வல்வினைகளை நீக்கும் மோகினி ஏகாதசியும் ஹர்ஷன யோகமும் சேர்ந்த சுபதினம் இன்று

இன்று மோகினி ஏகாதசி பக்தியுடன் அனுசரிக்கப்படுகிறது... இந்த நாளன்று செய்யப்படும் பூஜைகள் மறுபிறவி இல்லாமல் செய்யும்

Written by - Malathi Tamilselvan | Last Updated : May 12, 2022, 07:18 AM IST
  • இன்று மோகினி ஏகாதாசி நாள்
  • இன்றைய விரதம் பிறப்பறுக்கும்
  • விஷ்ணு பகவான் மோகினி அவதாரம் எடுத்த நாள் இன்று
வல்வினைகளை நீக்கும் மோகினி ஏகாதசியும் ஹர்ஷன யோகமும் சேர்ந்த சுபதினம் இன்று title=

மே 12ம் நாளான இன்று, ஏகாதசி நாள், அதுவும் இது மோகினி ஏகாதசி நாள். இன்று செய்யும் ஒரு பரிகாரம் ஒரே இரவில் உங்கள் அதிர்ஷ்டத்தை மாற்றி வினைப்பயன்களை அகற்றும்.

இந்து மதத்தில், இன்றைய நாள் மிகவும் முக்கியத்துவம் பெற்றது. எந்த ஒரு புதிய வேலையும் செய்யக்கூடிய நல்ல நாள் இன்று. எந்த ஒரு சுப காரியத்தையும் செய்ய முதலில் நேரம் காலத்தை பார்க்கிறோம்.

வைகாசி மாதத்தின் வளர்பிறை ஏகாதசி, மோகினி ஏகாதசியாக அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் விஷ்ணுவின் மோகினி ரூபம் வழிபடப்படுகிறது. இந்த நாளில் விரதம் இருப்பது பல நன்மைகளைக் கொடுக்கும்.

இன்றைய நாள் சுப முகூர்த்த நாள் மட்டுமல்ல, மோகினி ஏகாதசி நாளாக இருப்பதால், செய்யும் காரியங்களில் வெற்றியும், திருப்தியும் ஏற்படும். மே 12ம் நாளான இன்று பொதுவாகவே அனைத்து ராசிக்காரர்களுக்கும் அற்புதமான நாளாக இருக்கும்.  

மேலும் படிக்க | செவ்வாய் - சனி கூட்டணி: மே 17 வரை சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்

மே 12 ஏன் சிறப்பு?
மே 12 மிகவும் சுபமான நாட்களில் ஒன்று. இன்று மோகினி ஏகாதசி என்பதோடு, பல சிறப்பு யோகங்களும் கூடி வந்துள்ளன. மே 12 அன்று, மூன்று முக்கிய கிரகங்கள் அந்தந்த ராசிகளில் இருக்கும். இதனுடன் மங்களகரமான ஹர்ஷன யோகமும் உருவாகியுள்ளது.

இது தவிர, இன்றைய தினம், சந்திரன் அதன் சொந்த ராசியான கன்னியில் இருக்ப்பது மிகவும் சிறப்பாக இருக்கும். ஜோதிடர்களின் கூற்றுப்படி, இந்த நாளில் எந்த சுப காரியத்தையும், நாள் நட்சத்திரம் எதையும் பார்க்காமல் செய்யலாம்.

மோகினி ஏகாதசியின் முக்கியத்துவம்
இந்து மத சாஸ்திரங்களின்படி, ஏகாதசி விரதத்தை அனுசரிக்கும் ஒருவர், விஷ்ணு பகவானின் அருளைப் பெறுகிறார். உலக வாழ்க்கையில் சகல செளபாக்கியங்களையும் அருளும் விஷ்ணு பகவான், நிம்மதியான வசதியான வாழ்க்கையைக் கொடுப்பார்.

அதிலும் மோகினி ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம், வருடக்கணக்கில் தவம் செய்த புண்ணியத்தை ஒருவர் பெறுகிறார்.

மேலும் படிக்க | குரு பார்க்க கோடி நன்மை: கஜகேசரி யோகத்தால் செழிப்பு! சகடயோகம் என்ன செய்யும்

ஏகாதசி நாளில், சூரிய உதயத்தின் போது நீராடி, கிரமப்படி பூஜை புனஸ்காரங்களை செய்து கடவுள் வழிபாடு செய்ய வேண்டும். இன்று துளசியின் முன் நெய் தீபம் ஏற்றுவது சிறப்பு.

கோயிலுக்குச் சென்று கடவுளுக்கு மஞ்சள் நிறத்தில் உள்ள பழங்கள், வஸ்திரம், பழங்கள், பூக்கள் ஆகியவற்றை நிவேதனம். அதன் பிறகு,  துளசி இலைகளை மாலையாக கோர்த்து விஷ்ணுவுக்கு சமர்ப்பிக்கவும்.

இன்றைய மோகினி ஏகாதசி நாளன்று இருக்கும் விரதமானது, செல்வத்துக்கு அதிபதியான அன்னை லட்சுமியை மனம் குளிர்வித்து, உங்கள் வீட்டில் லட்சுமி கடாட்சத்தை என்றென்றும் தங்க வைக்கும்.

இன்று ஏகாதசி திதி, மாலை 06:51 மணிக்கு முடிவடைகிறது. இன்று மோகினி ஏகாதசி விரதம் இருப்பவர்கள், நாளை சூரிய உதயத்திற்குப் பிறகு துவாதசி செய்து விரதத்தை முடிக்க வேண்டும்.

மோகினி ஏகாதசி விரதத்தை கடைபிடிப்பவர்கள், இந்த உலக பந்தத்தில் இருந்தும், உலக மாயைகளில் இருந்து விடுபட்டு முக்தி அடைவார் என்று நம்பப்படுகிறது. அவருக்கு சொர்க்கத்தில் தனி இடம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. 

மேலும் படிக்க | Astro: அனைவரையும் காந்தம் போல் வசீகரிக்கும் திறன் பெற்ற ‘3’ ராசிக்காரர்கள்..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News