Temple: ஆறு கால பூஜையின் தாத்பர்யங்கள் இவை தான்...

சிவபெருமானை முழுமுதற்கடவுளாக வணங்கும் சிவநெறி சமயமான சைவ சமயத்தில் ஆறுகால பூசை ஆலயக்களில் ஆகம முறைப்படி தினசரி அடிப்படையில் நடைபெறுகின்ற பூசைகள் ஆகும். 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 25, 2021, 06:36 AM IST
  • ஆறுகால பூசைகள்
  • சிவாலயங்களில் சிறப்பு
  • சிதம்பரம் நடராஜர் கோவிலில் மிகவும் சிறப்பாக நடைபெறும் ஆறுகால பூசை
Temple: ஆறு கால பூஜையின் தாத்பர்யங்கள் இவை தான்... title=

சிவபெருமானை முழுமுதற்கடவுளாக வணங்கும் சிவநெறி சமயமான சைவ சமயத்தில் ஆறுகால பூசை ஆலயக்களில் ஆகம முறைப்படி தினசரி அடிப்படையில் நடைபெறுகின்ற பூசைகள் ஆகும். 

ஆறுகால பூஜை என்பதை கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால் அதன் அடிப்படை அனைவருக்கும் தெரியாது. அதை தெளிவாக தெரிந்துக் கொள்வோம்.

மனிதர்களுக்கு ஒரு வருடம் என்பது, தேவர்களுக்கு ஒரு நாள். ஒரு நாளானது, வைகறை, காலை, உச்சி, மாலை, இரவு, அர்த்தஜாமம் ஆகிய ஆறு பொழுதுகளைக் கொண்டது. நாம் ஓராண்டாக கருதும் தேவர்களின் ஒரு நாளின் வைகறைப் பொழுதானது மார்கழி மாதமாகும். அந்த மாதத்தில் விடியற்காலையில் ஆலயங்களுக்கு சென்று வழிபாடு நடத்துவது சிறப்பு. 

Read Also | அபிஷேகத்திற்கும், மகா அபிஷேகத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன?

அதனால் தான் சைவ சமயத்தில் மட்டுமல்ல, வைணவ சமயத்திலும் விடியற்காலையில் ஆலயங்களுக்கு சென்று வழிபாடு நடத்துவது வழக்கம்.. 
சைவ சமயத்தில் மார்கழி மாதம் தான் ஆருத்ரா தரிசன அபிஷேகம் நடைபெறும்.

அடுத்து தமிழ் மாதங்களில் மாசி மாதமானது தேவர்களின் காலைப் பொழுதாகும். மாசி மாத பூர்வ பட்ச சதுர்த்தசி திதியில் இறைவனுக்கு காலை நேரத்தில் அபிஷேகம் நடைபெறும்.

தேவர்களுக்கு சித்திரை மாதத்தில் வருவது உச்சி காலம். எனவே தான், சித்திரை மாதத்தில் திருவோண நட்சத்திரத்தில் சிவனுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. ஆனி மாதம் தேவர்களுக்கு மாலைப் பொழுது என்பதால், ஆனிமாதம் உத்ரம் நட்சத்திரத்தில் இறைவனுக்கு மாலை வேளையில் அபிஷேகம் செய்யப்படுகிறது.

Also Read | ஆலய வழிபாடு செய்வதன் தாத்பர்யம் என்ன தெரியுமா?

ஆவணி மாதம் தேவர்களுக்கு இரவுப் பொழுது என்பதால், அந்த மாத பூர்வ பட்ச சதுர்த்தசி திதியில், இறைவனுக்கு இரவு நேர அபிஷேகம் நடத்தப்படுகிறது. இறுதியாக, புரட்டாசி மாதம் அர்த்தஜாம வேளை என்பதால், புரட்டாசி பூர்வ பட்ச சதுர்த்தசி திதியில் அர்த்தஜாம வேளை அபிஷேகம் நடைபெறுகிறது.  

இந்த ஆறு அபிஷேகங்களையும் குறிக்கும் விதமாகத்தான், கோவில்களில் தினமும் இறைவனுக்கு ஆறுகால பூஜைகள் நடத்தப்படுகின்றன.சில சிவன் கோவில்களில் மட்டும் தான் கடவுளுக்கு ஆறுகால பூஜைகள் நடைபெற்று வருகின்றன. பிற சைவ கோவில்களில் ஆண்டுக்கு ஆறுமுறை நடைபெறும் சிறப்பு அபிஷேகங்களில், மார்கழி மாத திருவாதிரை அபிஷேகமும், ஆனிமாத திருமஞ்சன அபிஷேகமும் மிகவும் சிறப்பாக செய்யப்பட்டும்.

தினசரி ஆறு கால பூஜை நடைபெறும் கோவில்களில் அது, உசத்கால பூசை, காலசந்தி பூசை, உச்சிக்கால பூசை, சாயரட்சை பூசை

சாயரட்சை இரண்டாம் கால பூசை, அர்த்தசாம பூசை என்று அழைக்கப்படுகிறது. இந்து சமய அறநிலையத்துறையானது, நித்தியமாக ஆறுகால பூசை நடைபெற வேண்டும் என்பதற்காக சில கோயில்களில் நித்ய ஆராதனைக் கட்டளைத் திட்டம் என்பதை செயல்படுத்துகிறது.

உசத் கால பூசை என்பது  சூரிய உதயத்திற்கு முன்பே நடத்தப்படுகிறது. ஆகமத்தின் படி சூரிய உதயத்திற்கு மூன்றே முக்கால் நாழிகைக்கு முன் நடத்தப்பட வேண்டும்.

Read Also | அயோத்தி ராமர் ஆலயம் கட்ட ஆகும் செலவு என்ன தெரியுமா?

மங்கள வாத்தியத்துடன் பள்ளியறையில்  திருப்பள்ளி எழுச்சி ஓதப்படுவதுடன் தொடங்கும் இந்தப் பூசை அபிசேக ஆராதனையோடு நிறைவடையும்.

காலை சந்தி என்பது சூரிய உதயத்திலிருந்து ஏழரை நாழிகைக்குள் வரும் சமயம். அப்போது நடைபெறும் பூசையின் போது சூரியன், விநாயகர் மற்றும் துவாரத்திற்கு பூசை நடைபெறும். பிறகு, மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அர்ச்சனை நடைபெற்று பஞ்சக்ருத்யம், நித்ய பலியுடன் பூசை நிறைவடையும்.

நண்பகலில் நடத்தப்படும் பூசை உச்சிகால பூசை ஆகும். விநாயகர் பூசை,  துவாரபாலகர் பூசை செய்த பிறகு, லிங்கத்திற்கு அலங்காரம், செய்து தூப-தீபம், நைவேத்தியம் செய்து பூசை நடைபெறும்.

சூரியனின் மறைவதற்கு மூன்றே முக்கால் நாழிகைக்கு முன்னர் நடத்தப்படுவது சாயரட்சை பூசையாகும். விநாயகர் பூசை, மூலவருக்கு அபிசேகம், அலங்காரம் செய்து தீபம், நைவேத்தியம் படைக்கப்படும். 

Read Also | சிவ ஆலயங்களில் நிகழும் மாற்றங்கள் பற்றிய திகைக்க வைக்கும் மர்ம தகவல்!

அடுத்து நடைபெறும் இரண்டாம் கால சாயரட்சை பூசையில், வினாயகர் பூசை, மூலவருக்கு அபிசேக, ஆராதனை, தீபம் என பூஜைகள் செய்யப்பட்டு, நைவேத்தியம் செய்யப்படுகிறது. பின்பு பரிவார தெய்வங்கள், நித்யாக்னி கார்யம், நித்யோத்சவ பலி ஆகியவற்றுடன் இறுதியாக சண்டேசுவர பூசையுடன் இரண்டாம் கால பூசை முடிவடையும். 

இறுதியாக நடைபெறும் அர்த்த சாம பூசையில், மூலவருக்கு அபிசேகம், ஆராதனை முடிந்ததும், உற்சவ மூர்த்திகள் பள்ளியறைக்கு எடுத்துச் செல்லப்படும். அங்கு நறுமணம் வீசும் மலர்கள், ஏலக்காய், இலவங்கம், வெற்றிலைப் பாக்கு வைத்து திரையிடப்படுகிறது. இதை பள்ளியறை பூசை என்றும் சொல்வதுண்டு. பள்ளிறைப் பூசை முடிந்ததும் சண்டேசுவரருக்கு பூசை நடைபெறுகிறது. பின்பு பைரவர் சந்நிதியில் சாவியை வைத்து பூசை நடைபெறும். இத்துடன் அர்த்தசாம பூசை முடிவடையும். 

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆறுகால பூசைகளும் மிகவும் விஷேஷமானது. ஒருவர் ஒரே நாளில் ஆறுகால பூசைகளையும் பார்த்தால் அவர் வரம் வாங்கி வந்தவர் என்றே சொல்லலாம்.

Also Read | ஆலயம் செல்வதால் அறிவியல் ரீதியாக மனிதனுக்கு கிடைக்கும் நன்மைகள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News