புதுடெல்லி: ஆலயம் மற்றும் கோவில் நிலத்திற்கு உரிமையாளர் பூசாரியா? அல்லது தெய்வமா? இதுவே வழக்கின் சாரம்சம். இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முக்கிய தீர்ப்பை வழங்கியிருக்கிறது
புதுடெல்லி: சிவன் சொத்து குல நாசம் என்பது வழக்கில் இருக்கும் மொழி. ஆனால், ஆலயத்தின் சொத்து யாருடையது என்று கேட்டால், அந்தக் கோவிலில் குடி கொண்டிருக்கும் தெய்வத்திற்கு உரியது என்று சொல்வோம். ஆனால், விசித்திரமான வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்ற அமர்வு அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
கோவில் மற்றும் அதன் நிலத்தின் உரிமையாளர் யார் என்ற வழக்கு அது. ஆலயம் மற்றும் கோவில் நிலத்திற்கு உரிமையாளர் பூசாரியா? அல்லது தெய்வமா? இதுவே வழக்கின் சாரம்சம்.
ALSO READ | ஆலய வழிபாடு செய்வதன் தாத்பர்யம் என்ன தெரியுமா?
இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, "பூசாரி தெய்வத்தின் சொத்தை நிர்வகிப்பதற்கான ஒரு பணியாளர் தான். மேலும் பூசாரி தனது கடமைகளை சரிவரச் செய்யத் தவறினால், நிலத்தை நிர்வகிக்கும் பொறுப்பில் இருந்து அவரை மாற்ற முடியும்" என்று கூறியது.
கோவிலின் பூசாரியை நிலத்தின் உரிமையாளராக கருத முடியாது என்றும், கோவிலுடன் இணைந்த நிலத்தின் உரிமையாளர் தெய்வம் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. 'பூசாரி' என்பது கோவிலின் சொத்து, நிலம் தொடர்பான பணிகளை நிர்வகிக்கும் நோக்கத்திற்காக செயல்படுபவர் மட்டுமே என்று நீதிமன்றம் உறுதிபடுத்தியுள்ளது.
"தெய்வத்தின் பெயரை மட்டுமே உரிமையாளர் என்ற இடத்தில் எழுத வேண்டும், ஏனெனில் தெய்வம் தான் நிலத்தின் நியாயமான உரிமையாளர். தெய்வம் தான் குறிப்பிட்ட நிலத்தை ஆக்கிரமித்துள்ளது. கடவுளின் சார்பாக ஊழியர்கள் அல்லது மேலாளர்களால் கோவில் நிர்வாகம் செய்யப்படுகிறது. எனவே, உரிமையாளர் என்ற பெயரில் மேலாளர் அல்லது பூசாரியின் பெயரை குறிப்பிட தேவையில்லை."
ALSO READ | ஆலயம் செல்வதால் அறிவியல் ரீதியாக மனிதனுக்கு கிடைக்கும் நன்மைகள்
மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக மாநில அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம், மாநில அரசு அனுப்பிய இரண்டு சுற்றறிக்கைகளை ரத்து செய்திருந்தது. அதை எதிர்த்து மாநில அரசு மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தது.
அப்படி என்ன சுற்றறிக்கைகளை உயர் நீதிமன்றம் ரத்து செய்திருந்தது? கோவில் சொத்துக்களை பூசாரிகள் முறைகேடாக விற்பனை செய்வதை தவிர்ப்பதற்காக, 'MP Law Revenue Code' 1959 என்ற சட்டத்தின் கீழ், வருவாய் பதிவேடுகளிலிருந்து பூசாரிகளின் பெயரை நீக்க உத்தரவிட்ட சுற்றறிக்கைகள் அவை.
மத்தியப் பிரதேச அரசின் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பில், பூசாரியான மூருஷி என்பவர் குத்தகைதாரர், கோவில் நிலத்தில் விவசாயம் செய்பவரோ, அல்லது அரசு குத்தகைதாரரோ அல்ல என்பது ஆவணங்களின்படி தெளிவாக உள்ளது. கோவில் தேவஸ்தானத்தால் அவருக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் அவருடைய உரிமையானது, நிர்வாகம் செய்வதற்காக மட்டுமே என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துவிட்டது.
ALSO READ | அயோத்தி ராமர் ஆலயம் கட்ட ஆகும் செலவு என்ன தெரியுமா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR