இந்திய பொருளாதாரத்தை 5 லட்சம் கோடி டாலராக உயர்த்த உத்திர பிரதேச மாநிலம் வழி வகுக்கும் என மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக தலைவருமான அமித் ஷா பெருமிதம் தெரிவித்துள்ளார்!
உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் பல்வேறு தொழில்துறை திட்டங்களுக்கான முதலீடு திரட்டும் பொருளாதார மாநாடு நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் பாஜக தலைவர் அமித் ஷா, அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் ரூ.65 கோடி பொருளாதாரத் திட்டங்களுக்கான அடிக்கல்லை அமித் ஷா நாட்டினார். இதனை தொடர்ந்த மக்களின் பேசிய அமித் ஷா தெரிவிக்கையில்.,
"அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தி, உலகின் முதல் 3 இடங்களுக்குள் கொண்டுவர பிரதமர் மோடி இலக்கு வைத்துள்ளார். 5 லட்சம கோடி அமெரிக்க டாலர் கொண்ட பொருளாதாரமாக நாட்டை மாற்றுவதை இலக்காக வைத்திருக்கின்றார்.
5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக இந்தியா மாறுவதற்கு உத்தரப்பிரதேசம்தான் வழி ஏற்படுத்திக் கொடுக்கும். உத்தரப்பிரதேசத்தில் இருந்து மட்டும் ஒரு லட்சம் கோடி டாலர் பொருளாதாரத்துக்கு வழங்கும் என நம்புகிறேன்" என தெரிவித்தார்.
உத்தரப்பிரதேசத்தின் வளர்ச்சிக்கு மாநில அரசுடன், மத்திய அரசும் சேர்ந்து உறுதிபூண்டுள்ளது என்பதை முதலீட்டாளர்களுக்கு உறுதிதெரிவிக்கிறேன். கண்களை திறந்து வைத்து கனவு காண்பவர்கள், கனவு நனவாகும்வரை தூங்கமாட்டார்கள் என்று பிரதமர் மோடி கூறுவார் எனவும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் உத்தரப்பிரதேசத்தில் முதல்வர் ஆதித்யநாத் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளார். கடந்த இரு ஆண்டுகளில் சட்டம் ஒழுங்கில் பல்வேறு மாறுதல்களையும், அதிரடியான நடவடிக்கைகளையும் எடுத்து முதலீட்டாளர்களுக்கு இருந்த தடையை நீக்கியுள்ளார்.
சட்டம் ஒழுங்கு சூழல் மோசமாக இருக்கும் வரை வளர்ச்சிக்கு இடமில்லை. நான் எந்த அரசாங்கத்தையும் பெயர் குறிப்பிட்டு கூற விரும்பவில்லை, ஆனால் இங்குள்ள நிர்வாகம் மிகவும் அரசியலாக்கப்படுகிறது. ஆனால், இப்போதுள்ள பாஜக அரசின் உண்மையான அர்ததம் மக்களுக்கு சேவை செய்யும் அரசு என பெருமிதம் தெரிவித்தார்.