கோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நடிகர் ரஜினிக்கு தற்போது வயது 72 ஆகிறது. இந்த வயதிலும் அதே ஸ்டைல், அதே நடை அதே பாவனை என எதுவும் மாறாமல் இருப்பதால் அவர் மக்களின் மனங்களை கொள்ளை கொள்வதில் தவறுவதில்லை. ரஜினி எப்போதும் புத்துணர்ச்சியோடு இருப்பதே அவரது இளமை ரகசியத்திற்கு காரணமாக பார்க்கப்படுகிறது.
காய்கறி டயட்
டயட் என்றால் குறைவாக சாப்பிடுவது என்ற தவறான புரிதல் பலரிடத்தில் இருக்கிறது. நம்ம சூப்பர் ஸ்டாரும் டயட் இருப்பவர்தான். எப்போதாவது அல்ல..எப்போதுமே டயட்தான். இவர் தாவர வகை டயட்டை பின்பற்றுவதாக சில ஃபிட்னஸ் நிபுணர்கள் கூறுகின்றனர். அதாவது, தாவரத்தில் விளையக்கூடிய பழங்கள், காய்கறிகள், தானியங்கள் உள்ளிட்டவற்றை மட்டுமே சாப்பிடுவாராம்.
ரஜினிகாந்த் தவிர்க்கும் உணவுகள்
காய்கறி, பழங்களை மட்டுமே அதிகம் சாப்பிடும் நடிகர ரஜினிகாந்த் சில உணவுகளை அறவே தவிர்த்து விடுவாராம். இவர், 2014ஆம் ஆண்டிலிருந்து அசைவ உணவுகளை சாப்பிடுவதில்லை என்ற பேச்சு அடிபடுகிறது. மேலும், அதிக கொழுப்பு மற்றும் சர்க்கரை நிறைந்த பொருட்களை ரஜினி சாப்பிடுவதே இல்லையாம்.
வீட்டு உணவை விரும்புபவர்
வெளி உணவுகளை முற்றிலும் தவிர்ப்பவர் ரஜினி. வீட்டில் சமைக்கும் உணவுகள் என்றால் அவருக்கு அவ்வளவு விருப்பமாம். அதுவும் இவர் வீட்டில் சமைக்கப்படும் உணவுக்கான காய்கறிகள் யாவும் அருகிலுள்ள சந்தையில்தான் வாங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
வலுவுடன் இருப்பதற்கான காரணம்
நடிகர் ரஜினிகாந்த், இன்றளவும் உடலில் வலுவுடன் இருப்பதற்கான காரணம் இருதயத்திற்கு ஏற்ற உடற்பயிற்சிகளை மேற்கொள்வதனால்தான். ரஜினிக்கு ஜாக்கிங் செல்வது என்றால் மிகவும் விருப்பமாம். நேரம் கிடைக்கும் போதெல்லாம் தனக்கு ஏதுவான உடற்பயிற்சிகளை மேற்கொள்வாராம்.
மேலும் படிக்க | John Wick 4: ஓடிடியில் வெளியாகிறது ஜான் விக் 4..எந்த தளத்தில் எப்போது பார்க்கலாம்?
யோகா பயிற்சி
உடல் நலனை போலவே மன நலனிலும் கவனம் செலுத்துபவர் ரஜினி. இதற்காக யோகா பயிற்சிகள் மேற்கொள்வது, மனதை ஒரு நிலை படுத்துவது போன்ற பயிற்சிகளில் தன்னை ஈடுபடுத்தி கொள்வாராம். இதனுடன் மூச்சு பயிற்சியையும் சேர்த்துக்கொள்வார். இது அவருக்கு கவனச்சிதறல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுமாம்.
ரஜினியின் உணவு முறை
ரஜினி ஒரு டோஸ்ட், காபி மற்றும் பழம் ஆகியவற்றை காலை உணவாக எடுத்துக்கொள்வாராம். மதிய உணவாக வேகவைத்த காய்கறியை எடுத்துக்கொள்வாராம். இரவில் அதை விட குறைவாக ரொட்டி அல்லது பருப்பு வகை உணவு ஏதேனும் எடுத்துக்கொள்வதாக கூறப்படுகிறது.
சுய ஒழுக்கத்தை கடைபிடிப்பவர்
இவ்வளவும் இருந்தாலும், தனக்கென ஒரு தனி வாழ்க்கை முறையை வடிவமைத்துக்கொண்டு அதன் படி வாழ்ந்து கொண்டிருக்கும் ஒருவர் ரஜினி. யாரேனும் இவரிடம் ‘இந்த வயதிலும் எப்படி இவர் இப்படி கின்னுன்னு இருக்கார்’ என்று கேட்டால் அதற்கு பதிலாக சின்ன புண்ணகையை பரிசளிப்பார். ஆனால் அதற்கு பின்னால் இவரது சுய ஒழுக்கமும் நற்பண்புகளும்தான் உள்ளது என்பதே நிதர்சனம். டயட், உடற்பயிற்சி என ஆயிரம் இருந்தாலும் அவரது சுய ஒழுக்கமே அவர் ஃபிட் ஆக இருப்பதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது. நீங்களும் ரஜினியை போல வயதான பிறகு ஸ்டைலாக வேண்டும் என நினைத்தால், ஹெல்தியான விஷயங்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ