7th Pay Commission பம்பர் செய்தி: 3% அல்ல... 4% டிஏ ஹைக் கிடைக்கும், சம்பளம் எகிறும்.. கணக்கீடு இதோ

7th Pay Commission: ஜூலை 2023 இல், அகவிலைப்படி குறைந்தபட்சம் 4 சதவீதம் அதிகரிக்கும் என நிபுணர்கள் கருதுகிறார்கள். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 20, 2023, 01:13 PM IST
  • 3% அகவிலைப்படி உயர்வு என்ற செய்தி ஆதாரமற்றது
  • 4 சதவீத அதிகரிப்பு எப்படி நடக்கும்?
  • சம்பள உயர்வு எவ்வளவு இருக்கும்?
7th Pay Commission பம்பர் செய்தி: 3% அல்ல... 4% டிஏ ஹைக் கிடைக்கும், சம்பளம் எகிறும்.. கணக்கீடு இதோ title=

அகவிலைப்படி உயர்வு, சமீபத்திய செய்திகள்: மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. ஜூலை 1, 2023 முதல் அமல்படுத்தப்படும் அகவிலைப்படி உயர்வுக்கான (DA Hike) காத்திருப்பு விரைவில் முடிவுக்கு வரவுள்ளது. செப்டம்பர் இறுதியில் அரசால் இது குறித்த அறிவிப்பு வெளியகலாம். AICPI குறியீட்டின் எண்களில் இருந்து எவ்வளவு அகவிலைப்படி அதிகரிக்கும் என்பதற்கு தெளிவாக உள்ளது. ஆனால், அது அரசாங்கத்தால் முடிவு செய்யப்பட்டு அமைச்சரவையின் ஒப்புதலுக்குப் பிறகு அறிக்கை வெளியிடப்படும். எனினும், சமீபகாலமாக இது குறித்து குழப்பமான சூழ்நிலை உருவாகியுள்ளது. சில அறிக்கைகளில், அகவிலைப்படி (DA) 3 சதவீதம் அதிகரிக்கும் என்று கூறப்பட்டது. அதாவது தற்போதைய விகிதம் 42 சதவீதத்தில் இருந்து 45 சதவீதமாக அதிகரிக்கும். ஆனால், இது ஆதாரமற்ற கூற்று. இது பற்றி விரிவாக இந்த பதிவில் காணலாம்.

3% அகவிலைப்படி உயர்வு என்ற செய்தி ஆதாரமற்றது

அகவிலைப்படி (DA) என்பது அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (AICPI) மாதாந்திர எண்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. ஜூலை 2023 முதல் பொருந்தும் அகவிலைப்படியின் எண்ணிக்கை ஜனவரி முதல் ஜூன் வரை AICPI குறியீட்டால் தீர்மானிக்கப்படுகிறது. ஆறு மாதங்களுக்கான எண்களின் போக்கைப் பார்த்தால், அகவிலைப்படியில் 4 சதவீதம் அதிகரிப்பு இருப்பது உறுதி. இதற்கான கணக்கீடு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் 3 சதவிகிதம் அதிகரிப்பு என்ற பேச்சு தவறாகவே தெரிகிறது. இருப்பினும், இறுதி முடிவு அரசிடம் உள்ளது. ஆனால், அமைச்சரவையின் ஒப்புதல் கிடைக்கும் வரை, இது குறித்து எதையும் தெளிவாக கூற முடியாது. 

4 சதவீத அதிகரிப்பு எப்படி நடக்கும்? 

சில நாட்களுக்கு முன் ஊழியர்களின் அகவிலைப்படியில் 3 சதவீதம் திருத்தம் செய்யப்படும் என்று ஒரு தகவல் வந்தது. ஆனால், இந்த 3 சதவீத கணக்கீடு எங்கிருந்து வந்தது, அதற்கான காரணம் என்ன என்பது தெளிவாக இல்லை. கணக்கீட்டின்படி பார்த்தால், இம்முறையும் அகவிலைப்படியில் 4 சதவீதம் ஏற்றம் இருக்கும் என்பது உறுதியானது.

இப்படித்தான் DA கணக்கிடப்படும்

ஜூலை 2023 இல், அகவிலைப்படி குறைந்தபட்சம் 4 சதவீதம் அதிகரிக்கும் என நிபுணர்கள் கருதுகிறார்கள். இதன் பின்னணியில் உள்ள தர்க்கம் என்னவென்றால், விலைக் குறியீட்டு விகிதத்தில் காட்டப்படும் நகர்வு காரணமாக, டிஏ மதிப்பெண் 46 சதவீதத்தைத் தாண்டியுள்ளது. ஜூன் மாதத்தில், குறியீட்டின் எண்ணிக்கை 136.4 புள்ளிகளாக இருந்தது. இதன் அடிப்படையில் கணக்கீடு பார்த்தால், டிஏ மதிப்பெண் 46.24ஐ எட்டியுள்ளது. அதாவது மொத்த டிஏவில் 4% அதிகரிப்பு இருக்கும். ஏனெனில், டிஏ ஹோல் நம்பராக எடுக்கப்படுகிறது. இந்த எண்ணின் தசம எண் 0.51 க்கும் குறைவாக இருப்பதால் அது 46 சதவீதமாக மட்டுமே கருதப்படும்.

DA உயர்வை இப்படி புரிந்து கொள்ளலாம்

டிசம்பர் 2023 இல் குறியீட்டு எண் 132.3 புள்ளிகளாக இருந்தது, மொத்த DA மதிப்பெண்ணை 42.37 சதவீதமாக மாற்றியது. இதற்குப் பிறகு, ஜனவரியில் குறியீட்டு எண் 132.8 ஐ எட்டியது, அப்போது டிஏ மதிப்பெண் 43.08 ஆக அதிகரித்தது. அதேபோல், ஒவ்வொரு மாதமும் மதிப்பெண் முடிவு செய்யப்படுகிறது. கீழே இதற்கான கணக்கீட்டை பார்க்கவும்.

Table

மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு டபுள் பம்பர் ஜாக்பாட்.. அடுத்த மாதம் ஊதிய உயர்வு

46% அகவிலைப்படி உயர்வு உறுதி 

மேலே கொடுக்கப்பட்டுள்ள கணக்கீட்டைப் பார்த்தால், 7வது ஊதியக் குழுவின் கீழ் மீண்டும் 4 சதவீதம் உயர்வு இருக்கும். இதன் மூலம், மொத்த அகவிலைப்படி 46 சதவீதமாக உயரும். இது ஜூலை 1, 2023 முதல் செயல்படுத்தப்படும். இருப்பினும், அதன் அறிவிப்புக்காக நாம் சிறிது காத்திருக்க வேண்டும். இது செப்டம்பர் இறுதியில் அல்லது அக்டோபர் தொடக்கத்தில் அறிவிக்கப்படலாம். மத்திய ஊழியர்களுக்கு ஜூலை முதல் அறிவிக்கப்படும் வரை நிலுவைத் தொகை (DA Arrears) வழங்கப்படும்.

சம்பள உயர்வு எவ்வளவு இருக்கும்?
குறைந்தபட்ச அடிப்படை சம்பள கணக்கீடு (ரூ 18,000)

1. பணியாளரின் அடிப்படை சம்பளம் - ரூ 18,000
2. புதிய அகவிலைப்படி (46%) - ரூ.8280/மாதம்
3. இதுவரையிலான அகவிலைப்படி (42%) - ரூ.7560/மாதம்
4. அகவிலைப்படி அதிகரிப்பு - 8280-7560= ரூ 720/மாதம்
5. ஆண்டு ஊதிய உயர்வு - 720X12 = ரூ 8640

அதிகபட்ச அடிப்படை சம்பள கணக்கீடு (ரூ 56,900)

1. பணியாளரின் அடிப்படை சம்பளம் -  ரூ 56,900
2. புதிய அகவிலைப்படி (46%) - ரூ 26,174/மாதம்
3. இதுவரை அகவிலைப்படி (42%) - ரூ 23,898/மாதம்
4. அகவிலைப்படி அதிகரிப்பு - 26,174-23,898= ரூ 2276/மாதம்
5. ஆண்டு ஊதிய உயர்வு - 2276X12 = ரூ 27312

குறிப்பு: இது மதிப்பிடப்பட்ட சம்பளம், HRA போன்ற அலவன்ஸ்களைச் சேர்த்த பின்னரே இறுதிச் சம்பளம் வழங்கப்படும்.

மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு இரட்டை ஜாக்பாட்.. அடுத்த மாதம் அறிவிப்பு, பம்பர் ஊதிய உயர்வு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News