7th Pay Commission latest news: மத்திய அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டு மீண்டும் பல மகிழ்ச்சிகரமான செய்திகளை அளிக்கவுள்ளது. 2022 ஜனவரியில் அகவிலைப்படி மீண்டும் ஒருமுறை அதிகரிக்கும். புத்தாண்டில், மீண்டும் ஒரு முறை அகவிலைப்படி அதிகரிப்பு இருக்கக்கூடும் என எதிர்பாக்கப்படுகின்றது.
இதன் காரணமாக ஊழியர்களின் (Central Government Employees) ஊதியம் மீண்டும் உயரும். இருப்பினும், 2022 ஜனவரியில் அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கப்படும் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஆனால், AICPI குறியீட்டின் தரவுகளின்படி, அகவிலைப்படி 3% அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஊழியர்களுக்கு புத்தாண்டில் நல்ல செய்தி கிடைக்கும்
டிசம்பர் 2021 இறுதிக்குள் மத்திய அரசின் சில துறைகளில் பதவி உயர்வுகள் இருக்கும். இது தவிர, பட்ஜெட் 2022 க்கு முன் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் பற்றிய கலந்துரையாடலும் உள்ளது, அதில் ஒரு முடிவு எடுக்கப்படலாம். அப்படி நடந்தால், குறைந்தபட்ச அடிப்படை சம்பளமும் உயரும். ஆனால், தற்போது, அகவிலைப்படியைப் பற்றி AICPI குறியீட்டின் தரவு என்ன சொல்கிறது என்பதை இங்கே காணலாம்.
அகவிலைபப்டி AICPI தரவுகளால் தீர்மானிக்கப்படும்
நிபுணர்களின் கூற்றுப்படி, 2022 ஜனவரியிலும் அகவிலைப்படி (Dearness Allowance) 3% அதிகரிக்கப்படலாம். அதாவது, 3% உயர்வு இருந்தால், மொத்த அகவிலைபப்படி 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக அதிகரிக்கக்கூடும். AICPI தரவுகளின்படி, செப்டம்பர் 2021 வரையிலான புள்ளிவிவரங்கள் இப்போது வெளியாகியுள்ளன. அதன்படி, அகவிலைப்படி (டிஏ) 32.81 சதவீதமாக உள்ளது.
ஜூன் 2021 வரையிலான தரவுகளின்படி, ஜூலை 2021க்கான அகவிலைப்படி 31 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது, இப்போது அதன் மேலதிக புள்ளிவிபரங்களின்படி, அகவிலைப்படி கணக்கிடப்படும், இதில் ஒரு நல்ல அதிகரிப்பைக் காணலாம்.
ஜூலை 2021 முதல் டிஏ கால்குலேட்டர்
ஜூலை 2021: AICPI 353 புள்ளிகள், அகவிலைப்படி 31.81%
ஆகஸ்ட் 2021: AICPI 354 புள்ளிகள், அகவிலைப்படி 32.33%
செப்டம்பர் 2021: AICPI 355 புள்ளிகள், அகவிலைப்படி 32.81%
அக்டோபர் 2021 - -
நவம்பர் 2021 - -
டிசம்பர் 2021 - -
அகவிலைப்படி மதிப்பெண்களின் கணக்கீடு
ஜூலைக்கான கணக்கீடு- 122.8X 2.88 = 353.664
ஆகஸ்டுக்கான கணக்கீடு- 123X 2.88 = 354.24
செப்டம்பர் கணக்கீடு- 123.3X 2.88 = 355.104
அகவிலைப்படி 3 சதவீதம் அதிகரிக்கும்
AICPI குறியீட்டின் (AICPI Index)தரவுகளைப் பார்த்தால், செப்டம்பர் 2021 வரை, அகவிலைப்படி 33 சதவீதத்துக்கு சாமாக உயர்ந்துள்ளது. அதாவது இதன்படி அதில் 2 சதவீதம் உயர்வு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களின் புள்ளிவிவரங்கள் இன்னும் கிடைக்கவில்லை. இது மேலும் 1 சதவீதம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. டிசம்பர் 2021க்குள் CPI (IW) எண்ணிக்கை 125 ஆக இருந்தால், அகவிலைப்படியில் 3 சதவீதம் அதிகரிப்பு இருப்பது உறுதி. அதாவது மொத்த அகவிலைப்படி 3% அதிகரிக்கப்பட்டு மொத்த அகவிலைப்படி 34% ஆக அதிகரிக்கும். இது ஜனவரி 2022 முதல் வழங்கப்படும். இதனால் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளமும் உயரும்.
ALSO READ:7th Pay Commission: சம்பளத்தில் 95,000 ரூபாய் அதிகரிப்பா! கணக்கீடு என்ன?
34% அகவிலைப்படிக்கான கணக்கீடு
அகவிலைப்படியை 3% அதிகரித்தால், மொத்த அகவிலைப்படி 34% ஆக இருக்கும். ரூ.18,000 அடிப்படை சம்பளத்தில், மொத்த ஆண்டு அகவிலைப்படி ரூ.73,440 ஆக இருக்கும். வித்தியாசத்தைப் பற்றி பேசினால், சம்பளத்தில் ஆண்டு அதிகரிப்பு ரூ.6,480 ஆக இருக்கும்.
குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தின் கணக்கீடு
1. ஊழியரின் அடிப்படை சம்பளம்: ரூ 18,000
2. புதிய அகவிலைப்படி (34%): ரூ.6120/மாதம்
3. இதுவரையிலான அகவிலைப்படி (31%): ரூ.5580/மாதம்
4. அகவிலைப்படியில் ஏற்படும் அதிகரிப்பு: 6120- 5580 = ரூ 540/மாதம்
5. ஆண்டு ஊதிய உயர்வு: 540X12 = ரூ.6,480
அதிகபட்ச அடிப்படை சம்பளத்தின் கணக்கீடு
1. ஊழியரின் அடிப்படை சம்பளம்: ரூ 56,900
2. புதிய அகவிலைப்படி (34%): ரூ.19,346 /மாதம்
3. இதுவரையிலான அகவிலைப்படி (31%): ரூ.17,639/மாதம்
4. அகவிலைப்படியில் ஏற்படும் அதிகரிப்பு: 19346-17639= ரூ. 1,707/மாதம்
5. ஆண்டு ஊதிய உயர்வு: 1,707 X12= ரூ. 20,484
ALSO READ:7th Pay Commission: ஊழியர்களுக்கு ஏமாற்றம், அரசு தரப்பில் வந்த மிகப்பெரிய அப்டேட்!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR