பாராளுமன்ற தேர்தலில் 7-வது மற்றும் கடைசி கட்ட ஓட்டுப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் நாட்டு மக்கள் அனைவரும் தங்களது வாக்குகளை முறையாக பதிவு செய்ய வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்!
நாடுமுழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. அந்த வகையில் இன்று வாரணாசி உள்பட 59 தொகுதிகளில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைப்பெற்று வருகிறது.
இன்றைய வாக்குபதிவை பொருத்தவரையில் பீகார் மாநிலத்தில் 8 தொகுதிகளிலும், ஜார்க்கண்ட்டில் 3 தொகுதிகளிலும், மத்திய பிரதேசத்தில் 8 தொகுதிகளிலும், பஞ்சாப் மாநிலத்தில் 13 தொகுதிகளிலும், மேற்குவங்காளத்தில் 9 தொகுதிகளிலும், உத்தரபிரதேசத்தில் 13 தொகுதிகளிலும், இமாச்சலபிரதேசத்தில் 4 தொகுதிகளிலும், சண்டிகர் உள்ளிட்ட 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
குறிப்பிட்ட இந்த 59 தொகுதிகளில் பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியும் அடங்கும். இந்த நிலையில் மோடி இன்று காலை தனது ட்விட்டர் பக்கத்தில் வாக்காளர்களுக்கு செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது.,
Today is the final phase of the 2019 Lok Sabha elections. I urge all those voting in this phase to vote in record numbers. Your one vote will shape India’s development trajectory in the years to come. I also hope first time voters vote enthusiastically.
— Chowkidar Narendra Modi (@narendramodi) May 19, 2019
"இன்று 2019-ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் கடைசி கட்ட ஓட்டுப்பதிவு நடக்கிறது. இந்த கடைசி கட்ட ஓட்டுப் பதிவில் அதிக அளவில் வாக்குப்பதிவு செய்து சாதனை படைக்க வேண்டும் என்று வாக்காளர்களை வலியுறுத்துகிறேன்.
உங்கள் ஒரு வாக்கு இந்தியாவின் வளர்ச்சியை வரும் ஆண்டுகளில் தீர்மானிக்கும். முதல் முறையாக வாக்களிக்கும் இளம் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களிப்பார்கள் என்று நானும் நம்புகிறேன்." என குறிப்பிட்டுள்ளார்.