Assembly Election News In Tamil: மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலுங்கானா மற்றும் மிசோரம் (Madhya Pradesh, Chhattisgarh, Rajasthan, Telangana and Mizoram) என ஐந்து மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு, அந்தந்த மாநிலத்திற்கான முதல்வர்கள் தேர்வு செய்யும் பணியில், பெரும்பான்மை பெற்ற கட்சி ஈடுபட்டு வரும் நிலையில், முதல் மாநிலமாக தெலுங்கானாவின் முதல்வர் யார் என்பதை குறித்து காங்கிரஸ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ஐந்து மாநிலங்களில், தெலுங்கானாவில் புதிய அரசாங்கம் டிசம்பர் 7 ஆம் தேதி பதவியேற்கவுள்ளது. அதேசமயம், டிசம்பர் 8 ஆம் தேதி மிசோரமில் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
தெலுங்கானா, மிசோரம் மாநிலத்தில் பதவியேற்பு விழா ஏற்பாடு
ஐந்து மாநிலங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அதில் தெலுங்கானா மற்றும் மிசோரம் மாநிலத்தில் பதவியேற்பு விழாக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. ஆனால் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் என மூன்று மாநிலங்களில் பெரும்பான்மை பெற்ற பாரதிய ஜனதா கட்சி (Bharatiya Janata Party) ஆட்சி அமைப்பதில் என்ன சிக்கல் என்பது பெரிய கேள்வியாக எழுந்துள்ளது. இந்த கேள்விக்கு பதிலளிக்காமல் பாஜக மேலிடம் தவிர்த்து வருகிறது, ஆனால் அதன் பின்னணியில் உள்ள காரணம் என்ன? விவரமாக அறியலாம்.
முதல்வர் பெயரை அறிவிக்க பாஜக ஏன் தாமதம் செய்கிறது?
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பாஜக பெரும்பான்மை பெற்று இங்கு ஆட்சி அமைக்க வேண்டும், ஆனால் தேர்தல் முடிவுகள் வெளியாகி மூன்று நாட்கள் ஆகியும் முதல்வரின் பெயரை அக்கட்சியால் தீர்மானிக்க முடியவில்லை. இதற்கு முக்கிய காரணம், இம்முறை தேர்தலில் முதல்வர் யார் என்பதை அறிவிக்காமல் அக்கட்சி போட்டியிட்டது தான்.
மத்திய பிரதேசத்தில் தற்போதைய முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மற்றும் சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தின் முன்னாள் முதல்வர்கள் (ராமன் சிங் மற்றும் வசுந்தரா ராஜே) ஆகியோர்களிடமிருந்து பஜாக் மேலிடம் விலகி இருந்தது. அதாவது அவர்களை முதல்வராக்க கட்சிக்கு விருப்பம் இல்லை என்பது பாஜக வட்டாரத் தகவல்.
இது தவிர, சட்டமன்றத் தேர்தலில் எம்எல்ஏ தேர்தலுக்காகவும் கட்சி தனது எம்.பி.க்கள் பலரையும் நிறுத்தியது. அவர்களில் பெரும்பாலோர் வெற்றி பெற்றுள்ளனர். மூன்று மாநிலங்களிலும் பாஜகவுக்கு முன்னால் பல முக்கியத் தலைவர்களின் பெயர்கள் உள்ளன. அதில் ஒன்றை முடிவு செய்வது அவ்வளவு எளிதானது அல்ல.
பாரதிய ஜனதா கட்சிக்கு முன் உள்ள சவால் இதுதான்
கடந்த 10 வருடம் அரசியல் உற்று நோக்கினால், பாரதிய ஜனதா கட்சியை பொறுத்தவரை பொதுவாக விரைவான மற்றும் கடினமான முடிவுகளை எடுப்பதில் பெயர் பெற்றது. ஆனால் இந்த மூன்று மாநிலங்களில் முதல்வரின் பெயரை முடிவு செய்ய கட்சி அதிக நாட்கள் எடுத்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் உள்கட்சி பூசல் மற்றும் வாக்கு வங்கி மீது இருக்கும் கவனம். இதுபற்றி கட்சியினர் எதுவும் வெளிப்படையாக கூறாமல் தவிர்த்தாலும், கடந்த சில நாட்களாக வெளிவரும் தகவல்கள் மூலம் தெரிகிறது.
ராஜஸ்தான் முதல்வர் தேர்வு செய்வதில் ஏன் தாமதம்?
முதலாவதாக, ராஜஸ்தானைப் பற்றி பேசினால், இங்கு முதல்வர் பதவிக்கான போட்டியில் தியா குமாரி, பாபா பாலக்நாத், கிரோரி லால் மீனா ஆகியோரின் பெயர்கள் முன்னணியில் இருந்தன. இதற்கிடையில், வசுந்தரா ராஜே குழு முதல்வர் போட்டியில் தீவிரமாக களம் இறங்கியது மற்றும் பல எம்எல்ஏக்கள் வசுந்தரா ராஜேவை சந்திக்க வந்தனர். வசுந்தரா ராஜேவை முதல்வராக்க வேண்டும் என்று ஏராளமான தொண்டர்கள் விரும்புகின்றனர். ஆனால் கட்சி அதற்கு ஆதரவாக இல்லை.
அதே நேரத்தில், வசுந்தரா ராஜேவுக்கு முதல்வர் பதவி அளிக்கவில்லை என்றால், ராஜஸ்தானில் வசுந்தரா ராஜே மற்றும் அவரது ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தலாம். இதன் காரணமாக ராஜஸ்தானில் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என மேலிடம் கருதுகிறது.
மேலும் படிக்க - அடுத்த முதல்வர் யார்? மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான்.. சண்டை ஆரம்பம்!
மத்தியப் பிரதேசம் முதல்வர் தேர்வு செய்வதில் ஏன் தாமதம்?
மத்தியப் பிரதேசத்தைப் பற்றி பேசுகையில், இங்கு பாஜக பெரும் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இதற்கு முக்கியக் காரணமாக முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுக்கும், அவரது நலத்திட்டங்கள் தான் என பார்க்கப்படுகிறது. ஆனால் பாஜக ஆரம்பத்தில் இருந்தே சிவராஜ் சிங் சவுகானிடமிருந்து விலகி இருந்தது. அவரை முதல்வராக்க கட்சிக்கு விருப்பம் இல்லை.
ஆனால் வேற யாருடைய பெயரையாவது முதல்வர் பதவிக்கு பரிந்துரைத்தால் சிவராஜ் ஆதரவாளர்கள் அதிக அளவில் கோபப்படுவார்கள் என்பது தான் முன் உள்ள சவால். இது தவிர, ஜோதிராதித்ய சிந்தியா, கைலாஷ் விஜயவர்கியா, நரேந்திர சிங் தோமர் மற்றும் பிரஹலாத் சிங் போன்றவர்கள் முதல்வர் போட்டியில் இருப்பதால், முதல்வரை தேர்வு செய்யும் விவக்காரம் சிக்கலானதாக மாறியுள்ளது.
சத்தீஸ்கர் முதல்வர் தேர்வு செய்வதில் ஏன் தாமதம்?
சத்தீஸ்கர் மாநிலத்திலும் இதே கதைதான். முன்னாள் முதல்வர் ராமன் சிங்குக்கு எந்த வாய்ப்பும் கொடுக்க கட்சி விரும்பவில்லை. இங்கும் மூன்று பெயர்கள் முதல்வர் போட்டியில் உள்ளன. ஆனால் மாநிலத்திற்கு பழங்குடியின சமூகத்தை சேர்த்த ஒருவருக்கு முதல்வர் பதவி தருவதாக தேர்தல் பிரச்சாரத்தின் போது பாஜக வாக்குறுதி அளித்தது. இத்தகைய சூழ்நிலையில், 2024 மக்களவைத் தேர்தலிலும் பழங்குடியினரின் வாக்குகளைப் பெற, பழங்குடியினரின் சமூகத்தை சேர்ந்த ஒருவரை முதல்வராக போட கட்சி மேலிடம் ஆலோசனையில் உள்ளது.
பழைய பெயர்கள் வேண்டாம் - பாஜக திட்டவட்டம்
முதல்வர் பெயரை அறிவிப்பதில் காலதாமதம் ஏற்படுவதற்கு மற்றொரு காரணமும் இருக்கிறது. பாஜக மேலிடம் பழைய பெயர்கள் எதிலும் பந்தயம் கட்ட விரும்பவில்லை என்பதும் ஒரு காரணம். அது சிவராஜ் சிங் சவுகானாக இருந்தாலும் சரி, வசுந்தரா ராஜே மற்றும் ராமன் சிங்காக இருந்தாலும் சரி. இவர்கள் மூவரும் நீண்ட காலமாக மாநில முதல்வர்களாக இருந்துள்ளனர். கட்சி இப்போது புதிய அணியை தயார் செய்ய விரும்புகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ