ஆபாச திரைப்பட ஆர்வலர்கள் அதிகம் கொண்ட நாடு எது தெரியுமா?

ஆஸ்திரேலியாவில் ஆபாச திரைப்பட ஆர்வலர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகத் ஒரு ஆய்வு தெரிவிக்கிறது!

Last Updated : Dec 26, 2019, 01:51 PM IST
  • மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான பால் மாகின் நடத்திய இந்த ஆய்வில், நாடு முழுவதும், லெஸ்பியன் வகை திரைப்படங்களை அதிக ஆர்வத்துடன் தேடுவதாகவும், ஆசிய நாட்டு திரைப்படங்களை அவர்கள் விரும்பி பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
  • ஆசிய திரைப்படங்களில் ஜப்பானிய திரைப்படங்களுக்கு அதிக மவுசு இருப்பதாகவும் பால் மாகின் தெரிவித்துள்ளார்.
ஆபாச திரைப்பட ஆர்வலர்கள் அதிகம் கொண்ட நாடு எது தெரியுமா? title=

ஆஸ்திரேலியாவில் ஆபாச திரைப்பட ஆர்வலர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகத் ஒரு ஆய்வு தெரிவிக்கிறது!

ஆஸ்திரேலியாவில் ஆபாச திரைப்படம் பார்க்கும் நபர்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாகவும் இந்த ஆராய்ச்சி முடிவுகள் தெரிவித்துள்ளன. மெல்போர்னில் மட்டும், 2014 மற்றும் 2017-க்கு இடையில் ஆபாச திரைப்படங்கள் பார்ப்பவர்களின் எண்ணிக்கை 222% உயர்ந்துள்ளது.

அதே நேரத்தில் சிட்னி, முதன்மை ஆபாச தளங்களை பார்க்கும் ஆர்வளர்களின் இருப்பிடமாக கண்டறியப்பட்டுள்ளது. பிரபல ஆபாச வலைதளமான போர்ன்ஹப்பிற்கு அதிக போக்குவரத்தை சிட்னி மக்கள் அளித்துள்ளனர் எனவும், அதே காலகட்டத்தில் இதன் எண்ணிக்கை 205 சதவிகிதம் அதிகரித்துள்ளது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆன்லைன் ஆபாசக் காட்சிகளில் 93 சதவிகிதம் ஆஸ்திரேலிய நகரங்களிலிருந்து வந்தவை மற்றும் பெரும்பாலும் மொபைல் போன்களிலிருந்து பதிவு செய்யப்பட்டவை என்பதால், ஆஸ்திரேலியாவுக்கான புள்ளிவிவரத் தரவு இந்நாட்டை ஆபாசத்தை விரும்பும் நாடு என்று கூறுகிறது.

மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான பால் மாகின் நடத்திய இந்த ஆய்வில், நாடு முழுவதும், லெஸ்பியன் வகை திரைப்படங்களை அதிக ஆர்வத்துடன் தேடுவதாகவும், ஆசிய நாட்டு திரைப்படங்களை அவர்கள் விரும்பி பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார். குறிப்பாக ஆசிய திரைப்படங்களில் ஜப்பானிய திரைப்படங்களுக்கு அதிக மவுசு இருப்பதாகவும் பால் மாகின் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, 2018-ஆம் ஆண்டு பார்வையாளர்களின் புள்ளிப்பட்டியலில் திருநங்கைகளின் படங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மேலும் திருநங்கைகளின் திரைப்படங்களை பார்ப்பதில் ஆண்களே அதிக அளவு ஆர்வம் காட்டியிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆன்லைன் சூதாட்டம் மற்றும் ஆபாசத்திற்கான வயது சரிபார்ப்பு குறித்த பாராளுமன்ற விசாரணையைப் பற்றி குறிப்பிடுகையில், இந்த பொழுதுபோக்கு களத்தில் தரவு தனியுரிமை மீறல்கள் குறித்து மாகின் கவலைகளை வெளிப்படுத்தினார், காரணம் அங்கு பெண்கள், தற்செயலாக 30 சதவீத பார்வையாளர்களைக் கொண்டுள்ளனர் என்பது தான்.

இதுகுறித்து NSW பல்கலைக்கழக சட்ட கல்லூரி பேராசிரியர் ஜஹ்ரா ஸ்டார்டஸ்ட் தெரிவிக்கையில்., "விசாரணையை ஏற்றுக்கொண்டால் தனிப்பட்ட தகவல்கள் கசிவு, ஹேக், விற்பனை, கண்காணிப்பு, தவறாகப் பயன்படுத்தப்படுதல் அல்லது பாகுபாடு மற்றும் களங்கத்திற்கு வழிவகுக்கும் சட்ட அமலாக்க நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ள வழிவகுக்கும் என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.

மேலும், ஆன்லைன் சூதாட்டம் மற்றும் ஆபாச செயல்பாடுகின் போது முகங்களை ஸ்கேன் செய்து அடையாளம் காணும் ஆவணத்துடன் ஒப்பிடுவதல் நடைமுறை சட்டப்புறம்பான செயல்களை தடுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Trending News