Gold at Lowest Price: தைத் திருநாள் பொங்கலையொட்டி நீங்கள் தங்கம் வாங்கும் எண்ணத்தில் இருந்தால், உங்களுக்காக சில நல்ல செய்தி உள்ளது. தங்க பத்திரங்களை மிகவும் மலிவான விலையில் வாங்குவதற்கான வாய்ப்பை அரசாங்கம் உங்களுக்கு வழங்குகிறது.
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) சமீபத்தில் சோவரின் தங்கப் பத்திரங்களின் ஒன்பதாவது தொடரை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் ஜனவரி 11 முதல் ஜனவரி 15 வரை மலிவு விலையில் தங்கத்தை வாங்கலாம்.
ஜனவரி 8 ஆம் தேதி ரிசர்வ் வங்கி தங்கத்தின் விலையை (Gold Price) ஒரு கிராமுக்கு ரூ .5,104 என நிர்ணயித்துள்ளதாக அறிவித்தது. இது சந்தை விகிதத்தை விட குறைவாகும். டிஜிட்டல் முறையில் கட்டணம் செலுத்தினால், கிராமுக்கு ரூ .50 கூடுதல் தள்ளுபடி கிடைக்கும். அதாவது 10 கிராம் தங்கத்தை வாங்க ரூ .500 தள்ளுபடி பெறலாம்.
குறைந்ததபட்சம் ஒரு கிராம், அதிகபட்சம் 500 கிராம் தங்கம் வாங்கலாம்
இந்த திட்டத்தின் கீழ், நீங்கள் குறைந்தபட்சமாக ஒரு கிராம் மற்றும் அதிகபட்சமாக 500 கிராம் தங்கத்தை வாங்கலாம். மேலும் தங்க பத்திரங்களில் முதலீடு செய்வதால் வரி விலக்கும் கிடைக்கிறது. தங்கப் பத்திரங்களுக்கு அரசாங்கம் ஆண்டுக்கு இரண்டரை சதவீத வட்டியை (Interest) உங்களுக்கு வழங்குகிறது. இதன் பொருள், தங்கத்தின் விலை உயர்வதால் வரும் லாபத்தோடு உங்களுக்கு அதற்கான வட்டியும் கிடைக்கும்.
ALSO READ: எவ்வளவு ரூபாய்க்கு Gold, Silver வாங்கினால் KYC அவசியமில்லை? முக்கியமான தகவல்கள் இதோ…
தங்க பத்திர சான்றிதழ் முற்றிலும் பாதுகாப்பானது
சோவரின் தங்கப் பத்திரத்தில் முதலீட்டாளர்களுக்கு பிசிக்கல் தங்கம் கிடைக்காது. அதற்கு பதிலாக தங்கப் பத்திர சான்றிதழ்கள் வழங்கப்படும். இது பிசிக்கல் தங்கத்தை விட பாதுகாப்பானது. மெச்யூரிடி காலம் முடிந்ததும், முதலீட்டாளர் பத்திரத்தை பணமாக்க செல்லும்போது, அந்த நேரத்தில் தங்கத்தின் விலைக்கு சமமான பணத்தை அவர் பெறுகிறார்.
பான் அட்டை தேவை
நீங்கள் சோவரின் தங்கப் பத்திரங்களில் (Sovereign Gold Bond) முதலீடு செய்ய விரும்பினால், உங்களிடம் PAN அட்டை (PAN Card) கண்டிப்பாக இருக்க வேண்டும். இதற்கு நீங்கள் அனைத்து வணிக வங்கிகளிலும் (ஆர்.ஆர்.பி., சிறு நிதி வங்கி, கட்டண வங்கி தவிர), தபால் அலுவலகம், ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (SHCIL), தேசிய பங்குச் சந்தை (NSE), மும்பை பங்குச் சந்தை (BSE) அல்லது நேரடி முகவர்களிடம் விண்ணப்பித்து வாங்கலாம்.
சோவரின் தங்க பத்திரங்கள் நீண்ட கால முதலீட்டு முறைகளாகும். அவற்றின் மெச்யூரிட்டி காலம் எட்டு ஆண்டுகள். இருப்பினும், ஐந்தாம் ஆண்டிலிருந்து நீங்கள் அதை பணமாக்கிக்கொள்ளலாம். நீங்கள் பத்திரத்தை பணமாக்கும் போது, அப்போதிருக்கும் தங்கத்தின் விலையின் அடிப்படையில் உங்களுக்கு தொகை கிடைக்கும்.
ALSO READ: Gold வாங்கினா, அரசு discount கிடைக்கும் தெரியுமா? தங்கம் வாங்க பொன்னான வாய்ப்பு
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR