Viral Video: மாஸ்க் போட சொன்ன பெண்! கேஸ் போட்ட போலீஸ்!

பொதுமக்களிடையே முக கவசம் அணிவது மற்றும் சிவப்பு விளக்கு ஒளிர்ந்தால் வாகனங்களை நிறுத்துவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒரு இளம் பெண் நடுரோட்டில்  நடமாடினார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 17, 2021, 12:35 PM IST
Viral Video: மாஸ்க் போட சொன்ன பெண்! கேஸ் போட்ட போலீஸ்! title=

இந்தூர் :  மத்தியப் பிரதேசத்தின்  இந்தூர் நகரின் ராசோமா சதுக்கம் என்ற சாலை எப்போதும் பரபரப்பாக இயங்கும் ஒரு சாலையாகும். அங்கு சிக்னல் போட்ட உடனே ஒரு இளம் பெண் திடீரென்று தோன்றி நடுரோட்டில்  நடமாடினார்.

அந்த பெண்ணுடன் இருந்த நபர் ஒருவர், அந்த பெண்ணின் நடனத்தை வீடியோவாக எடுத்தார். விளக்குகள் மீண்டும் பச்சை நிறமாக மாறும் வரை சிக்னலில் அந்த பெண் நடனமாடினார்.  மேலும் தனது நடனம் மூலம் முகக்கவசம் அணியுமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.இவரின் நடனம் வாகன ஓட்டிகளை பெரிதும் கவர்ந்த நிலையில் அவர்களும் வீடியோ எடுத்தனர்.  இந்த நடனம் போக்குவரத்தை கட்டுப்படுத்த மற்றும் வழிகாட்ட தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்றால் இந்தூர் காவல்துறையால் ஏற்பாடு செய்யபட்ட பிரச்சாரம் ஆகும்.

எனினும் இந்த வீடியோ வைரலான நிலையில் போக்குவரத்து விதிமீறலுக்கான நோட்டீஸை அதிகாரிகள் அந்த பெண்ணுக்கு வழங்கியுள்ளனர். வாகன ஓட்டிகளுக்கு, பொதுமக்களுக்கும் தீங்கு விளைவிக்காத பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை மட்டுமே செய்யுமாறு போக்குவரத்து போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.  விசாரணையின் போது அந்த பெண் 'ஸ்ரேயா கல்ரா' என்ற மாடல் அழகி என்பது தெரியவந்துள்ளது.  போக்குவரத்து விதிகளை மீறியதாக தன் மீது எழுந்துள்ள குற்றத்தை முழுவதுமாக மறுத்துள்ளார்.

indur

பொதுமக்களிடையே முக கவசம் அணிவது மற்றும் சிவப்பு விளக்கு ஒளிர்ந்தால் வாகனங்களை நிறுத்துவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தான் இதனை செய்ததாக விளக்கம் அளித்துள்ளார்.  எனினும் இந்த வீடியோவா தற்போது டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வளைத்தளங்களில் மட்டுமின்றி செய்தி சேனல்களிலும் ஒளிபரப்பு செய்யப்படுவதால் எண்ணற்ற விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News