளை இனி லைவ்வாக காண புதிய வசதி! title=

ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் இனி தங்களது ஆர்டர் செய்த உணவுகளை எப்படி சமைக்கிறார்கள் என்பதை நேரலையாக காண புதிய வசதியை ஐஆர்சிடிசி அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்ய www.irctc.co.in என்ற இணையதளத்தை மக்கள் பயன்படுத்தி வருகிறது.

டிக்கெட் முன்பதிவு செய்வதுடன், பயணத்தின்போது உணவு வகைகளை ஆர்டர் செய்வது, விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது என பல்வேறு வசதிகள் www.irctc.co.in இணையதளத்தில் உள்ளது. 

இந்நிலையில், தற்போது இத்துடன் மேலும் ஒரு புதிய வசதியை ஐஆர்சிடிசி அறிமுகப்படுத்தியுள்ளது. ரயிலில் பயணம் செல்லும் பயணிகள் தங்களது ஆர்டர் செய்த உணவுகளை எப்படி சமைக்கிறார்கள் என்பதை நேரலையாக காண முடியும். இந்த வசதியானது ஐஆர்சிடிசி கேலரி பிரிவில் இருந்து சமையல் அறை நேரலை (LIVE) காணொளிகளை பயணிகள் காணலாம். 

Trending News