Movie Offers: 50% தள்ளுபடி, மலிவான விலையில் Movie பார்க்க செம்ம சான்ஸ்

Movie Offers: மலிவான விலையில் movie பார்க்க உங்களுக்கு சிறந்த வாய்ப்பு தற்போது வழங்கப்பட்டு உள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 15, 2021, 09:13 AM IST
Movie Offers: 50% தள்ளுபடி, மலிவான விலையில் Movie பார்க்க செம்ம சான்ஸ் title=

புதுடெல்லி: வெகு நாட்களாக தியேட்டரில் படம் பார்க்க காத்திருந்த ரசிகர்கள், திரையரங்கம் திறந்தவுடன் குடும்பத்தினர், நண்பர்கள், நெருங்கிய நண்பர்களுடன் படம் பார்க்கப் போகிறார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில், உங்களுக்கும் திரைப்படம் பார்ப்பதில் விருப்பம் இருந்தால், இந்த செய்தி உங்களுக்காக மட்டுமே. இப்போது நீங்கள் திரைப்பட டிக்கெட்டுகளை மலிவாக வாங்கலாம். உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக மக்கள் திரையரங்குகளுக்கு செல்வதை தவிர்த்து வருகின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில், திரையரங்குகள், வங்கிகள், முன்பதிவு பயன்பாடுகள் தங்கள் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றன.

நீண்ட நாட்களாக திரையரங்குகள் மூடப்பட்டது
கொரோனா தொற்று (Coronavirus) குறைந்துள்ள நிலையில், தற்போது இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது. எனினும், நம் நாட்டில் தற்போது தொற்றுநோய்க்கான ஆபத்து இன்னும் முழுமையாக குறையவில்லை, ஆனால் மக்கள் இந்த வைரஸுடன் வாழ கற்றுக்கொள்கிறார்கள். நாட்டின் இயல்பு வாழ்க்கை மற்றும் பொருளாதாரத்தை மீட்டெடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது.

ALSO READ | பல முக்கிய மாற்றங்கள்; முழு விபரம் உள்ளே..!!

இந்த நிலையில், தற்போது திரையரங்குகளை (Cinema Hall) திறக்க தேவையான வழிகாட்டுதல்களுடன் அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், திரையரங்கிற்குச் சென்று படம் பார்ப்பதுடன், பார்வையாளர்களும் கோவிட் விதிகளைப் பின்பற்றுவது அவசியம். நீண்ட நேரமாக மூடியிருந்த திரையரங்கம் திறக்கப்பட்ட நிலையில், பார்வையாளர்களும் படம் பார்க்க தியேட்டர் பக்கம் திரும்பி வருகின்றனர்.

மிகப்பெரிய சலுகையை வங்கி வழங்குகிறது
நாட்டின் 7வது பெரிய பொதுத்துறை வங்கியான 'இந்தியன் வங்கி' (Indian Bank) தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சலுகைகளை வழங்கி வருகிறது. திரைப்பட டிக்கெட்டுகளை வாங்குவதற்கு 50% மிகப்பெரிய சலுகையை வங்கி வழங்குகிறது. நீங்கள் இந்தியன் வங்கி வாடிக்கையாளராக இருந்தால், உங்கள் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி BookMyShow மூலம் டிக்கெட் முன்பதிவு செய்வதில் 50% பம்பர் தள்ளுபடியைப் பெறலாம். இதற்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை வங்கி வழங்கியுள்ளது என்பதை அறியலாம்.

சலுகையைப் பயன்படுத்துவதற்கான இவையே நிபந்தனைகள்
* இதற்கு Indian Bank இன் RuPay கிரெடிட் கார்டு இருக்க வேண்டும்.
* 'Book My Show' என்பதற்குச் சென்று திரைப்பட டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டும்.
* சலுகையின் கீழ், ஒவ்வொரு மாதமும் ஒரு கார்டை மட்டுமே பயன்படுத்த முடியும்.
* டிக்கெட் புக்கிங்கில் 50 சதவீதம் உடனடி தள்ளுபடி கிடைக்கும்.
* இருப்பினும், ஒரு நேரத்தில் அதிகபட்சமாக ரூ.250 தள்ளுபடியைப் பெறலாம்.
* இந்த ஆஃபர் இந்த ஆண்டு இறுதி வரை அதாவது டிசம்பர் 31, 2021 வரை செல்லுபடியாகும்.

ALSO READ | செல்ல மகளுக்காக தினம் ₹416 சேமித்தால் போதும்; ₹65 லட்சம் பெறலாம்..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News