தீபாவளி ரேஸில் போட்டியிடும் மூன்று அதிரடி படங்கள்!

வருகிற தீபாவளிக்கு மொத்தம் 3 படங்கள் ரீலீஸாகிறது. அவற்றில் சர்கார், பில்லா பாண்டி மற்றும் களவாணி மாப்பிள்ளை தீபாவளிக்கு திரைக்கு வருகிறது.

Last Updated : Nov 4, 2018, 10:29 AM IST
தீபாவளி ரேஸில் போட்டியிடும் மூன்று அதிரடி படங்கள்! title=

வருகிற தீபாவளிக்கு மொத்தம் 3 படங்கள் ரீலீஸாகிறது. அவற்றில் சர்கார், பில்லா பாண்டி மற்றும் களவாணி மாப்பிள்ளை தீபாவளிக்கு திரைக்கு வருகிறது.

சர்கார்:- 

AR முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'சர்கார்'. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராதா ரவி, யோகி பாபு என பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. துப்பாக்கி, கத்தி திரைப்படத்திற்கு அடுத்து மூன்றாவது முறையாக நடிகர் விஜய் மற்றும் AR முருகதாஸ் இப்படத்தில் இணைந்துள்ளனர். நடிகர் விஜய்-ன் 62-வது திரைப்படமான இப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது.

பில்லா பாண்டி:-

நடிகர் அஜித்தை மையமாக வைத்து ராஜ் சேதுபதி இயக்கத்தில் ஆர்.கே.சுரேஷ், இந்துஜா, சாந்தினி, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பில்லா பாண்டி’. இப்படத்தில் அஜித் ரசிகராக நடித்திருக்கிறார் ஆர்.கே.சுரேஷ். "பில்லா பாண்டி" படம் வரும் தீபாவளிக்கு தான் திரைக்கு வருகிறது. ந்த தீபாவளிக்கு நேரடியாக அஜித் படம் வராததால், ஆர்.கே.சுரேஷ் அஜித் ரசிகராக நடித்திருக்கும் "பில்லா பாண்டி" படம் திரைக்கு வருவதால், அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

களவாணி மாப்பிள்ளை:- 

அட்டகத்தி தினேஷ், அதிதி மேனன் இணைந்து நடித்துள்ள ‘களவாணி மாப்பிள்ளை’ படம் தீபாவளிக்கு களமிறங்குகிறது. இந்தப்படத்தில் ஆனந்தராஜ், தேவயானி, ரேணுகா, மனோபாலா, மொட்டை ராஜேந்தின், மூனீஷ்காந்த் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு என்.ஆர்.ரகுநந்தன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை ராஜபுஷ்பா பிக்சர்ஸ் சார்பில் காந்தி மணிவாசகம் தயாரித்துள்ளார். படத்தை, அவரது மகன் காந்தி மணிவாசகம் இயக்கி உள்ளார். 

Trending News