ரயில் பயணிகள் கவனத்திற்கு! மேலும் 5 புதிய வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்..!

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்: நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கு இடையே 18 வந்தே பாரத் ரயில்கள் தண்டவாளத்தில் இயக்கப்படுகின்றன. இப்போது ஒரே நேரத்தில் 5 வந்தே பாரத்களை தரையிறக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 15, 2023, 01:17 PM IST
  • 5 வந்தே பாரத் ரயில்கள் ஒரே நேரத்தில் தொடங்கப்பட உள்ளன
  • பிரதமர் மோடி ஜூன் 26ஆம் தேதி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்
  • நாட்டில் இதுவரை 18 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
ரயில் பயணிகள் கவனத்திற்கு! மேலும் 5 புதிய வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்..! title=

புதுடெல்லி: இந்திய ரயில்வே தொடர்ந்து தனது நெட்வொர்க்கை விரிவுபடுத்தி வருகிறது. ரயில்வேயில் அதிக வேக ரயில்களின் அறிமுகங்களும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மேலும் 5 புதிய வழித்தடங்களில் துவக்கப்படுகிறது. நாட்டில் இதுவரை 18 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இப்போது ஒரே நேரத்தில் 5 வழித்தடங்களில் ஐந்து வந்தே பாரத் ரயில்கள் பதொடக்கப்பட உள்ளன. முதல் முறையாக நாட்டில் ஒரே நேரத்தில் ஐந்து வந்தே பாரத் ரயில்களை அறிமுகப்படுத்த இந்திய ரயில்வே தயாராகியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஐந்து வந்தே பாரத் ரயில்களின் வழித்தடம், நேரம் போன்ற அனைத்து விவரங்களும் முடிவு செய்யப்பட்டுள்ளன. ரயில்வே அமைச்சகத்தின்படி, ஜூன் 26 அன்று, பிரதமர் நரேந்திர மோடி ஒரே நேரத்தில் ஐந்து வந்தே பாரத் ரயில்களை தொடங்கி வைக்கிறார். ஐந்து வந்தே பாரத் ரயில்களையும் பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

ஐந்து வந்தே பாரத் ரயில்கள் ஒரே நேரத்தில் தொடக்கம்

வந்தே பாரத் ரயில்களை துவக்க ஜூன் 26ஆம் தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிரதமர் மோடியே ஒரு இடத்தில் தனிப்பட்ட முறையில், மீதமுள்ள நான்கு இடங்களில் காணொளி காட்சி மூலமாகவும் தொடக்கி வைப்பார். முன்னதாக, கோவா-மும்பை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இந்த மாதத்தின் முதல் வாரத்தில் தொடங்கவிருந்தது. ஆனால் ஒடிசாவில் நடந்த ரயில் விபத்து காரணமாக அது ஒத்திவைக்கப்பட்டது. இப்போது மீதமுள்ள நான்கு ரயில்களுடன் இதுவும் தொடங்கப்படும். நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு ஒரே நேரத்தில் இந்திய ரயில்வேயின் வந்தே பாரத் ரயில்கள் தொடக்கி வைக்கப்படும் போது, ​​இது நாட்டிற்கு ஒரு வரலாற்று தருணமாக இருக்கும். அன்றைய தினம் வந்தே பாரத் ரயில்களை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

புதிய வந்தே பாரத் வழித்தடங்கள்

1. போபால் இந்தூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்

2. போபால் ஜபல்பூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்

3. பாட்னா ராஞ்சி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்

4. பெங்களூர் ஹூப்ளி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்

5. மும்பை கோவா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்

மேலும் படிக்க | ரயிலில் பயணிக்கும் ஒவ்வொரு பயணியும் தெரிந்து கொள்ள வேண்டிய ‘7’ விதிகள்!

முதல் வந்தே பாரத் ரயில்

நாட்டில் 18 வந்தே பாரத் ரயில்கள் வெற்றிகரமாக இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. முதலாவதாக, 2019 ஆம் ஆண்டில், முதல் வந்தே பாரத் ரயில் புது தில்லி-வாரணாசி இடையே இயக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, புதுடெல்லி-ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டது. மூன்றாவது வந்தே பாரத் ரயில் காந்திநகர் மற்றும் மும்பை இடையே இயக்கப்பட்டது. இதேபோல், வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து தொடங்கப்பட்டது.

 சென்னை - கோயம்புத்தூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்

சமீபத்தில், இந்தியாவின் 14வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை சென்னை மற்றும் கோயம்புத்தூர் இடையே கடந்த ஏப்ரல் மாதம் 8ம் தேதி தொடங்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி சென்னையில் ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதன் மூலம் இரு நகரங்களுக்கும் இடையேயான பயண நேரம் 5 மணி நேரம் 50 நிமிடங்களாக குறைந்துள்ளது. மேலும், பாட்னா-ராஞ்சி வந்தே பாரத் ரயில் வெற்றிகரமாக சோதனை ஓட்டம் நடைபெற்றுள்ளது. விரைவில் இந்த வழித்தடத்தில் சாமான்ய மக்களுக்காக வந்தே பாரத் தொடங்கப்படும்.

மேலும் படிக்க | Indian Railways: ‘இந்த’ ரயில் டிக்கெட்டை ரத்து செய்தால் ஒரு பைசா கூட திரும்ப கிடைக்காது!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News