சர்க்கரை, செரிமானம், ரத்த அழுத்த பிரச்சசனையா? முளைந்த வெந்தயம் சாப்பிடுங்க - மகத்துவத்தை பாருங்க..!

Fenugreek : முளைத்த வெந்தயம் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவது, செரிமான கோளாறு, ரத்த அழுத்தம் பிரச்சனைக்கு தீர்வு உட்பட பல அற்புத நன்மைகளை கொண்டிருக்கிறது. 

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 6, 2024, 07:06 AM IST
  • முளைத்த வெந்தயம் நன்மைகள்
  • ரத்த அழுத்தம், சர்க்கரை கட்டுப்படும்
  • போலிக் அமிலத்தின் நல்ல மூலம் வெந்தய விதை
சர்க்கரை, செரிமானம், ரத்த அழுத்த பிரச்சசனையா? முளைந்த வெந்தயம் சாப்பிடுங்க - மகத்துவத்தை பாருங்க..! title=

குளிர்காலத்தில் வெந்தயத்தை உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். வெந்தய இலைகள் முதல் வெந்தயம் விதைகள் வரை ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதேபோல், முளைத்த வெந்தயமும் ஆரோக்கியத்திற்கு மிகவும் அற்புத நன்மைகளை கொண்டிருக்கிறது. வெந்தயத்தில் ஃபோலிக் அமிலம், தாமிரம், பொட்டாசியம், இரும்பு, கால்சியம், ரிபோஃப்ளேவின், மாங்கனீஸ், வைட்டமின் ஏ, பி6, சி மற்றும் கே போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்கிறது. முளைத்த வெந்தயத்தை சாப்பிட்டு வந்தால், உடலுக்கு இரட்டிப்பு பலன் கிடைக்கும். முளைத்த வெந்தயத்தை சாப்பிடுவதால் என்னென்ன ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும், எந்தெந்த நோய்களைத் தவிர்க்கலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

முளைத்த வெந்தயம் ஆரோக்கிய நன்மைகள்

சர்க்கரை கட்டுப்பாடு : முளைத்த வெந்தயம் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும். மருத்துவர்கள் கூற்றுப்படி, நீரிழிவு நோயாளிகள் தினமும் முளைத்த வெந்தயத்தை உட்கொண்டால், அவர்கள் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தலாம். இது தவிர, வெந்தயம் மெதுவாக குளுக்கோஸை இரத்த ஓட்டத்தில் வெளியிடுகிறது. இதன் காரணமாக ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு திடீரென அதிகரிக்காது.

நோய் எதிர்ப்பு சக்தி : முளைத்த வெந்தயத்தை சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ஏனெனில், முளைத்த வெந்தய விதைகளில் ஃபிளாவனாய்டுகள், ஆல்கலாய்டுகள் மற்றும் டானின்கள் நிறைந்துள்ளன. வெந்தய விதைகளை உட்கொள்வது உடலில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு அளவை மேம்படுத்துகிறது.

மூட்டுகளுக்கு நல்லது : முளைத்த வெந்தயத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உங்கள் தசைகள் மற்றும் மூட்டுகளை ஆரோக்கியமாக வைத்திருக்கும். முளைத்த வெந்தயத்தில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன. இதில் உள்ள கேலக்டோமன்னன் உங்களை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்கும். அவற்றில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களும் நிறைந்துள்ளன. அவை ஃப்ரீ ரேடிக்கல்களின் உருவாக்கத்திலிருந்து உடலைப் பாதுகாக்கின்றன, மேலும் ஃப்ரீ ரேடிக்கல்களுடன் போராடுகின்றன.

மேலும் படிக்க | கொலஸ்ட்ரால் முதல் வெயிட்லாஸ் வரை... ஆரோக்கியத்திற்கு வரமாகும் பாசிப்பயறு...

செரிமானத்திற்கு நல்லது : முளைத்த வெந்தயமானது செரிமான பிரச்சனைகளால் அவதிப்படுபவர்களுக்கு சர்வ மருந்தாக செயல்படுகிறது. முளைத்த வெந்தய விதைகளில் செரிமான நொதிகள் நிறைந்துள்ளன. இவற்றைத் தொடர்ந்து உட்கொள்வதால் வாய்வு, அமிலத்தன்மை, அஜீரணம் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கும். இதனால் செரிமானம் மேம்படும் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.

இரத்த அழுத்தம் கட்டுப்பாடு : முளைத்த வெந்தயத்தில் பொட்டாசியம் நிறைந்துள்ளது. இது உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. அதிக கொலஸ்ட்ராலை கரைக்கும். இரத்தத்தில் உள்ள கொழுப்பைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. இவை மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கின்றன.

இது தவிர, எலும்புகளை வலுப்படுத்த வெள்ளரி விதைகளையும் உட்கொள்ளலாம். ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் கீல்வாதம் போன்ற எலும்பு நோய்களைத் தடுப்பதில் வெள்ளரி விதைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மேலும் படிக்க | Fridge இருக்கா? ஜாக்கிரதை... இதுவும் UTI-க்கு ஒரு காரணமாம்: ஆய்வில் வந்த பகீர் தகவல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News