செவ்வாய் தோஷத்தால், திருமண வாழ்க்கையில் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். ஜாதகத்தின் செவ்வாயின் நிலையில் காரணமாக செவ்வாய் தோஷம் உருவாகிறது. ஜாதகத்தில் செவ்வாய் லக்னம், நான்காம் வீடு, ஏழாம் வீடு, எட்டாம் வீடு, 12ம் வீடுகளில் இருக்கிறாரோ, அவருக்கு செவ்வாய் தோஷம் இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், செவ்வாய் தோஷத்தினால் ஏற்படும் தடைகள் விலக ஜோதிடத்தில் சில பரிகாரங்கள் கூறப்பட்டுள்ளது
செவ்வாயின் அதிபதி முருகன், என்பதால், செவ்வாய்க் கிழமைகளில் முருகனை வணங்கினால் செவ்வாய் தோஷத்தினால் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும் என கூறப்படுகிறது. கோதுமை ரொட்டி, வெள்ளை எள் கலந்த இனிப்பு பலகாரங்கள், துவரம் பருப்பு போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் கொடுப்பதும் நல்லது. செவ்வாய் கிழமைகளில் விரதமிருந்து செவ்வாய் பகவானுக்கு விளக்கேற்றுவது, கிருத்திகை விரதம், சஷ்டி விரதம் மேற் கொள்வதும், தினமும் கந்தசஷ்டி கவசம் படிப்பதும் செவ்வாய் தோஷத்தினால் ஏற்படும் பிரச்சனைகளை நீக்கும்.
ALSO READ | இன்றும் தொடரும் தை அமாவாசை தர்பணம்! காரணம் இதுதான்
வேம்பு மர கன்றை நடுதல்
நீங்கள் வசிக்கும் இடத்தில் வேப்ப மரக்கன்றை நடவும். இந்த செடி மரமாகும் வரை கவனித்துக் கொள்ளுங்கள். வேண்டுமானால் சற்று பெரிய செடியை நட்டு 43 நாட்கள் பராமரிக்கலாம். இவ்வாறு செய்வதன் மூலம் செவ்வாய் தோஷத்தினால் உண்டான பிரச்சனை தீரும்.
ஹனுமான் சாலிசா
ஹனுமான் சாலிசாவை குறைந்தது 1008 முறை பாராயணம் செய்யவும். இது தவிர பகவான் அனுமனை தவறாமல் வழிபடுங்கள்.
ALSO READ | புதனின் சிறப்பு அருளால் சகல செல்வங்களையும் பெறும் ‘2’ ராசிகள்!
இது தவிர ஏரி குளங்களைத் தூர் வாருவது, கோயில் குளங்களை சுத்தம் செய்வது, நீர் வழித்தடங்களைச் சீர் செய்வது போன்ற பூமிக்கு வளம் சேர்க்கும் செயல்களாலும் நல்ல பலன்கள் கிடைக்கும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர். இது தவிர நாய்க்கு உனவளிக்கலாம்.
மேலும், ஜோதிடரிடம் ஆலோசனை பெற்று, உங்களுக்கு உகந்த பிரத்யேகமான பரிகாரங்களை செய்தி, துன்பம் நீங்கி அமைதி பெறலாம்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)
ALSO READ | கஜமுகன் கணபதி முழுமுதற் கடவுளான வரலாறு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR