பால் குடிப்பதால் உடலில் பல நன்மைகள் ஏற்படுகின்றன. பாலில் கால்சியம், புரதம், கொழுப்பு மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. மேலும், உலகிலேயே அதிக பால் உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று ஆகும். உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் மற்றும் டயட்டில் இருப்பவர்கள் பால் சார்ந்த பொருட்கள் சாப்பிடுவதை தவிர்த்து வருகின்றனர். ஆனால் அப்படி செய்வது தவறு. தினசரி உணவில் ஒவ்வொருவரும் பால் அல்லது பால் சார்ந்த பொருட்களை சேர்த்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. பால் கால்சியத்தின் ஆதாரமாக பார்க்கப்படுகிறது. 100 கிராம் குறைந்த கொழுப்புள்ள பாலில் 125 மில்லி கிராம் கால்சியமும், 100 கிராம் அதிக கொழுப்புள்ள பாலில் 119 கிராம் கால்சியமும் உள்ளது.
மேலும் படிக்க | சர்க்கரை நோய் பாடாய் படுத்துகிறதா? இந்தப் பச்சைப் பழம், இலை சாப்பிட்டால் போதும்
பால் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்
ஆய்வின்படி, 19 முதல் 50 வயது வரை நபர்களுக்கு தினமும் 1000 மி.கி கால்சியம் உடலுக்கு தேவைப்படுகிறது. இந்த அளவில் 10 முதல் 12 சதவீதத்தை பாலில் இருந்து பெறலாம். தினசரி தினமும் பால் குடிப்பதால் பற்கள் மற்றும் எலும்புகள் வலுவடையும். மேலும் தினசரி பால் குடிப்பதாலும் மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் பெறலாம். அதே சமயம் செரிமானத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் தினமும் வெதுவெதுப்பான பாலை குடிக்கலாம். சிறு குழந்தைகளுக்கு புரோட்டீன் குறைபாட்டை நீக்க தினமும் பால் கொடுக்க வேண்டும். பாலில் அதிக அளவு புரதம் உள்ளது. பிட்னஸில் அதிகம் ஆர்வம் கொண்டவர்கள் பால் அதிகம் குடிப்பார்கள். காரணம் உடலுக்கு தேவையான புரதம் எளிதாக பாலில் இருந்து கிடைக்கிறது.
தினசரி பால் குடிப்பதால் நம் உடலை நீரேற்றமாக வைத்திருக்க முடியும். ஜிம் செல்பவர்கள் அல்லது வீட்டிலேயே வொர்க்அவுட் செய்பவர்கள் தினமும் பால் குடித்தால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கும். உடலில் நீரிழப்பைத் தவிர்க்க, தினமும் ஒரு கிளாஸ் பால் கண்டிப்பாக குடிக்க வேண்டும். அலுவலக வேலை பளு, வீட்டில் பிரச்சனை காரணமாக அதிக மன அழுத்தம் இருந்தால் தூங்கும் முன்பு சூடான பால் குடிப்பது உடலுக்கு நன்மை பயக்கும். சூடான பால் மன அழுத்தத்திலிருந்து விடுபட உதவுகிறது.
பால் குடிப்பதால் ஏற்படும் தீமைகள்
சிலருக்கு பால் குடிப்பதால் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும். இதன் காரணமாக உடல் பருமன், இரத்த அழுத்தம் அல்லது இதயம் தொடர்பான பிற பிரச்சனைகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. மேலும், பாலில் அதிக கொழுப்புச் சத்து இருப்பதால் பலருக்கு வாயு பிரச்சனையும் அதிகரிக்கிறது. தினசரி பால் குடிக்கும் போது சில தோல் பிரச்சனைகளும் ஏற்படலாம். பருக்கள் மற்றும் தோல் அலர்ஜி போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பாலில் அதிக அளவு கொழுப்பு இருப்பதால் பலரது உடல் அதனை ஜீரணிக்க அதிக நேரம் எடுத்துக்கொள்கிறது. பலருக்கும் முகப்பரு வர பால் ஒரு காரணமாக கூட இருக்கலாம். மேலும் பாலில் கூடுதல் கலோரிகள் கிடைக்காது.
மேலும் படிக்க | நீங்கள் அதிக சர்க்கரை சாப்பிடுகிறீர்களா? இந்த அறிகுறிகள் இருந்தால் உஷார்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ