பைக் வச்சு இருக்கீங்களா? இந்த தவறை மட்டும் பண்ணாதீங்க!

வாகனம் ஓட்டும்போது பாட்டு கேட்டுக்கொண்டே செல்வது பிடித்தமானதாக இருந்தாலும் பெரும்பாலான சமயங்களில் இவைதான் விபத்துக்களை ஏற்படுத்தியும் விட காரணமாக அமைகிறது.  

Written by - RK Spark | Last Updated : Jan 12, 2023, 09:32 AM IST
  • சிறு சிறு தவறுகளால் பெரிய விபத்துகள் ஏற்படுகிறது.
  • பைக் ஓட்டும் போது சில விஷயங்களை செய்ய கூடாது.
  • நீண்ட தூர பைக் பயணங்களை தவிர்க்கவும்.
பைக் வச்சு இருக்கீங்களா? இந்த தவறை மட்டும் பண்ணாதீங்க! title=

பெரும்பாலானவர்களுக்கு இருசக்கர வாகனத்தில் நீண்ட தூரம் பயணம் மேற்கொள்வது பிடிக்கும், சரியான நபருடன் சவாரி செய்யும்போது சாலை கடினமாக இருக்காது என்பது மிகவும் பிரபலமான ஒரு பழமொழி.  குறிப்பாக நமக்கு பிடித்த இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்வது நம்முடைய பயணத்தையும், மனதையும் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைய செய்துவிடும்.  நமக்கு பிடித்தவர்களுடன் இதுபோன்று இருசக்கர வாகனத்தில் செல்லும் போது அது ஒரு அழகான நினைவுகளாக மாறும்.  இருசக்கர வாகனத்தில் செல்வது பலருக்கும் பிடித்தமானது தான் என்றாலும் நாம் சாலையில் செல்லும்போது நாம் தெரியாமல் செய்யக்கூடிய சில தவறுகள் நம்மை பாதிப்பிற்குள்ளாக்கிவிடும்.  சாலையில் எந்த வாகனத்தில் சென்றாலும் நாம் பாதுகாப்புடன் செல்ல வேண்டியது அவசியமானதாகும், அதிகளவில் சாலை விபத்துக்கள் ஏற்படுகிறது.  இப்போது நீங்கள் பைக் ஓட்டும்போது செய்யக்கூடாத சிலவிஷயங்களை பற்றி இங்கே காண்போம். 

மேலும் படிக்க | அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு - முதலமைச்சர் உத்தரவு 

1) சரியான பாதுகாப்பு கியர் இல்லாமல் பைக் ஓட்டும் தவறை நீங்கள் எப்போதும் செய்துவிடாதீர்கள். அவ்வாறு பாதுகாப்பு கியர் இல்லாமல் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்வது உங்கள் உயிருக்கு மட்டுமல்லாமல் சாலையில் உள்ள மற்ற உயிர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்திவிடுகிறது.  கைக்கு கிளவுஸ், பூட்ஸ் மற்றும் சவாரி ஜாக்கெட்டுகள் போன்ற மற்ற பாதுகாப்பு கியர்களுடன் நல்ல தரமான ஹெல்மெட்டை எப்போதும் அணிந்துகொண்டு வாகனம் ஓட்டுங்கள்.

2) நீங்கள் ஓட்டும் பைக் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்று நினைக்காதீர்கள், உங்கள்  வசதிக்கேற்ப வாகனங்களை நீங்கள் தேர்ந்தெடுப்பது நல்லது.  மைலேஜ் பைக்குகள் உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும்.  

3) இப்போதுள்ள பல ஹெல்மெட்டுகள் மேம்படுத்தப்பட்ட நவீன தொழில்நுட்பத்துடன் ப்ளூடூத் இணைப்பு ஆப்ஷன்களுடன் வருகிறது.  இது சிறப்பாக தெரிந்தாலும் சில சமயங்களில் இது உங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடும்.  வாகனம் ஓட்டும்போது பாட்டு கேட்டுக்கொண்டே செல்வது பிடித்தமானதாக இருந்தாலும் பெரும்பாலான சமயங்களில் இவைதான் விபத்துக்களை ஏற்படுத்தியும் விட காரணமாக அமைகிறது.  நீண்ட தூரம் பயணம் செய்பவர்களுக்கு இசை ஒரு சிறந்த துணையாக இருக்கும், ஆனால் நீங்கள் குறைந்த அளவில் சத்தத்தை வைத்து கேளுங்கள்.

4) போதைப்பொருள் பயன்படுத்தியிருக்கும்போது வாகனத்தை ஓட்டுவது நாம் செய்யும் மிகப்பெரிய தவறுகளில் ஒன்று.  குளிர்காலங்களில் பலரும் தங்கள் உடலின் வெப்பநிலையை அதிகரிக்க மது அருந்துகிறார்கள், மது அருந்திய நிலையிலும் வாகனத்தை ஓட்டுகின்றனர்.  ஆனால் சாலையில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது சட்டப்படி தவறு மற்றும் விபத்துக்கு வழிவகுக்கும்.  எனவே உங்கள் உடலின் வெப்பநிலையை அதிகரிக்க நீங்கள் வேறு எதாவது சூடான பானத்தை குடிக்கலாம்.

5) தொடர்ந்து மணிக்கணக்கில் இருசக்கர வாகனம் ஓட்டுவது உங்கள் உடலுக்கும், மனதுக்கும் சோர்வை ஏற்படுத்தும்.  உங்கள் மனமும், உடலும் சோர்வாக உங்களால் கவனமுடன் வாகனம் ஓட்டமுடியாது.  எனவே உங்களால் முடிந்தவரை ஓய்வு எடுத்து, காபி குடித்து உங்களை நீரேற்றமாகவும் புத்துணர்ச்சியுடனும் வைத்துக் கொண்டு பின்னர் வாகனத்தை ஓட்டுங்கள்.

6) பயணம் செய்வதற்கு முன் உங்கள் இருசக்கர வாகனத்தின் டயரில் போதுமான அளவு காற்று உள்ளதா என்பதை சரிபார்த்துக்கொள்ள வேண்டியது அவசியமான ஒன்று.  நீண்ட தூரம் பயணம் செய்பவர்கள் தங்கள் வாகனத்தை பயணத்திற்கு முன்னர் நன்கு சரிபார்க்க வேண்டும்.  பைக்கில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்பதை சோதித்து, குறைபாடுகள் இருந்தால் அதனை சர்வீஸுக்கு விடவேண்டும்.  டயர்கள், பிரேக்குகள் & போல்ட், சங்கிலிகள் & கியர் மற்றும் ஹேண்டில்பார் போன்றவற்றை நீங்கள் சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.

7) நீங்கள் நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டியிருந்தால் லேஸ்கள் கொண்ட பெரிய பூட்ஸ்களை அணிந்துகொள்ளுங்கள்.  விலையுயர்ந்த காலணியை வாங்குவது அவசியமில்லை, நீங்கள் அணியும் காலணிகள் உங்களுக்கு பாதுகாப்பானதாக இருக்குமா என்பதை தான் நீங்கள் உறுதிப்படுத்த வேண்டும்.

8) பொதுவாக இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் செய்யக்கூடிய முக்கியமான தவறு என்னவென்றால் சாலையில் நம்மை முந்தி செல்பவரை தாங்கள் முந்தி செல்ல வேண்டும் என்பது தான்.  காரையோ அல்லது  அல்லது சாலையைக் கடக்கும் மக்களையோ முந்திச் செல்லும் போது கியரை மாற்றுவது உங்களை பெரும் விபத்துக்குள் தள்ளிவிடும்.  அதனால் எப்போதும் சாலையில் செல்ல்லும்போது நிதானமாக செல்லுங்கள் மற்றவரை முந்திச்செல்ல நினைக்காதீர்கள்.

மேலும் படிக்க | ஹோலி பண்டிகை: இரண்டு சிலிண்டர்கள் இலவசம்... அரசு அதிரடி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News