‘சார் ப்ளீஸ் என் பொண்டாட்டிய கொலை செய்ய 2 நாள் லீவு வேணும்’ விண்ணப்பம்...

தனது மனைவியை கொலை செய்ய விடுமுறை தருமாறு வங்கி மேலாளருக்கு வங்கி ஊழியர் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!   

Last Updated : Jan 24, 2019, 05:50 PM IST
‘சார் ப்ளீஸ் என் பொண்டாட்டிய கொலை செய்ய 2 நாள் லீவு வேணும்’ விண்ணப்பம்... title=

தனது மனைவியை கொலை செய்ய விடுமுறை தருமாறு வங்கி மேலாளருக்கு வங்கி ஊழியர் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!   

"மனைவி அமைவதெல்லாம் கடவுள் கொடுத்த அவரம்" என்ற பழமொழி நாம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆனால், இந்த உலகில் கணவனே தனது மனைவியை கொலை செய்வதும். கள்ளகாதளுக்காக கணவனை மனைவி கொலை செய்வதும். தான் பெற்ற குழந்தைகளையே தாய் கொலை செய்வதும் என நிறைய சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. 

இந்நிலையில், தனது மனைவியை கொலை செய்ய தனக்கு விடுமுறை தருமாறு வங்கி மேலாளர் ஒருவர் விடுமுறை விண்ணப்பம் எழுதியுள்ள வேடிக்கையான சம்பவம் நடந்துள்ளது. அவர் தன் உயர் அதிகாரிகளுக்கு மட்டும் அல்லது, மத்திய அமைச்சர், பிரதமர், ஜனாதிபதி உள்ளிட்டோருக்கும் கடிதம் எழுதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பீஹார் மாநிலம் பக்ஸரை சேர்ந்தவர் முன்னா பிரசாத். இவர் அங்குள்ள கிராம வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி, சிறுநீரக பாதிப்பு நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். 

இதனால், முன்னா பிரசாத், அடிக்கடி விடுப்பு எடுக்க வேண்டியிருந்தது. ஓர் ஆண்டில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக விடுப்பு எடுத்ததால், இதற்கு மேலும், விடுப்பு வழங்க, அவரது உயர் அதிகாரிகள் மறுத்துவிட்டனர். 

இதனால் விரக்தி அடைந்த முன்னா பாய், தன் மனைவியை கொலை செய்து விட்டு, அவருக்கு இறுதிச் சடங்குகள் செய்ய, இரண்டு நாட்கள் விடுப்பு வழங்கும்படி, தன் மேலதிகாரிக்கு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தின் நகலை, பாட்னாவில் உள்ள வங்கியின் தலைமையகம், மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சரின் அலுவலகம், பிரதமர், ஜனாதிபதியின் அலுவலகங்களுக்கும் அனுப்பி வைத்தார். 

இதனால் அதிர்ச்சி அடைந்த வங்கி நிர்வாகம் உடனடியாக அவருக்கு விடுப்பு வழங்கி உத்தரவிட்டது. தன் மனைவியின் உடல் நிலை நாளுக்கு நாள் மோசமாவதால், அவரை கவனித்து கொள்ள தனக்கு அதிக நாட்கள் விடுப்பு தேவைப்படுவதாகவும், அதன் காரணமாகவே, இப்படி கடிதம் எழுதியதாகவும், முன்னா மிக வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். முன்னாவின் இந்த செயல், வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

Trending News