BMW Electric Scooter: மிக விரைவில் இந்தியாவில் அறிமுகம், அசத்தும் அம்சங்கள், விலை இதோ

BMW Motorrad சில ஆண்டுகளுக்கு முன்பு CE 04 இன் கான்செப்ட் லிங்கை வெளியிட்டது. அதைத் தொடர்ந்து நிறுவனம் 2020 ஆம் ஆண்டில் உற்பத்திக்கு தயாராக இருக்கும் அதன் பதிப்புகளையும் முன்வைத்தது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 8, 2021, 02:49 PM IST
  • BMW மோட்டார் சைக்கிள் பிராண்டான பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் தனது புதிய BMW CE 04 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பற்றிய செய்தியை வெளியிட்டுள்ளது.
  • நகர்ப்புறங்கள்தான் இந்த மின்சார வாகனத்தின் முதல் இலக்காக இருக்கும்.
  • இந்த ஸ்கூட்டரில் மூன்று நிலையான சவாரி முறைகள் உள்ளன.
BMW Electric Scooter: மிக விரைவில் இந்தியாவில் அறிமுகம், அசத்தும் அம்சங்கள், விலை இதோ title=

சொகுசு கார் நிறுவனமான பிஎம்டபிள்யூவின் (BMW) மோட்டார் சைக்கிள் பிராண்டான பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் தனது புதிய BMW CE 04 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பற்றிய செய்தியை வெளியிட்டுள்ளது. கூடிய விரைவில் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ள வாகனங்களின் வரிசையில் இந்த மின்சார வாகனமும் சேர்க்கப்பட்டுள்ளது.

BMW Motorrad சில ஆண்டுகளுக்கு முன்பு CE 04 இன் கான்செப்ட் லிங்கை வெளியிட்டது. அதைத் தொடர்ந்து நிறுவனம் 2020 ஆம் ஆண்டில் உற்பத்திக்கு தயாராக இருக்கும் அதன் பதிப்புகளையும் முன்வைத்தது.

நிறுவனம் மூலம் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இதற்கு ஒத்த வடிவமைப்பைக் கொண்டுள்ளது. CE 04 ஸ்கூட்டரின் வடிவமைப்பு வரும்  காலத்திற்கு ஏற்றவாறு நவீனமாகவும் டிரெண்டாகவும் உள்ளது.

பி.எம்.டபிள்யூ சி.இ 04 (BMW CE 04) திட்ட மேலாளர் ஃப்ளோரியன் ராம்ஹில்ட், புதிய பி.எம்.டபிள்யூ சி.இ 04, பி.எம்.டபிள்யூ மோட்டாராட்டின் எலக்ட்ரோமொபிலிட்டி செயலுத்தியின் ஒரு தொழிநுட்ப ரீதியான தொடர்ச்சி என்று கூறியுள்ளார். "நகர்ப்புறங்கள்தான் இந்த மின்சார வாகனத்தின் (Electric Vehicle) முதல் இலக்காக இருக்கும். இந்த பகுதிகளில்தான் இது புதிய அளவுகோலை அமைக்கிறது, தொழில்நுட்பம் மற்றும் தோற்றம் என இரண்டிலும் இது அசத்தும் வகையில் உள்ளது” என்று அவர் கூறினார்.

இந்தியாவில் BMW CE 04 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை

இந்தியாவில் பிஎம்டபிள்யூ சிஇ 04 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் (Electric Scooter) வெளியீடு மற்றும் விலை வரம்பு குறித்து நிறுவனம் எந்த தகவலையும் வெளியிடவில்லை. இருப்பினும், யுஎஸ்ஏ வலைத்தளத்தின்படி, நிறுவனம் இந்தியாவின் இந்த மின்சார ஸ்கூட்டரின் உற்பத்தியாளரால் பரிந்துரைக்கப்பட்ட ரேட்டெயில் விலையை (MSRP) 11,795 டாலருக்கு பரிந்துரைத்துள்ளது. இந்த தொகை இந்திய ரூபாயில் (INR) சுமார் 8.8 லட்சம் இருக்கும்.

ALSO READ: Ola E Scooter: படங்களை பகிர்ந்து டீசர் வெளியிட்ட CEO, விரைவில் வருகிறது ஓலா!!

BMW CE 04 மின்சார ஸ்கூட்டர்: விவரக்குறிப்புகள்

- பிஎம்டபிள்யூ சிஇ 04 அதிகபட்சமாக 42 ஹெச்பி அவுட்புட்டைக் கொண்டுள்ளது. மேலும் இது அதிகபட்சமாக 75 mph வேகத்தில் செல்ல முடியும்.

- பி.எம்.டபிள்யூ சி.இ 04 பேட்டரி செல் திறன் 6060.6 Ah (8.9 kWh) ஆகும். இது சுமார் 80 மைல்கள் மதிப்பீட்டு வரம்பை வழங்குகிறது.

- புதிதாக வெளிவரவுள்ள பைக்கில் 147.6 வோல்ட் லித்தியம் அயன் பேட்டரி இருக்கும். இதை லெவல் 1 ஹோம் சாக்கெட், லெவல் 2 வால்பாக்ஸ் அல்லது லெவல் 2 பொது சார்ஜிங் ஸ்டேஷனைப் பயன்படுத்தி சார்ஜ் செய்யலாம்.

- புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 10.25 இன்ச் டிஎஃப்டி வண்ணத் திரையுடன் ஒருங்கிணைந்த வழிசெலுத்தல் மற்றும் விரிவான இணைப்பு வசதிகளுடன் வருகிறது.

- இந்த ஸ்கூட்டரில் மூன்று நிலையான சவாரி முறைகள் உள்ளன. அவை “ECO”, “Rain” மற்றும் “Road” ஆகியவை ஆகும். கூடுதலாக ஒரு ரைடிங் பயன்முறையும் கிடைக்கிறது.

- முன்பக்கத்தில், பி.எம்.டபிள்யூ சி.இ 04 0.5 x 15-இன்ச் லைட் அலாய் சக்கரத்தைப் பயன்படுத்துகிறது. பின்புறத்தில் 4.5 x 15-இன்ச் லைட் அலாய் டிஸ்க் வீல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ALSO READ: Ola Electric Scooter: அட்டகாச அம்சங்களுடன் விரைவில் இந்தியாவில் அறிமுகம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News